"ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
நடுவானில் பறக்கும் விமானத்தில் விமானி ஒருவர் தனது காதலிக்கு தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இன்று உலகம் முழுவதும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் காதலர்கள் பலர் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதத்தை கொண்டாடி வருகிறார்கள். விதவிதமான விதங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களில் காதலை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கிறது.

சிலர் காதலை புனிதமான இடங்களில் வைத்து வெளிப்படுத்த நினைக்கிறார்கள், சிலர் கிராண்டாக வெளிப்படுத்த நினைக்கிறார்கள், சிலர் அதிக பணம் செலவு செய்து தங்கள் காதலை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தருணங்களில் தங்கள் காதலை வெளிப்படுத்தினால், அது தங்கள் காதலிக்கோ, காதலனுக்கோ பிடிக்கும் என நினைக்கிறார்கள்.
இப்படியாக விமானி ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது தனது காதலிக்கு தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது விமான பயணத்தின் போது தனது காதலிக்கு காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

போலாந்து இந்த நாட்டைச் சேர்ந்த விமானி போன்ற விமானத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண்ணான பியூலா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக நீண்ட நாட்கள் பழகி வந்துள்ளார்கள். இந்நிலையில் கேப்டன் கோன்ராடு தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தும் தருணத்தையும் தன்னை அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்த ஒரு நல்ல தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
இவர்கள் இருவரும் போலந்து நாட்டைச் சேர்ந்த எல்ஓடி என்ற விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் உள்ள வார்ஷா என்ற பகுதியில் இருந்து கார்வோக் என்ற பகுதிக்கு செல்லும் விமானத்தில் பணி ஒதுக்கப்பட்டது. இதுதான் சரியான தருணம் என உணர்ந்து கொண்டார். கோன்ராட் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார்.

இந்நிலையில் விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு விமானம் பாதுகாப்பாக ஆட்டோ பைலட் மோடுக்கு சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு தான் விமானத்தின் கட்டுப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இல்லை என உணர்ந்து கொண்ட கோன்ராட் நேராக பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வந்தார். அங்கு வந்து அங்குள்ள டெலிபோனை எடுத்து அனைவருக்கும் கேட்கும் படி ஸ்பீக்கரில் சில அறிவிப்புகளை மேற்கொண்டார்.
அதன்படி தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அந்த பெண் தன் வாழ்வில் முக்கியமானவர் எனவும், தாங்கள் எப்பொழுது சந்தித்துக் கொண்டோம் என்ற தங்கள் காதலை சுருக்கமாக எடுத்துக் கூறி தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கையில் ஒரு கூட்டத்துடன் கேட்டுக் கொண்டார். இதை கேட்டதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்த பியூலா விமானத்தின் பின்பகுதியில் இருந்து கோன்ராடை நோக்கி ஓடி வந்தார்.
கோன்ராடை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீரில் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என அவரது புரொபோசலுக்கு சம்மதம் செய்தார். பின்னர் கோன்ராடு தான் வாங்கி வந்த மோதிரத்தை பியூலாவிற்கு போட்டுவிட்டார். இந்த காட்சி காதலர்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் தருணமாக அமைந்திருந்தது. விமானத்தில் வந்த பயணிகள் பலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்திருந்தார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அழகான தருணங்களில் தங்கள் காதலன் அல்லது காதலிக்கு தங்கள் காதலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை வாழ்வில் மறக்க முடியாத தருணம் ஆகும். இப்படியாக விமானி ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது ஆட்டோ பைலட் மோடில் விமானத்தை போட்டு விட்டு தன் காதலிக்கு புரபோஸ் செய்து மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தமே செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications









