பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு... லிட்டர் 280ஐ தொட்டது!
இன்று உலகம் முழுவதும் ஒரு நாட்டின் பொருளாதாரம், பெட்ரோல், டீசலின் விலையில் தான் இருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பதாக நாம் எல்லோரும் உணர்கிறோம். கிட்டத்தட்டக் கடந்த ஓராண்டாக விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் ரூ100 என்ற விலையிலேயே நீண்ட நாட்களாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் விலை விண்ணை முட்டியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டுச் சர்வதேச மானிட்டரி ஃபண்டில் கடன் வாங்கியதுதான் அந்நாட்டின் கடன் பெருவாரியாக ஏறிப்போய் உள்ளது. இதனால் மக்கள் எல்லோரும் பெரும் திண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதைச் சரி செய்ய அந்நாட்டு அரசு பெட்ரோல் டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ272 என்ற விலையிலும், ஒரு லிட்டர் ஹைஸ்பீடு டீசலின் விலை ரூ280 என்ற விலையிலும் விற்பனையாகிறது. அதுவே லைட் டீசல் ஆயிலின் விலை லிட்டருக்கு 196.68 என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த அறிவிப்பைப் பாகிஸ்தான் கடந்த புதன் கிழமை வெளியிட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு ஐஎம்எஃப்பில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான லோனை பெற வழி கிடைத்துள்ளது.
மேலும் இதனால் 170 பில்லியன் பாகிஸ்தான் பணம் மக்களிடமிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையேற்றம் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்ததன் விளைவாக ஏற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனிடையே அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் ஸ்டேஷன்கள் எரிபொருள் இல்லாமல் இழுத்து மூடப்பட்டன. சிஎன்ஜி ஸ்டேஷன்களுக்கும் எரிபொருள் கிடைக்கவில்லை. குளிர் காலத்தில் கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் மேலும் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையை மேலும் மோசமாக்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications