மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த ஒரு வருடமாக சிறிய சிறிய இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குகளினால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அடிக்கடி மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் வரி வருவாய் பாதிப்பை ஈடுசெய்து கொள்ள மத்திய அரசாங்கம் பெட்ரோல் & டீசல் விலைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

ஊரடங்கு உத்தரவுகளுக்கு முன்பே தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டன. குறிப்பாக கார் & பைக்குகளை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனை மாடல்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டன.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

அதன்படி கிட்டத்தட்ட அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் நடப்பாண்டில் விற்பனை மாடல்களின் விலைகளை உயர்த்திவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று தடவைகள் கூட விலை அதிகரிப்பு அறிவிப்புகளை வெளியிட்டதை பார்த்தோம்.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

இருப்பினும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கப்படுவது நிறுத்தப்பட்ட பாடில்லை. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலைகள் பைசாக்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்று (மே 29) பெட்ரோலின் விலை நகரங்களை பொறுத்து 25 முதல் 26 பைசா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

அதேநேரம் டீசல் 28 முதல் 30 பைசா வரையிலான விலை அதிகரிப்பை கண்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மும்பை மாநகரில் சதத்தை கடந்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் மூலம் இந்தியாவிலேயே பெட்ரோல் விலையில் ரூ.100ஐ கடந்த முதல் மெட்ரோ நகரமாக மும்பை பெயர் எடுத்துள்ளது. சாதாரண நகரங்களை பொறுத்தவரையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் ஏற்கனவே பெட்ரோல் விலையில் சதத்தை கடந்துவிட்டது.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

போபாலில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.04 ஆகும். மும்பையில் பெட்ரோலின் விலை நேற்றே (மே 28) சதத்தை நிறைவு செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஏனெனில் மே 27ஆம் தேதி மும்பையில் பெட்ரோலின் விலை ரூ.100ஐ காட்டிலும் வெறும் 2 பைசாக்கள் மட்டுமே குறைவாக இருந்தது.

மும்பையில் ரூ.100ஐ தொட்டது பெட்ரோல் விலை!! சென்னையில் 1 லி பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால் நேற்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. டீசலின் விலை மும்பையில் ரூ.92.17 ஆகும். மும்பை அடுத்து பெட்ரோல் விலையில் செஞ்சூரியை போட உள்ள இந்திய நகரம் எதுவென்று தற்போதைக்கு யூகிக்க முடியவில்லை.

ஏனெனில் ஒவ்வொரு நகரத்திலும் பெட்ரோல் விலை பைசாக்கள் வித்தியாசத்தில் தான் உள்ளது. மும்பைக்கு அடுத்து அதிக பெட்ரோல் விலை கொண்ட நகரங்களாக ஹைதராபாத் (ரூ.97.63), பெங்களூர் (ரூ.97.07) உள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.95.51 ஆகவும், டீசலின் விலை ரூ.89.65 ஆகவும் உள்ளது.

Most Read Articles

மேலும்... #பெட்ரோல் #petrol
English summary
Mumbai Petrol Price Crosses Rs 100 Mark. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X