70 லிட்டர் டேங்கில் 77 லிட்டர் போட்டதாக பில்! அம்பலமானதா பெட்ரோல் பங்க் மோசடி? வைரல் வீடியோ!
பெட்ரோல் பங்க்களில் நடக்கும் முறைகேடுகள் இந்தியாவில் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. விதவிதமான வகைகளில்முறைகேடுகள் நடக்கிறது. இப்படியாக சமீபத்தில் பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் காருக்கு 70 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்கில் 77 லிட்டர் பெட்ரோல் போட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜன்தா பிரேக்கிங் நியூஸ் என்ற யூடியூப் சேனலில் புதிதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் டில்லி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஸ்கேம் நடந்ததாக தகவல்கள் உள்ளன. இ்நத வீடியோவில் ஒரு தனது பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் சொகுசு செடான் காரில் சரியாக மாலை 6 மணி அளவில் பெட்ரோல் போட சென்றுள்ளார்.

அவர் பெட்ரோல் டேங்கை நிரப்பும்படி பங்க் ஊழியரிடம் சொல்லியுள்ளார். இவரது பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் காரில் 70 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு இருந்தது. மேலும் இவர் பெட்ரோல் பங்கிற்குள் வரும் போது 100 கி.மீ தூரத்திற்கு செல்லும் அளவு கொண்ட பெட்ரோல் இருப்பதாக தெரிவித்திருந்தது. அப்படி பார்த்தால் 10 லிட்டர் பெட்ரோல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் பெட்ரோல் நிரம்பிய போது, 77 லிட்டர் பெட்ரோல் நிரம்பபட்டதாக காட்டியுள்ளது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேள்வி எழுப்பினர். இது பின்னர் வாக்குவாதமாக மாறியுள்ளது. வாக்குவாதம் முற்றவே பெட்ரோல் பங்கின் உரிமையாளர் அந்த இடத்திற்கு வந்தார்.

அவர் வந்ததும் அவர் தனது ஊழியர் தவறாக நடந்து கொண்டதற்காக மண்ணிப்பு கோரினார். பின்னர் அவர் கார் உரிமையாளரிடம் பேசி ஒரு மெக்கானிக்கை வரவழைத்து காருக்குள் இருக்கும் பெட்ரோலை முழுவதுமாக வெளியே எடுத்து அளந்து பார்க்க முடிவு செய்தனர். அதன்படி மெக்கானிக்கும் அழைத்து வரப்பட்டார். பெட்ரோலை அளந்து பார்ப்பதற்காக கேன்களும் எடுத்து வரப்பட்டன.
பின்னர் மெக்கானிக் வந்து பெட்ரோல் டேங்கிலிருந்து இன்ஜினிற்கு செல்லும் பம்பை கழற்றி டேங்கில் உள்ள பெட்ரோல் முழுவதையும் கேனில் ஏற்றினார். அப்படி அளந்து பார்க்கும் போது 57 லிட்டர் பெட்ரோல் மட்டுமே இருந்துள்ளது. இதை கண்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மீட்டர் ரீடிங்கில் காட்டியதைவிட 20 லிட்டர் பெட்ரோல் குறைவாக இருந்துள்ளது.

இதை அறிந்ததும் பெட்ரோல் பங்க் மீது எப்படி நம்புவது என கேள்வி எழுப்பினார். அப்பொழுது பங்க் உரிமையாளர் இரவு முழுவதும் வாகனத்தை பங்கிலேயே நிறுத்தும்படியும் டேங்கை கழற்றி பெட்ரோலை எடுத்தால் இன்னும் அதிக பெட்ரோல் வரும் என வாதித்தார். வாகனத்தின் எரிபொருள் காட்டும் கருவியில் 57 லிட்டர் பெட்ரோலை எடுத்த பின்பும் பெட்ரோல் மீதம் இருப்பதாக காட்டுகிறது. இதனால் அதையும் வெளியே எடுத்தால் தான் சரியாக கணக்கிட முடியும் என தெரிவித்தார்.
ஆனால் அதை செய்ய வாகன உரிமையாளர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவருக்க பெட்ரோல் போட்ட பம்ப் சரியான அளவில் தான் எரிபொருளை வெளியிடுகிறதா என சோதனை செய்யும்படி கேட்டார். இதையடுத்து 5 லிட்டர் பெட்ரோல் கேன் எடுத்து வரப்பட்டது. பம்பில் 5 லிட்டருக்கு செட் செய்து பெட்ரோல் நிரப்பபட்டது. அப்பொழது சரியான அளவில் பெட்ரோல் நிரம்பியது. ஆனால் அதை பார்த்தும் உரிமையாளர் திருப்தியடையவில்லை.
அவர் தனது காரில் அந்த பங்கில் இருந்த பெட்ரோலை நிரம்ப விரும்பவில்லை. இவர் வேறு பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி தனது காரில் நிரப்பி எடுத்து செல்ல விரும்பினார். இந்த வீடியோவை பார்த்து இந்தியன் ஆயில் நிறுவனம் ஸ்கேம் செய்ததாக பலர் கருதுகின்றனர். ஆனால் இது ஏமாற்று வேலை எதுவும் கிடையாது. இதற்கு முக்கியமான காரணம் வாகன தயாரிப்பு நிறுவனம் சொல்லும் கொள்ளவு என்பது குறைந்த பட்ச அதிக கொள்ளளவு தான்.
அதாவது எத்தனை லிட்டர் பெட்ரோல் போட்டால இந்த டேங்க் நிரம்பியதாக கருதலாம் என்பதற்கான அளவு தான். உண்மையில் பெட்ரோல் டேங்க் அதை விட அதிக பெட்ரோலை நிரம்பும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கிறது. முக்கியமான காரணம் பெட்ரோல் அதிக வெப்பத்தில் விரிவடையும், குறைவான வெப்பத்தில் சுருங்கும்.
இதனால் இரவு நேரம் முழு டேங்க் நிரம்பி காரை நிறுத்திவிட்டால் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாகும். போது எரிபொருள் அளவு அதிகமாகும். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க அதிக பெட்ரோலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது போக டேங்கில் உள்ள ஃபில்லர் நெக், மற்றும் அதில் இணைக்கப்பட்ட பைப்களில் பெட்ரோல் செல்லும் அந்த பெட்ரோல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இது தெரியாமல் பலர் எரிபொருள் நிரப்பும் போது குறிப்பிட்ட அளவை விட அதிக பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்களில் ஏமாற்றுவேலை நடப்பதாக கருதுகின்றனர். ஆனால் முழு கொள்ளவு என்பது கட் ஆஃப் செய்ய வேண்டிய அளவு தானே தவிற முழுமையா அவ்வளவு பெட்ரோலை தான் தாங்கும் என எந்த உத்தரவாதமும் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போன்று பெட்ரோல் பங்க்களில் டேங்க் அளவை விட அதிக பெட்ரோல் போடுவது என்பது சாதாரணவிஷயம் தான். இது காருக்கு கார் மாறுபடும். ஒரு முறை முழுமையாக டேங்க் மற்றும் பைப் பகுதிகளை காலி செய்து விட்டு முழுமையாக பெட்ரோலை நிரம்பினால் தான் முழு கொள்ளவு தெரியும். ஆனால் அப்படி நிரப்புவது ஆபத்தானது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சொன்ன கட் ஆஃப் அளவில் மட்டுமே பெட்ரோலை நிரப்புவது நல்லது.


Click it and Unblock the Notifications









