BS III பெட்ரோல், BS IV டீசல் வாகனங்களுக்கு திடீர் தடை! மீறினால் ரூ20,000 அபராதம்
பெட்ரோல், டீசல் கார்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான மாசு ஏற்படுத்தி வருவதன் காரணமாக அரசு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்க் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக வட இந்தியாவில் பல்வேறு விதமான தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் அதிக காற்று மாசு ஏற்படுத்துவதன் காரணமாக இந்த தடை விதிக்கப்படுகிறது. இது குறித்த சில முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. இதை விரிவாக காண்போம்.
பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் பெட்ரோல், டீசல் எரிபொருளை எரித்து அதில் இருந்து மாசுவை வெளியிடுகிறது. இந்த மாசம் சம்பளம் சுற்றுச்சூழலில் உள்ள காற்றில் கலந்து விடுகிறது. இதனால் காற்று மாசடைகிறது. உலகம் முழுவதும் நடந்த ஆய்வில் காற்று மாசுக்கு 20 சதவீதமான காரணம் வாகன பயன்பாடு தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குளிர் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக காற்று மாசுவும் அதிகமாகிறது. பொதுவாக குளிர் காலங்களில் காற்று மாசு என்பது அதிகமாக தான் இருக்கும். வட இந்தியாவில் காற்று மாசு காரணமாக பல்வேறு விதமான தடைகள் இந்த குளிர்காலத்தில் விதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
இப்படியாக டெல்லி பகுதியில் இயங்கும் வாகனங்களுக்கும் தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மேலும் வாகனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது சிரமத்திற்கு உள்ளாக இருக்கிறார்கள். இன்று முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

டெல்லி பகுதியில் தற்போது ஜிஆர்ஏபி மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி டெல்லி பகுதியில் இயங்கி வரும் பிஎஸ் 3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 டீசல் வாகனங்கள் அல்லது பிஎஸ்4 பெட்ரோல் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் டெல்லி மட்டுமல்லாமல் குர்கிராம், ஃபரிதாபாத், காசியாபாத் கௌதமபுத் நகர் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் இதே கட்டுப்பாடுடன் தான் வாகனம் ஓட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 20,000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக்கல் எந்த வாகனத்தை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கமர்ஷியல் வாகனங்களுக்கும் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் கமர்சியல் வாங்கினார்களாக இருந்தால் அதற்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களை பொருத்தவரை பிஎஸ்3 பெட்ரோல் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தால் அவை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அவை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் சாலையில் இயங்கும் மற்ற வாகனங்களுக்கும் சில முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி மேல் நாம் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வாகன ஓட்டும் வாகன ஓட்டிகள் இனி கட்டாயமாக மாசு கட்டுப்பாட்டு சான்றுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது இந்த சான்றிதழ் கட்டாயமாக சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 2.70 லட்சம் வாகனங்களுக்கு இப்பகுதியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை ஓட்டினாலும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









