சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

இந்தியாவில் தற்போது சைக்கிள்களுக்கு மவுசு கூடி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

இந்திய சாலைகளில் இன்று சைக்கிள்களை காண்பதே அரிதான ஒரு விஷயமாக மாறி விட்டது. உடற்பயிற்சி செய்யும் ஒரு சிலர் மட்டும் சாலைகளில் நவீன சைக்கிள்களில் வலம் வந்து கொண்டுள்ளனர். அவர்களை தவிர்த்து விட்டு பார்த்தால், சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இன்றைய இந்திய சாலைகளை மோட்டார் வாகனங்கள் ஆக்கிரமித்து விட்டன.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

சைக்கிள் பயன்படுத்துவதன் மூலமாக பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை மிச்சப்படுத்த முடியும் என்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால், மருத்துவமனைக்கு செலவிடும் தொகையையும் நாம் சேமிக்க முடியும். ஆனால் இன்றைய அவசர உலகில் சைக்கிள் மூலம் ஒரு இடத்திற்கு செல்ல யாரும் விரும்புவதில்லை.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க, ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த வளர்ந்த நாடுகள் பலவும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. சைக்கிள் போக்குவரத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இந்தியாவிலோ சைக்கிள் பயன்படுத்துபவர்களை கேலி, கிண்டல் செய்யும் நிலைதான் காணப்படுகிறது.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

ஆனால் இந்தியாவிலும் தற்போது சைக்கிள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டும் இதற்கு காரணம் கிடையாது. கொரோனா வைரஸ் அச்சத்தால்தான் பலர் ஆர்வமாக சைக்கிள் வாங்கி கொண்டுள்ளனர். பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

இதனால் சொந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஆனால் பலரிடம் சொந்த காரோ, பைக்கோ இல்லை. இன்றைக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் சொந்தமாக கார், பைக் வாங்குவது சிரமமான காரியம்தான். கார், பைக் வைத்திருப்பவர்களுக்கோ பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையாக உள்ளது.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

எனவே இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் சைக்கிள்தான் நல்ல தீர்வு. இதனை மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் வசிக்கும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அங்கு தற்போது சைக்கிள் விற்பனை உயர்ந்து வருகிறது. சைக்கிள் ஆர்வலர்கள் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

கடந்த ஜூன் மாதத்தின் முதல் இரு வாரங்களில், சைக்கிள்களுக்கான தேவை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என கொல்கத்தாவில் உள்ள சைக்கிள் டீலர்கள் பலர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தா சைக்கிள் சமாஜை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''தற்போது போக்குவரத்திற்கு போதுமான வசதிகள் இல்லை.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

எனவே நவீன வசதிகளுடன் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான விலை கொண்ட சைக்கிள்களை மக்கள் வாங்கி வருகின்றனர். இத்தகைய சைக்கிள்களில் நீண்ட தூர பயணங்களையும் மேற்கொள்ள முடியும்'' என்றார். அதே சமயம் சைக்கிள்களை வாங்குவது தொடர்பாக ஏராளமானோர் விசாரித்து வருவதாக டீலர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

இது தொடர்பாக சோத்பூரில் உள்ள மாடர்ன் சைக்கிள் மார்ட்டின் உரிமையாளரான விகாஷ் ஷா கூறுகையில், ''கோவிட்-19 வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்னர், 6,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலான விலை கொண்ட சைக்கிள்களை 7 முதல் 10 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் நாங்கள் விற்பனை செய்து வந்தோம்.

சைக்கிளுக்கு திடீர் மவுசு! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு

ஆனால் தற்போது அதுபோல் அல்லாமல், எனது கடை திறக்கப்பட்ட ஜூன் 1ம் தேதியில் இருந்து, கிட்டத்தட்ட 2 மடங்கு அதிக எண்ணிக்கையில் தினமும் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறோம்'' என்றார். நடுத்தர வயதுடையவர்கள் மட்டுமல்லாது, இளம் வயதினரும் சைக்கிள்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Petrol, Diesel Price Hike, Covid-19 Effect: Cycle Sales Rise In Kolkata. Read in Tamil
Story first published: Monday, July 13, 2020, 21:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X