நள்ளிரவில் பிரம்மாஸ்திரத்தை வீசிய மோடி! எம்ஜிஆர் மாதிரி படுத்துகிட்டே ஜெயிக்க போறாங்க! ஆடிப்போன எதிர்கட்சிகள்!

இந்தியாவில் வெகு விரைவில் 2024 லோக்சபா தேர்தல் (2024 Lok Sabha Election) நடைபெறவுள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. தற்போது வெளியாகி வரும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு (BJP) சாதகமாகவே உள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளை உண்மையாக்கி, மீண்டும் பிரதமர் ஆகும் முனைப்பில் நரேந்திர மோடி (Narendra Modi) உள்ளார்.

Petrol Pump

இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை, வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை குறைக்கப்பட்டிருப்பதை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 2 ரூபாய் (Rs 2) குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மூலம் இயங்கும் 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி டூவீலர்களின் உரிமையாளர்களும், 58 லட்சத்திற்கும் மேற்பட்ட கனரக சரக்கு வாகனங்களின் உரிமையாளர்களும் இதனால் பலன் அடைவார்கள் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Modi

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால், வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறையும். குறிப்பாக கனரக சரக்கு வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறைந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த நடவடிக்கை பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது நிச்சயம் பாஜகவிற்கு உதவி செய்யும் என கருதப்படுகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்த அளவிற்கு விலை குறைக்கப்படவில்லை என்பது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை எளிதாக்குவதற்காக பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் வரையில் குறைக்கப்படலாம் என கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அப்படிப்பட்ட அதிசயம் எதுவும் தற்போது நடக்கவில்லை. எனினும் வரும் நாட்களில் பெரிய அதிசயங்கள் ஏதாவது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இது பாஜகவின் தேர்தல் யுக்தி என்பதுதான். கடந்த காலங்களிலும் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றபோது, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. எனவே வாகன உரிமையாளர்களுக்கு இது குறுகிய கால நிவாரணமாக மட்டுமே இருக்கும். தேர்தல் முடிந்த பின்னர், மீண்டும் விலை எகிறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 23:53 [IST]
English summary
Petrol diesel price cut rs 2 lok sabha election bjp modi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+