பெட்ரேல் விலை பாதியா குறையப்போகுதா? யாருக்கும் தெரியாமல் கசிந்த ரகசியம்!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச அளவில் நடந்து வரும் போர் சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு பெட்ரோல் தேவை குறைவாக இருப்பதன் காரணமாக இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் என்பது மிக முக்கியமான எரிபொருளாக இருக்கிறது. இந்த எரிபொருட்கள் எல்லாம் கச்சா எண்ணெய் என்ற மூலப்பொருளில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கின்றன. அதனால் அந்த நாடுகள் தங்களின் தேவைக்கு போக மற்ற கச்சா எண்ணெய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான விஷயமாக இருப்பதால் கச்சா எண்ணெய் விலை என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் முடிவு செய்யும் முக்கிய பொருளாக இருக்கிறது. உலக பொருளாதாரமே இந்த கச்சா எண்ணெய் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இனிளியில் சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணையின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான், இஸ்ரேல் போர் சூழ்நிலை இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. பல்வேறு எண்ணெய் கிணறு பகுதிகளில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் அங்கு இருக்கும் கச்சா எண்ணெய்கள் எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. மேலும் குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளில் கச்சா எண்ணெய்க்காண தேவை குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை ஊக்கப்படுத்துவதில் மிக முக்கிய பணிகளை செய்து வருகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெய்க்காண தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில் மற்ற நாடுகள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக வேகமாக மாறி வருகிறார்கள். இதனால் அங்கு பெட்ரோலுக்கான தேவை வெகுவாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட சில நாடுகள் வழக்கமாக வாங்கும் கச்சா எண்ணெய் அளவை விட தற்போது குறைவாக கச்சா எண்ணெய்யை வாங்கி உள்ளார்கள். இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சாக்கில் அதிகமாக இருப்பது தற்போது விலை குறைவதற்கான காரணமாக மாறி உள்ளது.

இப்போது கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் ஒரு பேரலுக்கு 71 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இதற்கு முன்னர் விற்பனையான விலையை விட மிக குறைவான விலையாகும். இந்த குறைவான விலையாக விலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் இதன் மூலம் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் விலையும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது.
இது உடனடியாக இந்தியா போன்ற நாடுகளில் எதிரொலிக்காவிட்டாலும் தொடர்ந்து குறைவான விலையில் கச்சா எண்ணெய் விற்பனையாகி வந்தால் இது சில மாதங்களுக்கு பின்னர் இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமான அளவு குறைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது பெட்ரோல் டீசல் விலை கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் வரி அதிகரிப்பின் மூலம் ஒரே மாதிரியான விலையை இந்தியா பின்பற்றி வருகிறது.
கச்சா எண்ணெயில் இந்த விலை குறைவு நேரடியாக மக்களுக்கு இல்லாவிட்டாலும் விமான சேவைகளை நடத்தி வரும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது தற்போது விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் எல்லாம் குறைவான விலையில் அந்நிறுவனங்களால் வாங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. ஒவ்வொரு வாகனமும் பயணம் செய்வதற்கு பெட்ரோல்,டீசல் தேவை என்பதால் இதன் விலை என்பது நாட்டின் பொருளாதாரத்தில் ஒவ்வொரு பொருளின் மீதும் மறைமுகமாக இருக்கிறது. இதன் விலை குறைவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications









