பெட்ரோலில் கலப்படம் இருக்குது! கலரை வச்சே கண்டுபிடித்த வாடிக்கையாளர்! வைரலாகும் வீடியோ

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் இருப்பதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் பங்க் நிறுவன ஊழியரிடம் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இது கலப்படமான பெட்ரோல் என வாடிக்கையாளர்கள் புகார் கூறுவதாக தெரிகிறது. இப்படியாக பெட்ரோல் நிறத்தை வைத்து தரத்தை அளவீடு செய்ய முடியுமா? பெட்ரோல் தரத்தை அளவிட்டு செய்வது எப்படி என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தென்காசியில் நகருக்குள்ளே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு அந்த பங்க் பெட்ரோல் தரத்தின் மீது சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக பங்கு ஊழியரிடம் சொல்லி ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு கண்ணாடி குவழையில் பிடித்துள்ளார். அப்பொழுது அந்த பெட்ரோலின் நிறம் பழுப்பு நிறமாக இருந்துள்ளது. இதை பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் காட்டி இது கலப்படமான பெட்ரோல் என புகார் கூறியுள்ளார்.

petrol color change viral video

அப்பொழுது பங்க் ஊழியர்கள் பெற்றோர்கள் எல்லாம் தற்போது எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வாடிக்கையாளர் குறிப்பிட்ட பெட்ரோல் கலப்படமான பெட்ரோல் எனவும் அது ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் இருப்பதாகவும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலர் ஆரஞ்சு ஜூஸ் நிறத்தில் பெட்ரோல் இருந்தால் அது கலப்படமான பெட்ரோல் என கருதி அதை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என நாம் ஆராய்ந்து பார்ப்போம். பெட்ரோலின் நிறத்தை வைத்து அதன் தரத்தை அளவீடு செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. பெட்ரோலின் தரமும் அதன் நிறமும் ஒன்றோடு ஒன்று எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல.

petrol color change viral video

உண்மையாக சொல்லப்போனால் பெட்ரோல் என்ற பொருள் தயாராகி வரும் போது அது எந்த இடத்திலும் இல்லாமல் தண்ணீர் போல இருக்கும் ஆனால் அதை தண்ணீரில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்ட அதில் சில கெமிக்கல்கள் கலக்கப்படுகிறது. அதன் மூலம் தான் பெட்ரோல் பழுப்பு நிற கலரில் நமக்கு தெரிகிறது. இதே போல் தான் மண்ணெவ்னையும் நீல நிறத்தில் இருப்பதற்கு அதில் சேர்க்கப்படும் கெமிக்கல் தான் காரணம்.

இதை வைத்துப் பார்த்தால் நமக்கு தெளிவாக பெட்ரோல் நிறத்தை வைத்து அதன் தரத்தை அளவீடு செய்ய முடியாது என்பது தெரிகிறது. மேலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பதாகவும் இந்த வீடியோவில் குற்றச்சாட்டு இருக்கிறது. இதைப் பற்றி பார்க்கும் போது இந்தியா முழுவதும் தற்போது 10 சதவீதம் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. அதை 20 சதவீதமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

petrol color change viral video

இதற்கு முன்பு இதே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்ட போது இதேபோல தரமான பெட்ரோல் போட வில்லை என்பதால் அவரது வாகனத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது எனக் கூறினார். குறிப்பிட்ட அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் தரமானத இல்லையா என்பதை இப்படியாக நிறத்தை வைத்தும் எத்ததனால் கலப்பை வைத்தும் நாம் கூறி விட முடியாது. 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்பது முற்றிலும் பரிசோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 10% எத்தனாலை கலந்த பெட்ரோலை எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இதனால் அந்த வாகனத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்பு தான் இந்த 10% எத்தனால் கலப்பு என்பது நடக்கிறது. சரி அப்படி என்றால் பெட்ரோலில் கலப்படம் இருக்கிறதா இல்லையா? என்பதை எப்படி தான் கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரு பரிசோதனை இருக்கிறது. பில்டர் பேப்பர் பரிசோதனை என அழைக்கிறார்கள்.

இதற்காக பெட்ரோல் பங்குகளிலேயே இந்த பில்டர் பேப்பர் என்பது கட்டாயம் இருக்கும். அந்த ஃபில்டர் பேப்பரை வாங்கி அதில் ஒரு சொட்டு பெட்ரோலை ஊற்றினால் அடுத்த இரண்டு நிமிடங்களில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். ஃபில்டர் பேப்பரின் நிறமும் மாறாமல் இருக்கும். அப்படி என்றால் குறிப்பிட்ட பெட்ரோல் எந்த கலப்படமும் இல்லாத தரமான பெட்ரோல் என அர்த்தம் ஆகும். கலப்படமான பெட்ரோல் இருந்தால் அந்த ஃபில்டர் பேப்பரில் நிறம் மாறிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் மூலம் நமக்கு பெட்ரோலின் நிறத்தை வைத்தோ அல்லது பெட்ரோலில் இருந்து வரும் வாசத்தை வைத்தோ பெட்ரோலின் தரத்தை நாம் அளவீடு செய்யவே முடியாது. இது போன்ற வீடியோக்களை நம்பி நீங்களும் பெட்ரோலின் தரத்தை சந்தேகப்பட்டு ஏமாறாதீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே சந்தேகம் இருந்தால் ஃபில்டர் பேப்பர் டெஸ்ட் செய்தால் அந்த சந்தேகம் தீரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 4, 2024, 15:50 [IST]
English summary
Petrol color change viral video customer fight for adulteration
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X