அம்பானியின் 10கோடி ரூபா காரின் படங்கள் வெளியாகி இருக்கு.. இந்த காரை பாத்தீங்க உங்க மனசு உங்க கிட்ட இருக்காது!
உலக புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான ஃபெராரி (Ferrari) தயாரித்த முதல் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் புரோசாங் (Purosangue) ஆகும். இது ஓர் அதிவேக திறனை வெளிப்படுத்தம் எஸ்யூவி ரக காரும்கூட. இந்த காரையே இந்தியாவில் ஒரு சிலரே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்தியாவின் மற்றும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. அவருக்கு சொந்தமான ஃபெர்ராரி புரோசாங் சூப்பர் எஸ்யூவி காரின் படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 10 கோடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய விலை உயர்ந்த காரையே முகேஷ் அம்பானி தன்னுடை ஜியோ கார் கராஜில் சமீபத்தில் இணைத்திருக்கின்றார். இதன் தெளிவான படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் கேமிராவின் கண்களில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்த ஷாருக்கான விமான நிலையத்தில் டிராப் செய்ய இந்த காரையே அம்பானி பயன்படுத்தி இருந்தார்.
ஷாருக்கான் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்திருந்தேபோதே அவருக்கு அந்த கார் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, அந்த காரை பெரிய அளவில் படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. காரை அங்கங்கமாக புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு இருக்கின்றனர்.

ஃபெர்ராரி புரோசங் ஓர் 4 டோர்கள் கொண்ட எஸ்யூவி ரக கார் ஆகும். மொத்தமாக இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். இத்துடன் பூட் ஸ்பேஸ் (boot space)-ம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 373 லிட்டர் பூட் ஸ்பேஸையே இந்த கார் கொண்டிருக்கின்றது.
இது எஸ்யூவி ரக காராக இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றத்தை பிரதிபலிக்க அது தவறவில்லை. மேலும், காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் உருவ அமைப்பே இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. காரில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து கதவுகளும் மோட்டாரால் திறக்கும் மற்றும் மூடும் வசதியைக் கொண்டிருக்கின்றது.

இந்த காரின் பின் பக்க கதவுகள் பின் பக்கத்திலேயே இணைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே மிகவும் விசாலமாக இதனை திறந்துக் கொள்ள முடியும். இவ்வாறு திறப்பதனால் பயணிகளால் இந்த காருக்குள் சுலபமாக ஏறி-இறங்கிக் கொள்ள முடியும். ஃபெராரி புரோசாங் எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310 கிமீ ஆகும்.
6.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே புரோசாங்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 725 பிஎஸ் மற்றும் 716 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த அதிக திறனைப் போலவே இந்த கார் மாடல் அதிக லக்சூரியை வழங்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது.

இந்த கார் மாடலை லம்போர்கினி உருஸ் எஸ்யூவி மற்றும் அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக ஃபெர்ராரி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதேவேளையில், முகேஷ் அம்பானி இடத்தில் இதுபோன்று நூற்றுக்கும் அதிகமான விலை உயர்ந்த மற்றும் சூப்பர் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, ஃபெராரி நிறுவனத்தின் சூப்பர் கார்களே அவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ரோமா, ஸ்ட்ரேடில், 812 சூப்பர் ஃபாஸ்ட், 488 ஜிடிபி, பிஸ்தா மற்றும் போர்ட்டோஃபினோ ஆகியவையே பயன்பாட்டில் இருக்கின்றன. இதுபோன்று அவரிடத்தில் இன்னும் பல வெளியுலகம் அறியாத கார் மாடல்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் ஃபெராரி புரோசாங் எஸ்யூவி காரை டெலிவரி பெற்றவர் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். பூபேஷ் ரெட்டி என்பவரை இந்தியாவின் முதல் புரோசாங் காரை வாங்கியவர் ஆவார். நீரோ டேடோனா எனும் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட புரோசாங் காரையே அவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









