Petrol Diesel CNG வாகனங்களுக்கு மொத்தமா செக் வெச்சுட்டாங்க! ரோட்ல ஒரு வண்டி கூட ஓட கூடாது! அரசு மாஸ்டர் பிளான்
காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மிகவும் அதிரடியான உத்தரவு ஒன்றை அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது.
டாக்ஸி மற்றும் கேப் நிறுவனங்கள், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் போன்றவற்றுக்குதான், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும், 100 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதுதான் அரசின் புதிய திட்டமாக உள்ளது.

அதாவது பெட்ரோல் வாகனங்கள் (Petrol Vehicles), டீசல் வாகனங்கள் (Diesel Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) என அனைத்து வகையான வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது. அதற்கு பதிலாக இந்த நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்தை படிப்படியாக அமலுக்கு கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் 6 மாதங்களில், இந்த நிறுவனங்களின் 5 சதவீத வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். அதே சமயம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 9 மாதங்களில், அதாவது அடுத்த 3 மாதங்களில், இந்த நிறுவனங்களின் 15 சதவீத வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும்.

ஒரு வருட இறுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் ஆகவும், 2 வருட இறுதியில் 50 சதவீதம் ஆகவும், 3 வருட இறுதியில் 75 சதவீதம் ஆகவும் இருப்பது அவசியம். இறுதியில் வரும் 2030ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, இந்த நிறுவனங்களின் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். இதற்கு இணங்க மறுக்கும் நிறுவனங்களிடம் இருந்து கடுமையான அபராதம் வசூல் செய்யப்படவுள்ளது.
டெல்லி அரசின் போக்குவரத்து துறைதான் இந்த அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் விரிவான கொள்கை விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், ''டெல்லியில் வரும் 2030ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து டாக்ஸி மற்றும் கேப் நிறுவனங்கள், மற்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஏற்கனவே நாங்கள் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்து விட்டோம். இதை தொடர்ந்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறோம். இங்கு குறைவான கட்டணம் மட்டும் வசூல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு இல்லாத இடமாக டெல்லியை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது முக்கிய நோக்கம். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்ததன் மூலம் இந்த விஷயத்தில் ஏற்கனவே ஓரளவிற்கு நல்ல 'ரிசல்ட்' கிடைத்துள்ளது. வரும் காலங்களில் டெல்லியில் காற்றின் தரம் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அரசு அதிகரித்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை (Price) மிகவும் அதிகமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனை செய்யப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications








