45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

கேரளா மாநிலத்தில் உள்ள ஐஓசி டீசல் பங்கில் டீசல் போடப்படும் அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள ஐஓசி பெட்ரோல் பங்கில் டீசல் போடப்படும் அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. 45 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு காரில் 52.14 லிட்டர் டீசல் போடப்பட்டதாக டீசல் பம்ப் கணக்கு காட்டுகிறது. இதை மீண்டும் பரிசோதித்ததில் முறைகேடு ஆதரத்துடன் அம்பலமாகியுள்ளது.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

கேரள மாநிலத்தை சேர்ந்த அனிஷ் ஜாய் சிர்பரம்பில் மற்றும் அவரது நண்பர் அன்வின் கே பாலோஸ் ஆகியோர் ஒரு ஐ.டி நிறுவன ஊழியர்கள் இவர்கள் கடந்த ஏப். 7ம் தேதி அனிஷின் ஹூன்டாய் ஐ20 எலைட் காரில் அத்திப்புரா தேசிய நெடுஞ்சாலை எண் 66 ல் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

அப்பொழுது அவர்கள் அந்த நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி டீசல் போட்டனர். ஐ20 எலைட் காரின் முழு கொள்ளவு 45 லிட்டர் தான். ஆனால் அந்த பம்பில் 49 லிட்டர் போடப்பட்டுள்ளதாக காட்டியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அனிஷ் அங்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

தொடர்ந்து அவர் ஐ20 எலைட் காரில் 49 லிட்டர் டீசல் போட்டதற்கான ஆதரங்களை பெற்று கொண்டு அதை பேஸ்புக்கில் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் ஐ.ஓ.சி., நிறுவனத்தின் ஆன்லைன் போர்டலிலும் புகாரை பதிவு செய்தார். அவர் பேஸ்புக்கில் போட்ட பதிவு கேரளா மக்கள் மத்தியில் வைரலாக பரவியது. பலர் இது குறித்து பேச துவங்கினர்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

பெட்ரோல் பங்கில் டீசல் போடப்படும் அளவில் உள்ள ஊழல்கள் குறித்து பல மீம்களும் தெறிக்கவிட்டது. இந்நிலையில் ஐ.ஓ.சி. அதிகாரிகள் அனிஷை தொடர்ப்பு கொண்டு இது தொடர்பாக சோதனை செய்ய தாங்கள் டீசல் போட்ட காருடன் டீசல் போட்ட அதே பங்கிற்கு வர சொன்னார்கள்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

அங்கு அவரது காருக்கு மீண்டும் டீசல் போட்டு சோதனை நடத்தலாம் என முடிவு செய்தனர். அனிஷ் அங்குவந்தவுடன் ஐஓசி அதிகாரிகள் போலீசார் முன்பு அந்த சோதனையை நடத்த முடிவு செய்து போலீசாரையும் அழைத்திருந்தனர். அனிஷ் அங்கு சென்றவுடன் அவரது காரில் உள்ள டீசல் டேங்கை அதிகாரிகள் முதலில் பரிசோதனை செய்தனர்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

அது கார் நிறுவனம் அளித்த டீசல் டேங்க்தான் என முடிவு செய்த பின்பு அந்த டீசல் டேங்கில் இருந்த டீசலை முழுமையாக நீக்கினர். தொடர்ந்து அவரது காரை வேறு ஒரு கார் மூலம் டோ செய்து முன்னதாக அனிஷ் டீசல் போட்ட அதே பம்பிற்கு கொண்டு சென்றனர். அந்த பம்ப் மூலம் மீண்டும் அவரது காரில் டீசல் நிரப்பபட்டது.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

ஆனால் இந்த முறை 49 லிட்டர் நிரம்பவில்லை மாறாக 52.14 லிட்டர் நிரம்பியது. இதை கண்டு ஐ.ஓ.சி., அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சோதனைக்கு சாட்சியாக சில போலீசார் இருந்தனர். மேலும் பல பொதுமக்களும் இங்கு கூடியிருந்தனர். இதனால் அந்த டீசல் பங்கில் டீசல் போடும் அளவில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதன் பின் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் இல்லை.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

அனிஷ் தான் பேஸ்புக்கில் பதிவு செய்த பதிவை தற்போது நீக்கியுள்ளார். அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. டீசல் வழங்குவதில் முறைகேடு எவ்வாறு நடந்தது. மிஷினில் உள்ள கோளாறா அல்லது. டீலர் செய்த முறைகேடா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. நடந்த தவறுக்காக அனிஷிற்கு என்ன நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. மீண்டும் அந்த தவறு நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் கிடைக்கப்படவில்லை.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

இதுபோன்ற புகார்கள் ஆங்கே தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பெட்ரோல் பங்க்களின் முறைகேடுகள் ஒரு புறம் இருந்தாலும் பியூயல் டேங்கின் கொள்ளவுகளை புரிந்து கொள்வதிலும் சில சிக்கல்கள் இருக்கிறது. டேக்கின் கொள்ளவு என கார் நிறுவனங்கள் குறிப்பிடுவது குறைந்த பட்ச கொள்ளவுதான். அதாவது டேக்கை முழுவதுமாக நிரப்பினால் குறைந்தபட்சம் அவர்கள் கூறிய அளவு டீசல் இருக்கிறது என அர்த்தம்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

கொள்ளவை விட அதிகமாக இருக்கும் டீசல்கள் சில நேரங்களில் இன்ஜினிற்கு செல்லும் பைப்களிலோ அல்லது டீசல் டேங்கில் உள்ள நெக் பைப்களிலோ நிரம்பும். அப்பொழுது டீசல் டேங்கின் முழு கொள்ளவை காட்டிலும் சிறிது அதிகமாக நிரம்பும். ஆனால் இச்சம்பவத்தை பொருத்தவரை அவ்வாறாக நடப்பதற்கானவாய்ப்பு குறைவு. டீசல் பங்கில் உள்ள பம்பிங் செய்யும் மிஷனில் குழறுபடி இருந்திருக்கலாம் அல்லது ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கலாம்.

45லிட்டர் டீசல் டேங்கில் 52.14 லிட்டர் டீசல்; முறைகேடு ஆதாரத்துடன் அம்பலம்

எது எப்படியோ இனி நீங்களும் டீசல் பங்கில் டீசல் போடும் போது உங்களின் டேங்கில்இருக்கும் பெட்ரோலையும். அவர்கள் போடும் பெட்ரோலையும் கணக்கில் வைத்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் தான். உங்கள் பணத்தை முறைகேடு செய்பவர்களிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம்வாசிக்கப்பட்ட செய்திகள்

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hyundai i20 with 45 L fuel tank, gets filled with 49 L diesel – Petrol pump scam or no?.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X