பெட்ரோல், டீசல் விலை ஏறட்டும், இறங்கட்டும்... ஆனால் ஒருபக்கம் வாங்குவோர் எண்ணிக்கை ஏறிட்டே போகுது!!
எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்க, மறுப்பக்கம் அதற்கு இணையாக பெட்ரோல் & டீசல் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் விற்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.
இன்று நாம் பங்குகளில் பெறும் பெட்ரோல்/ டீசல் எரிபொருள்கள் எவ்வாறு, எங்கிருந்து கிடைக்கின்றன என்பது தெரிந்தால் ஆச்சிரியப்படுவீர்கள். பல ஆயிரம் கிமீ தொலைவிற்கு அப்பாலில் இருந்து கப்பல் வழியாக கச்சா எண்ணெய்யாக நம் இந்தியாவை பெட்ரோல் மற்றும் டீசல் வந்து சேருகிறது. இந்த பரிமாற்றத்தில் நிறைய நிறுவனங்கள் ஈடுப்படுகின்றன.

இதனாலேயே தினந்தோறும் பெட்ரோல்/ டீசல் விலைகள் மாற்றமடைகின்றன. இருப்பினும், இந்தியாவில் 2022இல் இருந்து கடந்த 2 வருடங்களாக பெட்ரோல்/ டீசல் விலைகளில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. சில பைசாக்கள் மட்டுமே நாள்தோறும் அதிகரித்துக் கொண்டும், குறைந்துக் கொண்டும் இருக்கின்றன. ஆனால், 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்த கதையே வேறு.
2022ஆம் ஆண்டின் துவக்க ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் ரூபாய் கணக்கில் அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தன. அந்த சமயத்தில்தான், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100ஐ கடந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இதுகுறித்து அந்த சமயத்தில் விவாதங்களும், சமூக வலைத்தளங்களில் மீம்களும் வெளிவந்தன.

இதனால், அவ்வளவுதான் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் குறை போகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. அதேபோல், பங்குகளில் பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொள்வோரும் குறைய துவங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தை காட்டிலும் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் பெட்ரோல் விற்பனை சுமார் 9.3% அதிகரித்துள்ளது.
இந்திய எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் தொடர்பான திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, பெட்ரோல் விற்பனை மட்டுமின்றி, டீசல் விற்பனையும் 2023 ஜனவரியை காட்டிலும் கடந்த ஜனவரியில் 3.1% அதிகரித்து உள்ளது.

நடப்பு 2023- 24 நிதியாண்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் - 2024 ஜனவரி வரையில் பதிவாகியுள்ள பெட்ரோல் விற்பனை ஆனது 2022-23 நிதியாண்டில் இதே 10 மாதங்களில் பதிவானதை விட 6.1% அதிகமாகும். அதேபோல், டீசல் விற்பனை மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் 4.3% அதிகரித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவை கடந்த 2024 ஜனவரி மாதத்தில் பெட்ரோல் விற்பனையில் 8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால், அரசு கட்டுப்பாட்டி கீழ் இயங்கும் இந்த நிறுவனங்களின் டீசல் விற்பனை கடந்த ஜனவரியில் 1.8% குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் தான் நிறைய பேர் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வர். ஏனெனில், ஜனவரி மாதத்தில்தான் நிறைய விடுமுறைகள் கிடைக்கும். இவ்வாறு தொலைத்தூர பயணங்கள் அதிகமாகுவதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் தேவையும் அதிகரிப்பதில் பெரிய ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications









