பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க... இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு...

விமானங்களை டேக் ஆஃப் செய்யும் போது விமானிகள் 50/70 என்ற விதியைப் பின்பற்றுகிறார்கள். அப்படி என்றால் என்ன? இதனால் என்ன பலன்? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

நாம் எல்லோரும் வாழ்நாளில் ஒருநாளாவது விமானத்தில் பயணித்திருப்போம். குறைந்த பட்சம் விமானம் பறப்பதை வேடிக்கையாவது பார்த்திருப்போம். விமானங்கள் தரையிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்க துவங்குவதும், பறந்து வரும் விமானம் லேண்ட் ஆவதையும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இது எல்லாம் எப்படி அசால்டாக செய்கிறார்கள்? இதற்குப் பின்னால் எவ்வளவு தொழிற்நுட்பங்கள் இயங்கும்? எனப் பல கேள்விகள் நம் மனதில் பிறக்கும் உண்மையிலேயே விமானத்தை டேக் ஆஃப் செய்வதற்கும் லேண்ட் செய்வதற்கும் பின்னால் பலர் பணியாற்றினாலும், இந்த விஷயத்தில் உண்மையில் பைலட்கள் தான் ஹீரோக்கள்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

விமானம் டேக் ஆஃப் ஆகும் போது எல்லா நேரமும் ஒரே வேகத்தில் செல்வதன் மூலம் விமானத்தை டேக் ஆஃப் செய்து விட முடியாது. எல்லா விமானங்களுக்கும் ஒரே விதமான டேக் ஆஃப் இருக்காது. ஒவ்வொரு விமானத்திற்கும் ஒவ்வொரு விதமான டேக் ஆஃப் இருக்கும். ஒரு விமானத்தின் டேக் ஆஃப் என்பது அந்த விமானத்தின் எடை, அளவு, காற்று அடிக்கும் திசை, காற்றின் வேகம் ஆகியவற்றை கணக்கிட்டுத்தான் முடிவு செய்யப்படுகிறது.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இவ்வளவு விஷயங்களையும் கணக்கிட்ட பின்பு விமானம் எவ்வளவு வேகத்திற்கு மேல் பயணித்தால் விமானத்தை டேக் ஆஃப் செய்து விட முடியும் என முன்னரே கணக்கிடப்படும். விமானங்கள் விமானத்தை ஓடுபாதைக்குக் கொண்டு சென்ற பின்பு முதல் வேலையாக இதைத் தான் கணக்கிடுவார்கள்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இந்த வேகம் என்பதை நாட்ஸில் கணக்கிடுவார்கள். உதாரணமாக ஒரு விமானம் 80 நாட்ஸ் வேகத்தில் சென்றால் தான் டேக் ஆஃப் செய்ய முடியும் என்றால் அந்த விமானம் ஓடுபாதையில் கடைசிக்குச் செல்வதற்குள் 80 நாட்ஸ் வேகத்தை எட்டிப் பிடித்துவிட வேண்டும். இங்கு தான் விமானிகளின் திறமை இருக்கிறது.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இதில் ஏதாவது சொதப்பல் நடந்துவிட்டால் விமானத்தின் ஓடு பாதையின் முடிவில் விமானம் விபத்தில் சிக்கிவிடும். ஒவ்வொரு முறை விமானம் டேக் ஆஃப் செய்யப்படும் போதும் இந்த ஆபத்து இருக்கிறது. இருந்தாலும் இப்படியா விபத்துக்கள் அதிகம் நடந்ததில்லை. பெரும்பாலும் பயிற்சியில் தான் இப்படியான விபத்துக்கள் நடக்கும்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இந்த விபத்துக்களைத் தவிர்க்க விமானிகள் 50/70 என்ற விதிமுறையைப் பின்பற்றுவார்கள். இந்த விதிமுறையைப் பின்பற்றுவது மூலம் ஒன்று விமானம் பாதுகாப்பாக டேக் ஆஃப் ஆகும். அல்லது டேக் ஆப்பைப் பாதியில் முடித்துக்கொண்டு டேக் ஆஃப் ஆகாமல் திரும்ப வந்து அடுத்த டேக் ஆஃப்பிற்கு முயற்சி செய்யலாம்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இந்த விதிமுறையைப் பின்பற்றுவதால் விபத்துக்கள் நடப்பதைத் தவிர்க்க முடியும். இந்த விதிமுறை நாம் முன்பே சொன்னது போல 50/70 விதிமுறை எனச் சொல்லியிருந்தோம். அதாவது விமானத்தின் ஓடுபாதையில் 50 சதவீதத் தூரத்தைக் கணக்கும் போது விமானத்தின் டேக் ஆஃப் வேகத்தின் 70 சதவீத வேகத்தை எட்டிப் பிடித்திருக்க வேண்டும்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இப்படிச் செய்தால் விமானம் பாதுகாப்பாக விமானத்தின் ஓடுபாதை முடியும் முன்பே பாதுகாப்பான இடத்தில் டேக் ஆஃப் ஆகிவிடும். அப்படி விமானி ஓடுபாதையில் விமானத்தை ஓட்டி வரும் போது 50 சதவீத தூரத்தைக் கடந்த பின்பும் விமானத்தின் டேக் ஆஃப் வேகத்தில் 70 சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்றால் உடனடியாக டேக் ஆஃப்பை ரத்து செய்துவிட்டு விமானத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பது விமானிகளுக்குத் தெரிந்த விதி.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

அதாவது விமானத்தின் டேக் ஆஃப் வேகம் 80 நாட்ஸ் என வைத்துக்கொண்டால் அதில் 70 சதவீதம் 56 நாட்ஸ், விமானத்தின் ஓடுபாதையில் 50 சதவீதத்தை நடக்கும் போது 56நாட்ஸ் வேகத்திற்கு மேல் விமானம் சென்றால் பாதுகாப்பாக டேக் ஆஃப் ஆகிவிடும். இல்லை என்றால் விமானம் மீண்டும் டேக் ஆஃப் பணியை முதலிருந்து துவங்க வேண்டும்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

இப்படிச் செய்வதன் மூலம் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி விபத்தில் சிக்குவதைத் தவிர்க்க முடியும். இந்த விதியை ஒவ்வொரு விமானியும் மிகக் கட்டாயமாக பின்பற்றுவார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. விமானத்தின் ஓடுபாதையில் 50 சதவீதம் எது என்ற மார்க் ஓடுபாதையில் இருக்காது.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

விமானிகளுக்கு விமானம் புறப்படும் முன்பே ஓடுபாதைக்கான மேப் வழங்கப்பட்டிருக்கும். அதில் விமானிகள் 50 சதவீதத்தைக் கணக்கிட்டு அவர்களாகவே ஒரு மார்க்கை வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக நடுவே ஏதாவது டாக்ஸிவே இருந்தால் அதை மார்க்காக வைத்துக்கொள்ளலாம்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

அல்லது பக்கவாட்டில் ஏதாவது பில்டிங் இருந்தால் அதை மார்க்காக வைத்துக்கொள்ளலாம்.இது எல்லாம் சரியாக 50 சதவீதமாக ஓடு பாதை மார்க்காக இல்லாவிட்டாலும் ஒரு உத்தேசமான மார்க்காக இருக்கும். அப்படி இல்லை என்றால் மற்றொரு வழியும் இருக்கிறது. விமானத்தின் ஓடு பாதையில் 1,2,3 என நம்பர் வைக்கப்பட்ட பலகைகள் இருக்கும்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

அது விமானத்தின் ஓடுபாதையில் இன்னும் எவ்வளவு அடி தூரம் இருக்கிறது என்பதைக் குறிப்பதாகும். விமானத்தின் ஓடு பாதையில் 1 என இருந்தால் 1000 அடி இருப்பதாகவும், 2 என இருந்தால் 2000 அடி இருப்பதாகவும்,3 என இருந்தால் 3000 அடி இருப்பதாகவும் அர்த்தம். அதைக் கணக்கிட்டு மையப்பகுதியைக் கணக்கிட்டுக்கொள்ள முடியும்.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

50/70 ரூல்ஸ்படி சென்றால் தான் விமானம் விபத்திற்குள்ளாகாது. அதை மீறினால் விபத்தில் சிக்கும் என அர்த்தம் கிடையாது. விமானம் விபத்தில் சிக்காமல் இருக்கும் மார்க் தான் இந்த விதிமுறை. சில நேரம் விமானிகளில் திறமையால் விமானம் 50/70 ரூல்ஸில் இல்லாமலும் மிகப் பத்திரமாக டேக் ஆஃப் ஆன சம்பவங்களும் நடந்துள்ளன.

பூகம்பமே வந்தாலும் பைலட்கள் இந்த விதியை மீற மாட்டாங்க . . . இது தான் எல்லாத்துக்கும் பாதுகாப்பு . . .

ஆனால் அது எல்லாம் ரிஸ்க். அதனால் தான் விமானிகள் கட்டாயம் 50/70 ரூல்ஸை பின்பற்றுவார்கள். அதில் டேக் ஆஃப் செய்ய முடியவில்லை என்றால் அடுத்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். உடனடியாக டேக் ஆஃப்பை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் டேக் ஆஃப் செய்த பகுதிக்கே திரும்பி விடுவார்கள்.

Article Published On: Tuesday, September 6, 2022, 12:57 [IST]
English summary
Pilot do follow 50 70 rules while flight takeoff know what it is
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out