13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் ஓனர்!

Written By:

பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனை தொடர்பாக பல்வேறு செய்திகளை தினமும் கடந்து வருகிறோம்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் , பெட்ரோல் பங்கில் அவருக்கு நடந்த சம்பவத்தை பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது வைரலாகியுள்ளது.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

இந்தியாவில் மொத்தம் 50 லட்சம் முறையான வாகனங்கள் இயங்கி வருவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அனைத்து வாகனங்களுக்கும் எரிவாயு தேவையும் அவசியமாகிறது.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

வாகனங்களின் எரிவாயு தேவைகளை பயன்படுத்திகொண்டு, பெட்ரோல், டீசல்-களுக்கான பங்க்-குகள் இங்கு பெரிய சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

அப்படியிருக்க, வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு நிரப்புவதில் பல முறைகேடுகளில் பெட்ரோல் பங்குகள் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

டிஜிட்டல் மீட்டர்கள் குறிப்பிட்ட லிட்டர் கணக்கை காட்டினாலும், அந்தளவிற்கான லிட்டரில் தான் நாம் எரிவாயுக்களை வாகனங்களில் நிரப்பி செல்கிறோமா என்பது சந்தேகமே.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

பெட்ரோல் பங்குகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பல்வேறு வழக்குகள் பதியப்பட்டாலும், அதில் பலனிருக்கிறதா? என்பதும் விவாதத்திற்குரியது தான்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

ஹைதராபாத்தை சேர்ந்த டேவிட் குமார் என்பவர், பெட்ரோல் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை புகைப்பட ஆதாரங்களுடன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட, அதுதான் இன்று இணையத்தின் வைரல்.

Trending On Drivespark:

13 லிட்டர் டேங்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர்... ஃபேஸ்புக்கில் வச்சு செஞ்ச பைக் உரிமையாளர்!

'தேவசேனா' அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்த 'பாகுபலி' பிரபாஸ்..!!

டாடா நெக்ஸான் காரின் தயாரிப்பு பணிகள் இருமடங்காக அதிகரிப்பு... காரணம் இதுதான்..!!

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

அவரது இந்த பதிவு கிட்டத்தட்ட 3500 லைக்ஸ் மற்றும் 8800 முறை மற்றவர்களால் பகிரப்பட்டுள்ளது. மேலும் இது பல பெட்ரோல் நிலையங்களின் மீது வாடிக்கையாளர்களை சந்தேகமடைய செய்துள்ளது.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

கடந்த 7ம் தேதி டேவிட் குமார் தனது பைக்கிற்கு வழக்கம் போல பெட்ரோல் போட ஹைதராபாத் 'யூசஃப் நூடா' பகுதியில் உள்ள ஒரு பங்கிற்கு சென்றுள்ளார்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

டேவிட் குமார் பயன்படுத்துவது ஹோண்டா யூனிக்கார்ன் பைக். இதனுடைய எரிவாயு கொள்ளவு அதிகப்பட்சம் 13 லிட்டர்கள் தான் என்பது நம்மில் பலருக்கு தெரியும்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

ஆனால் பெட்ரோல் நிலைய பணியாளர் மொத்தம் 16.95 லிட்டர் பெட்ரோலை டேவிட் குமார் பயன்படுத்திய யூனிக்கார்ன் பைக்கிற்கு போட்டுள்ளார்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டேவிட் குமார், டிஜிட்டல் மீட்டரை பார்த்த போது அது 16.95 லிட்டர் என்ற அளவுக்கோளை தான் காட்டியது.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

பங்க் பணியாளரும் டேவிட்டிற்கு 16.95 லிட்டர் என்று குறிப்பிட்டு, அதற்கான பணத்தை ரிசிப்புடன் நீட்டினார்.

உடனே டிஜிட்டல் மீட்டரின் அளவு மற்றும் பெட்ரோல் பங்க் ரிசிப்ட்டை தனது மொபைலில் படம்பிடித்துக்கொண்டார் டேவிட்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

ஆதாரங்களை பதிவு செய்த பிறகு, பெட்ரோல் பங்கின் முறைகேடு தொடர்பாக அங்கே கேள்வி எழுப்பிய போது யாரும் சரியாக டேவிட்டிற்கு பதிலளிக்கவில்லை.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

வீட்டிற்கு வந்த டேவிட் குமார் பெட்ரோல் பங்கில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் மீட்டரின் விவரம் ஆகியவற்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

மேலும் 13 லிட்டர் அளவுக்கொண்ட டேங்கில் 16.95 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக கூறி, 'யூசஃப் நூடா' பெட்ரோல் பங்க் லிட்டருக்கு சுமார் 200 மிமீ பெட்ரோலை தன்னிடமிருந்து ஏமாற்றியுள்ளதாக பதிவில் குறிப்பிட்டார்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

பதிவிட்ட சில நிமிடங்களில் வைரலான இந்த செய்தி, இணையதளங்களில் வைரலாகி பரவியது. மேலும் பல ஊடங்கள் இந்த புகைப்படங்கள் மற்றும் சம்பவத்தை வைத்து செய்திகளை வெளியிட்டன.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

டேவிட் குமார் சந்தித்த அனுபவம் போன்று பலரும் சந்தித்துள்ளதாக கூறி, அவரது பதிவிற்கு கீழ் கமெண்டுகளை குறிப்பிட்டு வந்தனர்.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

நீங்கள் வழக்கமாக செல்லும் பெட்ரோல் பங்கை தவிர்த்து புதிய நிலையம் சென்றால், முதலில் ஒரு பிளாஸ்டிக் பாட்டலில் பெட்ரோல் வாங்கி சோதனை செய்வது நல்லது.

யூனிகார்ன் பைக்கிற்கு 17 லிட்டர் பெட்ரோல் போட்ட பங்க்..!!

வணிக முறை ஆகிவிட்ட இந்த உலகில், டிஜிட்டல் என்ற வார்த்தையே அச்சமாக மாறிவருகிறது. டிஜிட்டல் மீட்டருக்கும், அது காட்டும் லிட்டர் அளவுகோளுக்கும் மத்தியில் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் வேறு.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Petrol Bunk Fraud at Hyderabad reveled by Young Man. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark