எகிப்து விமான விபத்துக்கு வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதலே காரணம்?

By Saravana

கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து எகிப்து நாட்டு தலைநகர் கெய்ரோ நோக்கி வந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து குறித்த காரணங்களை எகிப்து நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், விமானம் விபத்தில் சிக்கியதற்கு வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல் காரணமாக இருக்கும் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காரணம்

காரணம்

விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென 90 டிகிரி கோணத்தில் அது 15,000 அடி உயரத்திற்கு கீழே இறங்கியிருக்கிறது. மேலும், விமானத்தை பைலட்டுகள் கட்டுப்படுத்த முயற்சித்தபோது அது ஒரு வட்டமடித்துதான் கடலில் விழுந்துள்ளது.

சதி

சதி

இந்த விமான விபத்திற்கு தீவிரவாதிகளின் தாக்குதல் கூட காரணமாக இருக்கும் என்று கருதப்பட்டு வருகிறது. ஏனெனில், விமானத்தின் கழிவறையிலிருந்து முதலில் புகை வந்துள்ளது. இதனால், விமானத்தில் பயணித்தவர்களே வெடிமருந்து பொருட்களை கொண்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினர் புலனாய்வு செய்து வருகின்றனர்.

மர்மம்

மர்மம்

இந்த காரணங்கள் ஒருபுறம் இருக்க, விமானத்தை வேற்றுக்கிரகவாசிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் இந்த விமானம் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி கடலில் விழுந்துள்ளது.

பைலட்டுகள் தகவல்கள்

பைலட்டுகள் தகவல்கள்

விமானம் விபத்துக்குள்ளான பகுதி அருகே மர்ம பறக்கும் பொருள் ஒன்றை பார்த்ததாக, விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அதே பகுதி வழியாக சென்ற துருக்கி நாட்டு விமானத்தின் பைலட்டுகள் இருவர் கூறியிருக்கின்றனர்.

தாக்குதல்?

தாக்குதல்?

போட்ரம் நகரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு சென்ற அந்த துருக்கி விமானத்தின் பைலட்டுகள் இருவரும், விமானத்தை இஸ்தான்புல் நகரில் தரையிறக்குவதற்கு முன்னதாக 17,000 அடி உயரத்தில் பறந்தபோது மர்மபொருள் ஒன்று வானில் பறந்ததை தாங்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

மேலும், தங்கள் விமானத்தைவிட 2,000 அல்லது 3,000 அடி உயரத்தில் அந்த மர்மபொருள் பச்சை நிற ஒளியுடன் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.

மாயம்

மாயம்

சிறிது நேரத்தில் அந்த மர்மபொருள் மாயமாகியதாகவும், எனவே, அது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கும் என தாங்கள் நம்புவதாகவும், இஸ்தான்புல் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

 முடிச்சுப் போட்டு பார்த்தால்...

முடிச்சுப் போட்டு பார்த்தால்...

துருக்கி பைலட்டுகள் கூறியதை வைத்து பார்க்கும்போது, விபத்துக்குள்ளான எகிப்து ஏர் எம்எஸ்804 விமான விபத்திற்கும் அந்த மர்மபொருள் அந்த பகுதியில் சுற்றியதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக விமான விபத்து ஆய்வு நிபுணர்கள் கருதுகின்றனர்.

விமானி தகவல்

விமானி தகவல்

விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி கடைசியாக பேசியபோது, கழிவறை மற்றும் காக்பிட்டிற்கு கீழ் பகுதியில் புகை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவசரமாக தரையிறக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த விமானம் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

தீப்பிடித்த விமானம்

தீப்பிடித்த விமானம்

கடலில் விழுவதற்கு முன்னரே விமானம் முழுவதும் தீப்பிடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே, விமானம் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மின் கசிவு

மின் கசிவு

விமானத்தின் மின்சார சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதேநேரத்தில், அந்த மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்தால்தான் அது, வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதலா அல்லது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையா என்பது தெரிய வரும்.

 கருப்புப் பெட்டி

கருப்புப் பெட்டி

இதனிடையே, விமானம் விழுந்து பகுதியில் கருப்புப் பெட்டியை தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. அது கிடைத்தால்தான், விபத்துக்கான உண்மையான காரணத்தை ஓரளவு கண்டுபிடிக்க இயலும்.

விமான விபத்துகளும், மாயங்களும்... அவற்றின் அவிழாத மர்மங்களும்...!!

விமான விபத்துகளும், மாயங்களும்... அவற்றின் அவிழாத மர்மங்களும்...!!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Pilots ‘saw UFO shortly before tragic EgyptAir plane crash.
Story first published: Tuesday, May 24, 2016, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X