இதை பண்ணா கார்ல 5 கி.மீ மைலேஜ் அதிகமாகும்! ஏகப்பட்ட பணத்தை மிச்சம் பண்ணலாம்
இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் தங்கள் பெட்ரோல் இன்ஜின் வாகனங்களை அதிக மைலேஜ் தரும் வாகனங்களை மாற்ற விரும்புகின்றனர். இதற்கு கொஞ்சம் பணம் செலவானாலும் பராவாயில்லை பெட்ரோல் செலவை குறைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பது தான் பெட்ரோல் காரை மைல்டு ஹைபிரிட் காராக மாற்றுவது.
மைல்டு ஹைபிரிட் என்றால் என்ன?
ஹைபிரிட் என்பது ஒரு வாகனம் ஒரே வேகத்தில் பெட்ரோல் இன்ஜின் மூலமும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலமும் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் மைல்டு ஹைபிரிட் என்பது பெரும்பாலான வாகனத்தின் இயக்கம் பெட்ரோல் இன்ஜின் மூலமும், அதற்கு உதவி செய்யும் வகையில் மோட்டார் வாகனமும் இயங்கினால் அது மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் ஆகும்.

img : Honda City Hyrbid Car
இது எப்படி வாகனத்தின் மைலேஜை அதிகரிக்கும்?
உதாரணமாக நீங்கள் நெடுஞ்சாலையில் செல்கிறீர்கள் என்றால் வாகனம் மெல்ல மெல்ல வேகம் எடுக்கும் நிலையில் நீங்கள் 50 கி.மீ வரை செல்லும் வரை பெட்ரோல் இன்ஜினில் மட்டும் இயங்கும் அதற்கு மேல் வேகம் கூடும் போது அதை கூட்ட எலெக்ட்ரிக் மோட்டார் உதவி செய்யும். நீங்கள் 70 கி.மீ வேகத்தில் பயணிக்கிறீர்கள் என்றால் 50 கி.மீ வேகத்திற்கு மட்டுமே பெட்ரோல் செலவாகும் கூடுதல் 20 கி.மீ வேகம் எலெக்ட்ரிக் மோட்டாரில் கிடைக்கும். இதனால் பெட்ரோல் செலவு குறையும்.
சாதாரண காரை ஹைபிரிட் காராக மாற்றலாமா?
நிச்சயமாக மாற்றலாம். நீங்கள் கொஞ்சம் செலவு செய்தால் போது உங்கள் வாகனத்தில் ஏற்கனவே இருக்கும் பெட்ரோல் இன்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டாரை இணைத்து உங்கள் வாகனத்தை ஹைபிரிட் வாகனமாக மாற்ற முடியும். இதை செய்தால் நிச்சயம் மைலேஜ் அதிக அளவில் கிடைக்கும். நீங்கள் பணத்தை மிச்சம் செய்யலாம்.

img : Maruti Grand Vitara Hybrid Car
ஹைபிரிட் வாகனமாக மாற்ற முக்கியமாக வாங்க வேண்டிய பாகங்கள் என்ன?
ஹைபிரிட் வாகனமாக மாற்றும் போது நீங்கள் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார், அதற்கு பவர் வழங்க பேட்டரி பேக், பேட்டரியை சார்ஜ் ஏற்றும் கருவி, மற்றும் தேவையில்லாத நேரத்தில் சார்ஜ் குறைவதை குறைக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், இதற்கான கண்ட்ரோலர் ஆகியவைற்றை பொருத்த வேண்டும். இது போக பக்க உபகரணங்களையும் வாங்க வேண்டியதுவரும்.
எவ்வளவு செலவாகும்?
தற்போது உள்ள பெட்ரோல் காரை, ஹைபிரிட் காராக மாற்றுவதற்கு குறிப்பிட்ட தொகை செலாவாகும் ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு மாடலுக்கும் இந்த தொகை மாறபடலாம். தோராயமாக சொல்ல வேண்டும் என்றால் ரூ1-2 லட்சம் வரை செலவாகும். இந்த கிட்கள் மார்கெட்டி்ல வாரண்டியுடன் கிடைக்கின்றன அதை வாங்கி பொருத்தினால் நிச்சயம் நீடித்து உழைக்க வாய்ப்புள்ளது.

img: innova HyCross Hybrid Car
எவ்வளவு பணத்தை மிச்சம் செய்யும்?
உங்கள் வாகனத்தை நீங்கள் ஹைபிரிட் வாகனமாக மாற்றினால் தற்போது கிடைக்கும் மைலேஜிலிருந்து 25-30 சதவீதம் வரை மைலேஜ் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் கார் தற்போது 17 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது என்றால், உங்கள் வாகனத்தை ஹைபிரிட்டாக மாற்றிய பிறகு 5 கி.மீ கூடுதலாக, அதாவது 22 கி.மீ வரை மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதை பொருத்தினால் லாபமா?
இதுவரை 17 கி.மீ மைலேஜ் குடுத்த வாகனம் 22 கி.மீ மைலேஜ் தரும் என்றால் நீங்கள் மாதம் 1000 கி.மீ பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் மாதம் தற்போது 59 லிட்டர் பெட்ரோல் போடுவீர்கள் அதாவது ரூ5,900 பெட்ரோல் செலவாகும். இதுவே ஹைபிரட்டாக மாற்றினால் 45 லிட்டர் பெட்ரோல் போட வேண்டியது வரும் ரூ4500 தான் பெட்ரோல் செவாகும். மாதம் சுமார் ரூ1400 மிச்சமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைபிரிட் வாகனமாக உங்கள் காரை மாற்றவது உங்களுக்கு லாபமானது மட்டுமல்ல அதே நேரம் சுற்றுசூழலுக்கும் நல்லது. இதனால் பழைய வாகனத்தை ஹைபிரிட் வாகனமாக மாற்றுவதை பற்றி சிந்தியுங்கள் நிச்சயம் உங்களுக்கு பலனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









