1.6 கிமீ ஓடி ஆச்சரியப்படுத்திய பனிக் கட்டிகளால் ஆன பிக்கப் டிரக்!

By Saravana

பனி சிற்பங்களை் எப்போதுமே நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயங்கள்தான். அந்த வகையில், பனிக் கட்டிகளால் ஒரு பிக்கப் டிரக்கை உருவாக்கியுள்ளனர் கனடா நாட்டை சேர்ந்த நிபுணர்கள்.

கனடியன் டயர் என்ற நிறுவனம் பேட்டரி விளம்பரத்துக்காக வித்தியாசமான விளம்பரம் ஒன்றை எடுக்க நினைத்தது. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த பனிக் கட்டி பிக்கப் டிரக். அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? இந்த பிக்கப் டிரக்கை குறிப்பிட்ட தூரம் ஓட வைத்து அசத்தியிருக்கின்றனர்.

பிக்கப் டிரக் மாடல்

பிக்கப் டிரக் மாடல்

2005ம் ஆண்டு ஜிஎம்சி சில்வர்டோ பிக்கப் டிரக்கின் ஃப்ரேமில் பனிக் கட்டிகளை அடுக்கி ஒன்றிணைத்து இந்த பிக்கப் டிரக்கை உருவாக்கியுள்ளனர். ஐஸ்கல்ச்சர் என்ற நிறுவனத்தின் நிபுணர்கள் கைவண்ணத்தில் இந்த பிக்கப் டிரக் உருவாகியுள்ளது.

 பனிக்கட்டி

பனிக்கட்டி

5,000 கிலோ பனிக் கட்டிகளை கொண்டு இந்த பிக்கப் டிரக்கை செதுக்கினர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

கனடியன் டயர் நிறுவனம் தனது கடும் குளிரிலும் தனது பேட்டரியின் செயலாற்றை எடுத்துரைக்கும் விதமாக இந்த பனிக்கட்டி டிரக்கை உருவாக்கி அதனை வீடியோவாக எடுத்துள்ளது. இதற்காக, அந்த பிக்கப் டிரக்கை மணிக்கு 20 கிமீ வேகத்தில் 1.6 கிமீ தூரம் வரை ஓட வைத்து படப்பிடிப்பு நடத்தினர். உள்ளூர் ஹாக்கி போட்டியின்போது இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.

விசிறிகள்

விசிறிகள்

எஞ்சினிலிருந்தும், காரின் உட்பகுதியிலிருந்தும் உருவாகும் வெப்பக் காற்றை வெளியேற்றுவதற்காக சிறப்பு மின் விசிறிகள் இந்த பிக்கப் டிரக்கில் பொருத்தப்பட்டிருந்தது.

 சவால்

சவால்

இது மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருந்ததாக ஐஸ்கல்ச்சர் நிறுவனத்தின் தலைவர் ஹெய்தி பேலி தெரிவித்தார். பிக்கப் டிரக் ஓடியபோது பனி உருகும் நேரத்தை முன்கூட்டியே கணித்து இந்த விளம்பரத்தை வெற்றிகரமாக பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

44 மணிநேரம்

44 மணிநேரம்

அனைத்தும் முடிந்த பின்னர் கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த அந்த பிக்கப் டிரக்கில் இருந்த பனிக்கட்டிகள் முழுமையாக உருகுவதற்கு 44 மணி நேரம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2014, 16:04 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+