பெட்ரோல் விலை தரை மட்டத்துக்கு குறையப்போகுது! தீபாவளி பரிசாக வெளியாகவுள்ள அறிவிப்பு இது தான்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று வரை குறைவதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதன் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தீபாவளி பரிசாக இந்திய மக்களுக்கு அறிவிக்க தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல்,டீசல் என்பது முதுகெலும்பாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் இல்லாமல் இந்தியாவை இயங்காது என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு பெட்ரோல் டீசல்-ன் தேவை இந்தியாவில் இருக்கிறது. போக்குவரத்திற்கு இந்த எரிபொருள்தான் மிக முக்கியமான தேவையாக இருப்பதால் இதன் விலை மிகப் பெரிய அளவில் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்தால் அது நேரடியாக மற்ற அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. கடைசியாக பொதுத்தேர்தலுக்கு முன்னர் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அதற்கு பின்னர் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு நிர்வகித்து வந்த நிலையில் இந்த பொறுப்பை என்னை நிறுவனங்களிடமே வழங்க மத்திய அரசு முடிவு செய்து தற்போது எண்ணெய் நிறுவனங்களே சுதந்திரமாக தங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து வந்தன. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டுக்கு பிறகு எண்ணெய் நிறுவனங்களும் பெரிய அளவில் மாற்றங்களை செய்யவில்லை.

கொரோனாவிற்கு பிறகு கச்சா எண்ணெய் விலையில் டிரெண்ட் மாறிக்கொண்டே வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு போர் நேரத்தில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தது அதன் பிறகு தற்போது குறைந்துள்ளது. நீண்ட நாட்களாக கச்சா எண்ணெய் தற்போது குறைவான விலையிலேயே விற்பனையாகி வருகிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 74 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இதே கச்சா எண்ணெய் கடந்த மார்ச் மாதம் ஒரு பேரலுக்கு 83 முதல் 84 டாலர் வரை இருந்தது. கணிசமான அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில், இந்த விலை குறைப்பை தற்போது பெட்ரோல், டீசல் விலையில் அமல்படுத்துவதற்காக எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. இது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள கச்சா எண்ணெயின் விலை படி கச்சா எண்ணெயை பெட்ரோல், டீசலாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் அந்நிறுவனத்திற்கு லாபமாக ஒரு லிட்டருக்கு பெட்ரோல் ரூபாய் 15ம் டீசலில் ரூபாய் 12ம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதற்காக பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் இரண்டு முதல் மூன்று வரை குறைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தீபாவளி பரிசாக இந்திய மக்களுக்கு இந்த விலை குறைப்பை அறிவிக்க தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக விலை குறைக்க பட்டால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தற்போது இந்தியாவில் 256.8 மில்லியன் டன் அளவில் கச்சா எண்ணெய்கள் பெட்ரோல், டீசலுகாக சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன. இது அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 306 மில்லியன் டன்னாக மாறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு இந்தியாவில் பெட்ரோல் டீசல் மீதான தேவையை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சிஎன்ஜி, எலெக்ட்ரிக் உள்ளிட்ட பல்வேறு விதமான மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படும் நிலையில் இப்படியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்களை குஷிப் படுத்தி உள்ளது. இப்படியாக பெட்ரோல் டீசல் விலை இப்பொழுது குறைக்கப்பட்டால் அது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.


Click it and Unblock the Notifications









