பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி

பெட்ரோல் பங்க் ஊழியர்களின் அதிர வைக்கும் மோசடி தொடர்பான தகவல்களை, உங்கள் விழிப்புணர்விற்காக இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் செய்து வரும் முறைகேடுகளால், வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுகிறது. கலப்படம் போன்ற மோசடிகள் மட்டுமல்லாது, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பியும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இந்த வகையில் பெட்ரோல் பங்க்குகளில் நடைபெற்று வரும் ஒரு மோசடியை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு முறை பார்த்தால், இது உங்களுக்கு சிறு தொகையாக மட்டும் தெரியலாம். ஆனால் ஒரு ஆண்டுக்கு என எடுத்து கொண்டால், இந்த மோசடியின் மூலம் நீங்கள் பல ஆயிரங்களை இழந்திருப்பீர்கள்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. எனவே இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பொதுவாக நீங்கள் பெட்ரோல் பங்க்கில் நுழைந்தவுடன், உங்கள் காருக்கு 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க சொல்கிறீர்கள் என வைத்து கொள்வோம்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர் வெறும் 200 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்புவார். உடனே ஏன் 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பவில்லை என நீங்கள் கேட்டால், வெகுளித்தனமான ஒரு சிரிப்பை பெட்ரோல் பங்க் ஊழியர் உதிர்ப்பார். அத்துடன் எனக்கு 200 ரூபாய் என்றுதான் கேட்டது எனவும் கூறுவார். மேலும் எஞ்சிய 800 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விடுவதாகவும் உங்களிடம் கூறுவார்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இதனால் நீங்களும் சமாதானம் அடைந்து விடுவீர்கள். இதன்பின் அவரும் மீதி 800 ரூபாய்க்கான பெட்ரோலை நிரப்பி விடுவார். பின்னர் நீங்கள் 1,000 ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விடுவீர்கள். சரி, இதில் என்ன மோசடி நடைபெறுகிறது? என நீங்கள் நினைக்கலாம். பெட்ரோல் பங்க் ஊழியர் குறைவான தொகைக்கு எரிபொருள் நிரப்பியதன் பின்னணியில்தான் அந்த மோசடியே உள்ளது.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

அதாவது 200 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிய பிறகு அவர் மீட்டரை 0-க்கு ரீ-செட் செய்திருக்கவே மாட்டார். 200 ரூபாய்க்கான பாயிண்ட்டில் இருந்தே தொடங்கி 800 ரூபாய் வரை செல்வார். எனவே நீங்கள் 800 ரூபாய்க்கான பெட்ரோலை மட்டுமே பெற்றிருப்பீர்கள். ஆனால் 1,000 ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்திருப்பீர்கள். இதில் உங்களுக்கு 200 ரூபாய் நஷ்டம்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

மீட்டரை மீண்டும் 0-க்கு ரீ-செட் செய்வதாக கூறி விட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் நகரும் நேரத்தில், மற்றொரு ஊழியர் அனாவசியமாக உங்களிடம் பேச்சு கொடுத்து உங்களின் கவனத்தை திசை திருப்புவார். அதாவது ''சார் கேஷா? கார்டா? அல்லது சார் இந்த கூப்பனை நிரப்புங்கள்'' என்பது போன்று அவர் உங்களிடம் பேசுவார்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இப்படியான கேள்விகள் வரும்போது சாதாரண மனித இயல்பின்படி நாம் உடனே திரும்பி விடுவோம். இதற்கு பதில் அளிப்பதற்கோ அல்லது அவர் சொல்வதை கேட்பதற்கோ குறைந்தது 3-4 வினாடிகள் ஆகும். அதற்குள் மற்றொரு ஊழியர் மீட்டரை ஸ்டார்ட் செய்து உங்கள் காரில் பெட்ரோலை நிரப்பி கொண்டிருப்பார். நீங்கள் திரும்ப மீட்டரை பார்க்கும்போது, 300-400 ரூபாய் என காட்டி கொண்டிருக்கும்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

எனவே மீட்டர் ரீ-செட் செய்யப்பட்டு மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து நிரப்பப்படுகிறது என நீங்கள் நினைத்து கொள்வீர்கள். ஆனால் உண்மையில் மீட்டர் 200 ரூபாய் பாயிண்ட்டில் இருந்துதான் ஓட தொடங்கியிருக்கும். எனவே நீங்கள் 200 ரூபாயை பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் இழந்திருப்பீர்கள். எனவே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், மிகவும் கவனமாக இருங்கள்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

எப்போது எரிபொருள் நிரப்பினாலும், மீட்டர் 0-க்கு ரீ-செட் செய்யப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த பிறகே, உங்கள் வாகனத்தின் எரிபொருள் டேங்க் மூடியை ஓபன் செய்யுங்கள். நீங்கள் காரில் சென்றால், இறங்குவதற்கு சங்கப்பட்டு கொண்டு காருக்கு உள்ளேயே அமர்ந்திருக்க வேண்டாம். இது உங்களை ஏமாற்றுவதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விடும்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

எனவே எப்போதும் காரை விட்டு இறங்கி, எரிபொருள் நிரப்புபவருக்கு பக்கத்திலேயே நில்லுங்கள். உங்களை ஏமாற்ற முடியாதபடி அவருக்கு டஃப் கொடுங்கள். மேற்கண்ட மோசடி மட்டுமல்லாது பொதுவாக பெட்ரோல் பங்க்கில் ஏமாற்றப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அல்லது இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு உங்களால் புகார் அளிக்க முடியும்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இதற்கென இந்த நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்கள் உள்ளன. அத்துடன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு வெப் போர்ட்டல்களும் இருக்கின்றன. இதன் மூலமாக உங்கள் பிரச்னையை தெரிவித்தால், அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் நம்மில் பலரும் இந்த வசதிகளை பயன்படுத்துவது கிடையாது.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இதுதவிர பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் புகார் புத்தகத்தை பெற்று, அதில் எழுத்துபூர்வமாகவும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். ஆனால் நீங்கள் புகார் புத்தகத்தை கேட்டால், அந்த அறை பூட்டப்பட்டுள்ளது தற்போது எடுக்க முடியாது என்பது போன்ற சாக்குபோக்குகளை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நிச்சயம் சொல்வார்கள்.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

அவர்கள் அவ்வாறு கூறினால், கஸ்டமர் கேருக்கு கால் செய்து புகார் அளித்து விடுவேன் என கூறுங்கள். நாடு முழுக்க ஆயிரக்கணக்கான பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அங்கு தினந்தோறும் பல லட்சக்கணக்கானோர் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புகிறார்கள். அவர்களிடம் இதுபோல் பல்வேறு வழிகளில் மோசடி செய்யப்படுகிறது.

 பெட்ரோல் பங்க்கில் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி...

இதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்தால், உங்கள் கற்பனைக்கு எட்டாதபடி, பல கோடி ரூபாய்களுக்கு மோசடி நடக்கும். பெட்ரோல் பங்க் மோசடிகள் நீங்கள் நினைப்பது போல் சாதாரணமானது கிடையாது. எனவே இந்த தகவல் உபயோகமானதாக இருந்தால், உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள். அத்துடன் நீங்களும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How You Are Cheated At Petrol Bunk. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X