விண்ணை முட்டியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

கர்நாடகா தேர்தலுக்கு பின்பு பெட்ரோல் டீசல் விலை எக்குதப்பாக ஏறி வருகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் விலையால் பலர் மக்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

By Balasubramanian

கர்நாடகா தேர்தலுக்கு பின்பு பெட்ரோல் டீசல் விலை எக்குதப்பாக ஏறி வருகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள பெட்ரோல் விலையால் பலர் மக்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

இந்தியாவில் பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கைதான் அதிகம்.மேலும் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்தியாவில் வாகனங்களின் விற்பனை ஆண்டிற்கு ஆண்டுபல மடங்கு அதிகரித்து வருகிறது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

ஜிஎஸ்டிக்கு பிறகும் வாகன விற்பனை குறையாமல் தான் இருந்து வருகிறது. மக்களிடம் வாகனத்திற்கான தேவை இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பெட்ரோல் டீசலின் தேவையும் அதிகரிக்கிறது. தற்போது வெளிநாட்டில் இருந்து தான் அதிகளவில் பெட்ரோலின் மூலப்பொருளான கச்சா எண்ணெனை இறக்குமதி செய்யப்படுகிறது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

முன்பு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை விலையை அரசு நிர்ணயித்த நிலையில் தற்போது அந்த உரிமை எண்ணெனை நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டன. தற்போது எண்ணெனை நிறுவனங்கள் தினந்தோறும் விலையை ஏற்றி இறக்கி வருகின்றனர்.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடாக சட்டமன்ற தேர்தலை ஒட்டி சுமார் 19 நாட்கள் பெட்ரோல் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படவில்லை ஒரே விலையே நிலையாக இருந்தது. இந்நிலையில் கர்நாடாக தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலைகள் கடகடவென ஏற துவங்கியது. தற்போது விலை இதுவரை எட்டாத உச்சத்தை எட்டியுள்ளது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

தேசிய தலைநகரான டில்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 76.57 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 67.82 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2013 செப்டம்பர் மாதம் 14ம் தேதி தான் உச்சபட்ச விலையான ரூ76.06 என்ற விலையில் விற்பனையானது தற்போது அதையும் தாண்டி ரூ 76.57 என்ற விலையில்விற்பனை செய்யப்படுகிறது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

டில்லி நிலவரம் இப்படி என்றால் வர்த்தக தலைநகராக விளங்கும் மும்பையில் நிலைமை இதைவிட மோசம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அதிக வரிவிதிப்பு காரணமாக இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 84.40 என விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 72.21 என் விற்பனையாகிறது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

இந்தியாவில் போபால், ஐதராபாத், பாட்னா, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை ரூ 80ஐ தாண்டிவிட்டது. அடுத்த பெரிய நகரமான பெங்களூருவிலும் பெட்ரோல் விலை எக்குதப்பாக தான் உள்ளது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

பெங்களூருவை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 77.81 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்க ரூ1.99 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.93 என உயர்த்தப்பட்டுள்ளுது. ஐதராபாத்தில் டீசல் விலை உட்சபட்சமாக லிட்டருக்கு ரூ 73.72 என்ற விலையில் விற்பனையாகிறது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

சென்னையை பொருத்தவரை இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.47 என்ற விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ 71.59 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல் விலை ரூ 80ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் விலையை ஏத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களின் பெட்ரோல் விலையும் கர்நாடக தேர்தலுக்கு 19 நாட்களுக்கு முன்னில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து குறிப்பிடத்தக்கது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

இந்த விலையேற்றத்திற்கு சர்வதேச அளவில் விலை உயர்ந்த கச்சா எண்ணெனை விலை ஏற்றமும், அந்நிய செலாவணியின் விகிதம் குறைவும் தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் பெட்ரோல் விலை டிரண்ட்டை பார்க்கும் போது சமீபத்தில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது.

விண்ணை முடியது பெட்ரோல் விலை; இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்கனும் போல

பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் பலர் மாற்று வழியில் சிந்திக்க துவங்கி விட்டனர். பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். பலர் பெட்ரோல் விலை கட்டுப்படியாமல் பொது வாகனங்களில் பயணிக்க துவங்கிவிட்டனர். இன்டெர்நெட்டில் பல நெட்டசன்சகள் வாகனத்திற்கு மட்டுமல்ல இனி பெட்ரோல் போடவும் லோன் தான் வாங்க வேண்டும் என கிண்டலடித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Petrol And Diesel Prices Hit Record High — Petrol Price In Mumbai Stands At Rs 84.40 Per Litre. Read in Tamil
Story first published: Monday, May 21, 2018, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X