ஓட்டுக்காக தரமட்டத்துக்கு இறங்கிய மோடி! பெட்ரோல், டீசல் விலை இவ்ளோ குறைய போகுதா! அப்ப மறுபடியும் பாஜகதான்!
இந்தியாவில் தெலங்கானா (Telangana), மத்திய பிரதேசம் (Madhya Pradesh), ராஜஸ்தான் (Rajasthan), சட்டீஸ்கர் (Chhattisgarh) மற்றும் மிசோரம் (Mizoram) ஆகிய 5 மாநிலங்களுக்கு கூடிய விரைவில் சட்டசபை தேர்தல் (Assembly Elections) நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து 2024ம் ஆண்டு மத்தியில் லோக்சபா தேர்தலும் (2024 Lok Sabha Election) நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக (BJP), காங்கிரஸ் (Congress) மற்றும் திமுக (DMK) உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளன. இதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக வாக்குகளை கவரும் நோக்கத்தில், விலை குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய 14.2 கிலோ எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை (LPG Gas Cylinder Price) சமீபத்தில் 200 ரூபாய் குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டீக்கடை போன்ற இடங்களில் வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடிய 19 கிலோ வர்த்தக எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையும் 158 ரூபாய் குறைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இதற்கு பின்னால் உள்ள தேர்தல் கணக்குகளை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற மற்றும் 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலையையும் மத்திய அரசு குறைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறையலாம் என தெரிகிறது. இதை விட அதிகமாக குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சரி, இந்த விலை குறைப்பு எப்போது அமலுக்கு வரும்? என நீங்கள் கேட்பது புரிகிறது.
அனேகமாக தீபாவளியை (Diwali) ஒட்டி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல், வாகன ஓட்டிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஓரளவிற்கு குறையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எனவே இல்லத்தரசிகளுக்கும் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இன்னும் சிலிண்டர் விலை குறைப்பு மகிழ்ச்சியில் இருந்தே வெளிவரவில்லை. அதற்குள்ளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் (Chennai) இன்று (செப்டம்பர் 7) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.66 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 94.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மிகவும் அதிகமான விலை என்பதுதான் அனைத்து வாகன ஓட்டிகளின் கருத்தும். ஆனால் கூடிய விரைவில் இந்த விலையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட போகிறது என்பது 100 சதவீதம் உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசுடன் பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை (VAT) குறைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். எனவே எந்தெந்த மாநில அரசுகள் எல்லாம் வாட் வரியை குறைக்கின்றனவோ, அங்கு பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும்.
ஆனால் இந்த விலை குறைப்பு எல்லாம் தேர்தலுக்காக மட்டுமே என்பதில் சந்தேகம் இல்லை. மத்திய பாஜக அரசை பொறுத்தவரையில், கடந்த காலங்களில், தேர்தல்களின்போது பலமுறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு விடும் என்பது கவலைக்குரிய ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








