பால், நாளேடுகள் போல இனி வீட்டு வாசலுக்கே வந்து டெலிவிரி செய்யப்படும் பெட்ரோல்..!

ரூபாய் நோட்டுகளின் மீது கட்டுபாட்டை விதித்ததை அடுத்து, மத்தியரசு பல்வேறு முயற்சிகளை நுகர்வோர் நலனுக்காக மேற்கொண்டு வருகிறது. அது ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்.

By Azhagar

பால், தினசரி நாளிதழ்கள் போல பெட்ரோலும் இனி நமது வீட்டு வாசலுக்கே நேரடியாக தரப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எண்ணைத் துறைக்கான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

நுகர்வோரின் வசதிக்காக பல்வேறு செயல்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயுவிற்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, அதற்கான நெருக்கடியை போக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

அனைத்து எரிவாயு நிலையங்களிலும், பெட்ரோல் மற்றும் டீசலிற்காக பல மணிநேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பங்குகளில் எப்போதும் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

இதை களைய பெட்ரோலிய அமைச்சகம் புதிய வசதிகளை பயனிகளுக்காக உருவாக்கியுள்ளது. இதன்மூலம், எரிவாயுவின் தேவையை ஆன்லைனில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால். நீங்கள் குறிப்பிட்ட ஒரு மணிநேரத்தில் பெட்ரோலுடன் டெலிவிரி செய்பவர் உங்கள் கதவை தட்டுவார்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

தினசரியாக நமது வீட்டிற்கு நேரடியாகவே வந்து வழங்கப்படும் பால், நாளிதழ் போன்று இந்த சேவை இருக்கும். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், பெட்ரோல் பங்குகளில் தேவை இல்லாத அலைச்சல் மிச்சமாவதோடு, வேலைவாய்ப்பும் உயரும்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

பெட்ரோலை அதிகளவில் பிடிக்கும் எஸ்.யூ.வி போன்ற வாகனங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது. அதனுடைய சக்கரத்தில் மினி பெட்ரோல் பம்புகள் இணைக்கப்பட்டு, அதன்மூலம் வீட்டிலிருந்து ஆன்லைன் புக்கிங் செய்பவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படும்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

பொதுவாக எஸ்.யூ.விக்கள் அனைத்தும் 80 முதல் 90 லிட்டர் பெட்ரோலை இடம்பெறும் அளவிலான டேங்குகளை பெற்றவை. அதிலிருந்து 4 முதல் 5 லிட்டர் பெட்ரோல் வரை சக்கரத்திலிருக்கும் மினி பம்புகளை வைத்து, நுகர்வோருக்கு பெட்ரோல் அல்லது டீசல் வழங்கப்படும் என அமைச்சர் தர்மேதிர பிரதான் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

சக்கரங்களில் பெட்ரோல் பம்புகள் அமைக்கப்படுவது குறித்த பாதுகாப்பை விளக்கிக்கூறிய தர்மேந்திர பிரதான், பெட்ரோல் மற்றும் வெடிப்பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்து தரும் அமைப்புகளை வைத்து எஸ்.யூ.வின் சக்கரத்தில் இருக்கும் பெட்ரோல் பம்புகளின் பாதுகாப்பு திறனை மதிப்படு செய்யப்படும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

மேலும் தற்போது சாலைகளில் ஓடக்கூடிய எஸ்.யூ.வி கார்கள் அனைத்தும் சோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு வருகின்றன. அதேபோல மினி பெட்ரோல் பம்புகளுக்கான சோதனையும் இருக்கும் என்று கூறினார் தர்மேந்திர பிரதான்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

இதுகுறித்த அறிவிப்பை காஷ்மீரின் ஸ்ரீநகரின் அலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய முடித்த பின் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க அரசு மத்தியில் பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையால் நுகர்வோர் நலன் சார்ந்து வெளியிடப்பட்ட முதல் அறிவிப்பு இதுவே ஆகும்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளுக்கான தேவை மட்டுமில்லாமல், எல்.பி.ஜி / சி.என்.ஜி போன்ற கேஸ்களையும் கணக்கிட்டே இந்த சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டிஜிட்டல் புக்கிங் சேவையை அரசு உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

இந்த புதிய திட்டத்தின் மூலம், நுகர்வோர் பயனடைவதுடன், முன்பேர் குறிப்பிட்டது போல பல தொழில்சார்ந்த வளர்ச்சியும் இருக்கும். குறிப்பாக கிராம்பபுற பகுதிகளில் டிராக்கடர்களுக்கு பெட்ரோல் வேண்டுமென்றால் விவசாயிகள் நெடுஞ்சாலைக்கு வந்து தான் பங்குகள் மூலம் பெட்ரோல் பெற முடியும்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

தற்போது வீட்டிற்கே வந்து பெட்ரோல் வழங்கக்கூடிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த சிரமங்கள் களையபட்டு, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீரும். மேலும் இந்த சேவையால் அனுமதியின்றி பெட்ரோல் டீலிங் செய்யும் நடைமுறையும் நிவர்த்தி அடையும்.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

தேசியளவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், கார்டுகள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.150 கோடியாக இருந்த காசில்லா பரிவத்தனை, பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்த பின் ரூ.400 கோடியாக உயர்ந்து விட்டது. இதை அடிப்படையாக வைத்து அனைத்து துறைகளிலும் மத்திய அரசு காசில்லா பரிவத்தனையை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி; காரணம் இதுதான்

இந்தியாவிலுள்ள பெட்ரோல் பங்குகளில் 86 சதவீதம் டிஜிட்டல் பரிவத்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை 100 சதவீதமாக மாற்ற 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களை நாடு முழுவதும் அரசு முன்னெடுக்க வேண்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Soon, we could get petrol, diesel delivered at home. click for details...
Story first published: Saturday, April 22, 2017, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X