நீதிபதியிடமே வேலையை காட்டிய பெட்ரோல் பங்க்! ஒரே உத்தரவில் அத்தனை பேருக்கும் தண்ணி காட்டீட்டாரு! போட்றா வெடிய!

இந்தியாவில் அதிக முறைகேடுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாக பெட்ரோல் பங்க்குகள் (Petrol Bunks) கருதப்படுகின்றன. குறைந்த அளவு எரிபொருளை நிரப்புவது, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி பணத்தை ஏமாற்றுவது என பெட்ரோல் பங்க்குகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகின்றனர்? என்பதை ஆதாரத்துடன் விவரிக்கும் வீடியோக்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு பெட்ரோல் பங்க் மீது தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஒருவரிடமே முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுவதால் அந்த பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

நீதிபதியிடமே வேலையை காட்டிய பெட்ரோல் பங்க்! ஒரே உத்தரவில் அத்தனை பேருக்கும் தண்ணி காட்டீட்டாரு! போட்றா வெடிய!

பில்லை பார்த்ததும் ஆடி போயிட்டாரு!

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில், சமீபத்தில் நீதிபதி ஒருவர் காரில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார். இவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பெட்ரோல் பங்க்கிற்கு சென்றதும், அந்த காரின் டிரைவர் இறங்கி, எரிபொருள் நிரப்பும்படி அங்கிருந்த ஊழியரிடம் கூறியுள்ளார். அப்போது நீதிபதி, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். இறுதியாக பெட்ரோல் பங்க் ஊழியர் வழங்கிய பில்லை பார்த்ததும், நீதிபதி அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

அது எப்படி திமிங்கலம் இவ்ளோ போட்டாங்க?

57 லிட்டர் எரிபொருள் நிரப்பியதாக அந்த பில்லில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த காரின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவே வெறும் 50 லிட்டர்தானாம். ''எனது காரின் எரிபொருள் டேங்க்கில் 50 லிட்டர் மட்டுமே எரிபொருள் நிரப்ப முடியும். அப்படி இருக்கும்போது எப்படி 57 லிட்டர் எரிபொருள் நிரப்பினீர்கள்?'' என அங்கிருந்த ஊழியர்களிடம், நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கூடுதலாக 7 லிட்டர் எரிபொருளை நிரப்ப வாய்ப்பே இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிபதியிடமே வேலையை காட்டிய பெட்ரோல் பங்க்! ஒரே உத்தரவில் அத்தனை பேருக்கும் தண்ணி காட்டீட்டாரு! போட்றா வெடிய!

அப்படிப்போடு அருவாள!

இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? என்று தெரியாமல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முழித்துள்ளனர். எனவே உடனடியாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அந்த பெட்ரோல் பங்க்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது. நீதிபதியிடமே முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பெட்ரோல் பங்க் இழுத்து மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரொம்ப சந்தோஷம்யா!

நீதிபதியிடம் சிக்கிய பெட்ரோல் பங்க் மட்டுமல்லாது, அந்த பகுதியில் உள்ள மற்ற பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த கமிட்டி விசாரணை நடத்தவுள்ளது. எரிபொருள் வினியோகம் செய்யும் கருவிகள் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் இந்த கமிட்டி விசாரணை செய்யும். இந்த கமிட்டியில் 14 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் தொடர்ச்சியாக கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பண்ணீட்டா புண்ணியமா போகும்!

இங்கே பாதிப்பிற்கு உள்ளானவர் நீதிபதி என்பதால், அவரால் உடனடியாக விசாரணை நடத்த முடிந்தது. அத்துடன் நடவடிக்கையும் எடுக்க முடிந்தது. ஆனால் பெட்ரோல் பங்க்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளில் தினம் தினம் சாமானிய மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் புகார் அளித்தால், விசாரணைக்கு பின் தவறு இருக்கும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க கூடிய சூழல் வர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

வரிகள் (Tax) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை (Price) மிகவும் அதிகமாக இருப்பதால் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் (Diesel) நிரப்புவதற்கு அதன் உரிமையாளர்கள் மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மோசடிகளும் அரங்கேறுவதால், அவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதற்கு எல்லாம் நிரந்தரமாக முடிவு கட்டும் வகையில் அதிரடியான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2023, 11:07 [IST]
English summary
Petrol bunk sealed by judge here is why
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+