தங்கம் விலை போல இனி பெட்ரோல், டீசல் விலையிலும் தினசரி மாற்றம்..!

Written By:

வரும் மே 1 -ஆம் தேதி புதுச்சேரி உட்பட 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர்.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாறியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்துவருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முடிவை அறிவித்துள்ளன. இதன்படி பாண்டிச்சேரி உள்ளிட்ட 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கப்பட உள்ளது.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் 95% பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகிறது.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இதன்படி வரும் மே 1 முதல் பாண்டிச்சேரி, ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டிணம், ராஜஸ்தானில் உள்ள உதைப்பூர், ஜார்க்கண்டில் உள்ள ஜம்ஷெத்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் ஆகிய நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இத்திட்டம் அமலாகவுள்ள இந்த 5 நகரங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமாக 200-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளதாக தெரியவருகிறது.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்தவும் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

சர்வதேச விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை விலை மாற்றம் செய்யும் போது அது பெட்ரோலிய நிறுவனங்களுக்கும், மக்களுக்கு சுமையாக இருப்பதால் இத்திட்டம் வரவேற்கத்தக்கது என வாகன ஓட்டிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும் போகப் போகத்தான் இதன் நிறை, குறை தெரியவரும்.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இதேபோல, தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் நிறுவனங்களும் இதே முறையை விரைவில் பின்பற்றக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

இந்நிலையில் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்காததை கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு வரும், மே 14-ம் தேதிக்கு பிறகு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம்..!

மேலும், மே மாதம் 15-ந் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களை பகலில் மட்டுமே (காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை) இயக்குவோம்," என்றும் இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது நினைவுகொள்ளத்தக்கது.

English summary
Read in Tamil about petrol, diesel price to be revised daily by petroleum companies.pondy and 4 more cities to be implemented.
Story first published: Wednesday, April 12, 2017, 14:44 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark