பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் கார்களை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டு கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமையன்று (ஜூன் 27) மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

எனவே பெட்ரோலில் இயங்க கூடிய காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 6.50 ரூபாயை செலவிட்டாக வேண்டிய சூழலுக்கு மும்பை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடுகையில் இது 550 சதவீதம் அதிகம் ஆகும். அதே நேரம் சிஎன்ஜி காருடன் ஒப்பிடும்போது இது 160 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

பெட்ரோல் கார் மட்டுமல்லாது, டீசல் காரில் பயணிப்பதும் கூட தற்போது மக்களுக்கு பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறது. ஏனெனில் ஒரு லிட்டர் டீசல் விலை 96.42 ரூபாயாக உயர்ந்துள்ளது. டீசல் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 5 ரூபாய் செலவாகிறது. அதே நேரத்தில் சிஎன்ஜி காரில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க 2.50 ரூபாய் மட்டுமே செலவாகிறது.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

இவை அனைத்தையும் விட எலெக்ட்ரிக் கார்கள்தான் மிகவும் சிக்கனமானவை. ஏனெனில் எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆட்டோமொபைல் துறையினர் இந்த தகவல்களை தற்போது தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

எனவே மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்கள், சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சிஎன்ஜி விலையும், மின்சார விலையும் மிகவும் குறைவாக இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியிருப்பதே இதற்கு காரணம்.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

மும்பை பெருநகர பகுதியில் ஒரு கிலோ சிஎன்ஜி-யின் விலை 49.40 ரூபாய் ஆக உள்ளது. அதே சமயம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒரு யூனிட்டிற்கு சுமாராக 6 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவு குறைவாக இருப்பதால், அந்த வாகனங்களுக்கு மாற பலர் திட்டமிட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

குறிப்பாக ஓலா, உபேர் போன்ற கேப் நிறுவனங்களுக்கு கார் ஓட்டுபவர்கள் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகமாக மாறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கு குறைந்த செலவே ஆகும். அத்துடன் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாது.

பெட்ரோல், டீசல் போட்டு சொத்தே அழிஞ்சிரும் போல! மின்சார கார் இருந்தா ஒரு கிமீ-க்கு இவ்வளவு பணம் மிச்சம் ஆகுமா?

இதுபோன்ற காரணங்களால் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மத்திய, மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில், மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு போன்றவை அடங்கும்.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Monday, June 28, 2021, 21:03 [IST]
English summary
Petrol vs Diesel vs CNG vs Electric Car: Running Costs Comparison. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+