லிட்டருக்கு ரூ110 வரை பெட்ரோல் விலை உயர வாய்ப்பு! இப்பவே டேங்கை ஃபுல் பண்ணிடுங்க!

இந்தியாவில் தற்போது பொதுத் தேர்தல் எல்லாம் முடிவடைந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலையொட்டி பெட்ரோல்,டீசல் விலை குறைந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உங்கள் கார் மற்றும் பைக்களுக்கு முழு டேங்க் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பக்கூடிய நேரம் என்றால் அது சரியாக இதுதான். ஏன் என்றால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்துவதற்கான அனைத்து விதமான அறிகுறிகளும் தென்பட துவங்கி விட்டன. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இந்திய பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

petrol price hike

தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாயை குறைத்தது இந்த விலை குறைப்பை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் எடுத்திருந்தாலும், பெட்ரோலியத் துறை அமைச்சர் தான் இந்த முடிவை அறிவித்தார். இதன்படி கடந்த மார்ச் 15ம் தேதி முதல் குறைக்கப்பட்ட விலையில் பெட்ரோல், டீசல்கள் விற்பனையாகி வருகிறது.

தற்போது இந்தியா முழுவதும் பொதுத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது குறைக்கப்பட்ட இந்த பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு சில நாட்களிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதற்கான அனைத்து விதமான அறிகுறிகளும் தென்பட்டு வருகின்றன.

petrol price hike

சர்வதேச மார்க்கெட்டில் தற்போது தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல்களை தயாரிக்கும் நாடான ஒப்பக் நாடுகள் தற்போது ஆண்டிற்கு வெளியிடும் கச்சா எண்ணெயின் அளவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது. 2025ம் ஆண்டு வரை குறைவான அளவிலேயே கச்சா எண்ணிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. சர்வதேச விலையை ஒட்டி தற்போது இந்தியாவிலும் இது நேரடியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் பெட்ரோல் விலை என்பது நேரடியாக கச்சா எண்ணெய்யுடன் மட்டும் தொடர்பில் இல்லாமல் அதன் மீது விதிக்கப்படும் வரிகள், கலால் வரிகள் ஆகியவையும் வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

petrol price hike

உலகில் கச்சா எண்ணெயை தயாரிக்காத பெரும்பாலான நாடுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரியை மிகப்பெரிய அளவிலான வருவாயாக பார்க்கிறது. அப்படியாக இந்தியாவிற்கும் பெட்ரோல், டீசல் மீதான வரி என்பது மிக முக்கியமான வருவாயாக இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது வரியை அதிகம் செய்து விற்பனை செய்கிறார்கள்.

அதேநேரம் சர்வதேச அளவில் கச்சா எண்ணின் விலை உயரும் போது வரிகளை குறித்து அப்பொழுதும் ஒரே மாதிரியான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் நீண்ட ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலை தான் இருக்கிறது. சில சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் இருக்கும் விலை ஏற்ற இறக்கத்தை வழி மூலம் ஈடுகட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் என்பது அதிகமாக இருப்பதால் அரசுக்கு தேவையான வரி போக கச்சா எண்ணெயின் விலையும் அதிக விற்பதை பொறுத்து பெட்ரோல்,டீசலின் விலை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை ரூபாய் 100 என்ற சராசரி விலையில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த விலை அதிகரித்து லிட்டருக்கு ரூபாய் 110 கூட விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 13:13 [IST]
English summary
Petrol diesel price hike expected increase know this indications
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X