பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தமிழக மெக்கானிக்குகளுக்கு புது பிரச்னையை உண்டாக்கி இருக்கிறது. பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, மெக்கானிக்குகளிடம் கேட்டு வருகின்றனர் சில பைக் உரிமையாளர்கள்.

By Arun

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னையை உண்டாக்கி இருக்கிறது. பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, சாதாரண மெக்கானிக்குகளிடம் கேட்டு, அவர்களுக்கு தலைவலியை உண்டாக்கி வருகின்றனர் சில பைக் உரிமையாளர்கள். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பல்வேறு வரிகளை விதித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே பெட்ரோல் மற்றும் டீசலை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு பக்கம் வலுத்து வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த கோரிக்கைக்கு இன்னும் செவி சாய்க்கவில்லை. அத்துடன் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பை, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலமாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் உயர்ந்தபாடில்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை, முன் எப்போதும் இல்லாத வகையில், ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ, தினசரி வாகனங்களை பயன்படுத்தும் மிடில் கிளாஸ் குடும்பங்கள்தான்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

பெட்ரோல், டீசலுக்கு என மாதந்தோறும் பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதாக, சரமாரியாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு சில பைக் உரிமையாளர்கள், ஒரு படி மேலே போய், மெக்கானிக்குகளை விமர்சிக்க தொடங்கி விட்டனர். தங்கள் பைக்கின் மைலேஜ் குறைந்து விட்டது என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. இதற்கு மெக்கானிக்குகள்தான் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

'நீ ஒழுங்கா சர்வீஸ் பண்ணி இருந்தா எப்படி மைலேஜ் குறையும்?' என்பது போன்ற ஆவேச வசனங்கள் தமிழ் மண்ணின் மெக்கானிக் ஷாப் வாசல்களில் பயங்கரமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. பைக் ஓனர்களின் இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? என தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர் மெக்கானிக்குகள்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

குறிப்பாக வீரம் விளைந்த மதுரை மண்ணிலும், குசும்புக்கு பெயர் பெற்ற கோயமுத்தூர் மண்ணிலும்தான் பைக் உரிமையாளர்கள்-மெக்கானிக்குகள் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. பாவம், மெக்கானிக்குகள் என்ன செய்வார்கள்?

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

சில பைக் உரிமையாளர்கள், தங்களது பைக்கை சமீபத்தில் சர்வீஸ் செய்துள்ளனர். ஆனால் பைக்கை சர்வீஸ் செய்த பிறகும், எதிர்பார்த்தபடி மைலேஜ் கிடைக்கவில்லை. மாறாக மைலேஜ் கடுமையாக குறைந்து விட்டது. மெக்கானிக்குகளின் தவறே இதற்கு காரணம் என பைக் உரிமையாளர்கள் நினைக்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

என்னதான் நடக்கிறது? என்பதை விளக்குகிறார் மதுரை காளவாசலை சேர்ந்த மெக்கானிக் ஒருவர். ''கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.72 மட்டுமே. ஆனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 11 ரூபாய் வரை அதிகரித்து விட்டது (சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.41).

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

ஒரு டூவீலர் சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது என வைத்து கொள்வோம். அப்படியானால் பெட்ரோல் விலை ரூ.72ஆக இருந்த கடந்த ஜனவரி மாதம், ஒரு நபர் செலவழித்த ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், சுமார் 83.33 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைத்திருக்கும்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

ஆனால் தற்போது பெட்ரோல் விலை 11 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. தற்போது ஒரு நபர் பெட்ரோலுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 72.33 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே கிடைக்கும். அதாவது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், சுமார் 10 கிலோ மீட்டர் மைலேஜை இரு சக்கர வாகன ஓட்டிகள் இழக்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

பெட்ரோல் விலை உயர்வுதான் இதற்கு காரணம். அந்த 11 ரூபாய் விலை உயர்வுதான் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு சில பைக் உரிமையாளர்கள் இவ்வளவு பணத்திற்கு பெட்ரோல் போட்டால் இவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என கணக்கு வைத்திருக்கின்றனர். ஆனால் அது தவறு.

Recommended Video

ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! — Tamil DriveSpark
பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

இவ்வளவு லிட்டர் பெட்ரோலுக்கு இவ்வளவு மைலேஜ் கிடைக்கும் என்றுதானே கணக்கு வைக்க வேண்டும். ஏனெனில் முன்பு குறைந்த விலைக்கு அதிக பெட்ரோல் கிடைத்தது. தற்போது அதிக விலைக்கு குறைவான பெட்ரோல் மட்டுமே கிடைத்து வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

அதாவது அதிக பணம் செலவழித்தும் குறைவான பெட்ரோலே பைக் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக மைலேஜூம் குறைகிறது. ஆனால் நாங்கள் சரியாக சர்வீஸ் செய்யாத காரணத்தால்தான், மைலேஜ் குறைந்து விட்டது என சில பைக் உரிமையாளர்கள் நினைக்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வால் தமிழக மெக்கானிக்குகளுக்கு நூதன பிரச்னை.. ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்வாரா?

இதனால் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எங்கே போய் சொல்ல?'' என நொந்து கொண்டார் அந்த மெக்கானிக். பாவம், சாதாரண மெக்கானிக்கான அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒரு ஏழையின் கஷ்டத்தை, ஒரு ஏழைத்தாயின் மகன் புரிந்து கொள்ளாமல் இருப்பதே எல்லா பிரச்னைக்கும் காரணம்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Petrol Price Hike Creates New Problem For Tamilnadu Bike Mechanics. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X