ஒரு கி.மீ பயணிக்க ஒரு ரூபாய் தான் செலவு! சாதா காரை இவி காராக மாறி சாதனை!

டில்லியில் 10 ஆண்டு பழைய டீசல் கார்கள், 15 ஆண்டு பழைய பெட்ரோல் கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பழைய வாகனங்களை பயன்படுத்தும் பலர் அதை ஸ்கிராப்பிற்கு அனுப்புகின்றனர். அல்லது வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் சிலர் வித்தியாசமாக யோசித்து அந்த காரை இவி காராக மாற்றியுள்ளனர்.இப்படியாக தனது தாத்தா பயன்படுத்திய சான்ட்ரோ காரை பேரன் இவி காராக மாற்றி சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

யூடியூபில் மேக்கிங் வித் மிஹிர் என்ற பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பழைய ஹூண்டாய் சான்ட்ரோ காரை ஒருவர் இவி காராக மாற்றியுள்ளது. இந்த பழைய சான்ரோ கார் அவரது தாத்தாவிற்கு சொந்தமான கார் ஆகும். இதில் தான் அவர் சிறுவனமாக இருந்த போது பள்ளிக்கு சென்றுள்ளார். கார் ஓட்டவும் இந்த காரில் தான் பயிற்சி பெற்றுள்ளார்.

Petrol To EV Car

இந்நிலையில் இந்த கார் பழையதாகியதால் இதை ஸ்கிராப் செய்யவோ, அல்லது விற்கவோ இவருக்கு மனது வரவில்லை. இதனால் இவர் இந்த காரை எலெக்ட்ரிக் காராக மாற்ற முடிவு செய்தார். இதையடுத்து இந்த காரை இவி காராக மாற்றம் பணியில் இறங்கினார்.

இப்படியாக மாற்றுவதில் இருக்கும் பெரிய சவால் காரை முழுமையாக வேலை செய்ய வைப்பது தான். ஒரு பெட்ரோல் இன்ஜின் இயங்கும் போது அது ஸ்டியரிங் பம்ப், ஏசி கம்பிரஷர் மற்றும் ஆல்டிரனேட்டர் ஆகிய கருவிகளுக்கு பவரை வழங்குகிறது. இது இன்ஜினின் டாப் பகுதியில் நடக்கிறது. கீழே உள்ள பகுதியில் சுழற்சி உருவாகிறது. இதனால் இந்த வாகனத்தின் கீழே உள்ள பகுதியை மட்டும் மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்தனர்.

Petrol To EV Car

அதன் பின்னர் அவர் எலெக்ட்ரிக் மோட்டாரை கீழ் பகுதியில் பொருத்தினார். பின்னர் லி்த்தியம் அயான் பாஸ்பேஸ்ட பேட்டரியை காரின் பின்புறம் பொருத்தினார். இந்த காரில் 72 வோல்ட் மோட்டாரை காரின் முன்பகுதியில் பொருத்தினார். இந்த மொத்தம மாற்றத்தையும் செய்ய 3 நாட்கள் தேவைப்பட்டது. இதை செய்த பிறகு பிரேக்கிங் பிரச்சனை வந்தது. கம்பஷன் இன்ஜினில் இன்ஜின் மூலம் பவர் பெறும் பிரேக் பூஸ்டர் இருந்தது. பெட்ரோல் இன்ஜின் இல்லாமல் இது செயல்பாடமல் பிரேக்கிங் பவர் குறைந்தது.

இதனால் பிரேக் பெர்ஃபார்மென்ஸை அதிரிக்க தனியாக எலெக்ட்ரிக்கல் பிரேக் பூஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 12 வோல்ட் பேட்டரி தனியாக பொருத்தப்பட்டது. அடுத்ததாக இ்நத பேட்டரியை சார்ஜ் ஏற்றி காரின் பேட்டரியில் இருந்து சார் ஏறும் கவையில் செட் செய்யப்ப்டடாலும் அது 12 வோல்ட் பவரை மட்டும் வழங்க வேண்டும். என்பதால் அதற்கான ஆல்டர்னேட்டரை பொருத்தினர்.

Petrol To EV Car

இதன் மூலம் இவர் காரை முழுவதுமாக தயார் செய்துவிட்டனர். இ்நத கார் முழு சார்ஜில் 80 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இந்த அதிகபட்சம் 60 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கார் மொத்தம் 900 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரு கி.மீ பயணிக்க ஒரு ரூபாய் தான் செலவாகும் என்பது கூடுதல் தகவல்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாதாரண பெட்ரோல் காரை இவி காராக மாற்ற மார்கெட்டில் ஏகப்பட்ட கிட் வந்துவிட்டது.இதன் மூலம் நீங்கள் உங்களிடம் இருக்கும் காரை இவிகாராக மாற்ற விரும்பினால் அதை நிச்சயம் செய்யலாம். ஆனால் செய்த பிறகு ஆர்டிஓவில் இது குறித்த முறையான அப்டேட்டை செய்ய வேண்டும் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 28, 2025, 18:10 [IST]
English summary
Petrol to ev car man converts old santro to electric
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X