மலைப் பாதையில் ரேஸ்... பைக்ஸ் பீக் பந்தயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்...

Written By: Krishna

கோயில் திருவிழாக்களிலும், சர்க்கஸ் கூடாரங்களிலும் மோட்டார் பைக் மற்றும் கார் சாகச விளையாட்டுகளை நம்மில் பலர் பார்த்திருப்போம். மரணக் கிணறு என்று அதற்கு பெயர் வைத்திருப்பார்கள். நான்கு அல்லது 5 வாகனங்கள் ஒரு குழிக்குள் வேகமாக சுற்றி வரும். பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் விளையாட்டு அது. ஆனால், அதைக் காட்டிலும் மரண பயத்தை ஏற்படுத்தும் ரேஸ் ஒன்று உள்ளது.

ஹில் கிளிம்ப் எனப்படும் மலைச் சரிவான பாதையில் காரை வேகமாக ஓட்டிச் செல்லும் ரேஸ்தான் அது. கரணம் தப்பினால் மரணம் என்னும் ரேஞ்சுக்கு செம த்ரி்ல்லான அனுபவத்தை அளிக்கும் அந்த சாகசப் பந்தயங்கள்.

பைக்ஸ் பீக்

அப்படி ஒரு ரேஸ் அமெரிக்காவின் கொலாரேடோ பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும். பைக்ஸ் பீக் எனப்படும் அந்த ஹில் கிளிம்ப் ரேஸ் உலகப் பிரசித்தமானது. கடந்த 1916-ஆம் ஆண்டு முதல் இந்த ரேஸ் நடந்து வருகிறது. இந்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழா வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது.

பைக்ஸ் பீக் ரேஸ் பாதை மொத்தம் 12.42 மைல் தொலைவு கொண்டது. 156 வளைவுகள் அதில் இருக்கும். கரடுமுரடான மலையாக இருந்த அப்பகுதியில்தான் இதற்கு முன்னர் பந்தயங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அங்கு கடந்த சில ஆண்டுகளாக சாலை அமைக்கப்பட்டன. 2011-ஆம் ஆண்டு முதல்தான் சாலையில் பைக்ஸ் பீக் ரேஸ்கள் நடக்கத் தொடங்கின.

மொத்தம் 9 நிமிடங்களில் சுற்றை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி. இந்த ஆண்டு நடைபெற்ற ரேஸில் ரோமைன் டுமாஸ் என்ற கார் பந்தய வீரர் பரிசை வென்றார். நோர்மா எம் 20 ஆர்டி லிமிடெட் எடிசன் ரேஸ் காரில், 8 நிமிடங்கள் 51.54 விநாடிகளில் அவர் சுற்றை நிறைவு செய்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு செபாஸ்டின் லோயப் என்ற வீரர் 8 நிமிடங்கள் 13 விநாடிகளில் இலக்கை அடைந்ததே இன்று வரை சாதனையாக உள்ளது. பைக்ஸ் பீக் ரேஸில் பங்கேற்ற பெரும்பாலான கார்கள் 1,000 பிஎச்பி திறன் கொண்டவையாக இருந்தன.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக பைக் மற்றும் கார் ரேஸ்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாம் போட்டியை நடத்தும் நிர்வாகம்.

நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும், பைக்ஸ் பீக் ரேஸ்களின் விடியோக்களைப் பார்த்து வியப்புடன் ரசிக்கலாம் வாருங்கள்..

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Pikes Peak Celebrates 100 Years Of Competition In 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark