இன்ஸ்டால வீடியோ போட்டு சம்பாதித்தே 73 லட்ச ரூபாய் காரை வாங்கிய பிரபலம்! இவங்க இவ்வளவு சம்பாதிச்சிட்டாங்களா?

சமூகவலைதளங்களில் பிம்பாம் லைஃப்ஸ்டைல் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலம் ஹேர் ஆயில் தொழிலையும் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் சம்பாதித்து வரும் இவர்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான காஸ்ட்லியான லிமிடெட் எடிசன் கார் ஒன்றை புக் செய்துள்ளனர். இது குறித்த வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த கார் ரூ73.24 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக ஜோடியாக சேர்ந்து விலாக் செய்து டிரெண்ட் அதிகமாகி வருகிறது. இப்படியாக கடந்த 2020ம் ஆண்டு லாக் டவுணில் பல ஜோடிகள் பிரபலமானார்கள். அப்படியாக பிரபலமான ஜோடி தான் பிம்பாம் லைஃப்ஸ்டைல் என்ற பக்கத்தை நடத்தி வரும் ஜோடி. இவர்களுடன் இவர்களது பாட்டியும் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவர்கள் பிரபலமான நிலையில் முதலில் வீட்டிலேயே ஹேர் ஆயில் தயாரித்து விற்பனை செய்தனர்.

Pimpom Lifestyle Jeep Wrangler Car

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது தங்களது தொழிலை விரிவுபடுத்தினர். இன்ஸ்டாகிராம் மூலமாகவும், வெப்சைட் மூலமாகவும் மற்றும் பல வழிகளில் தங்களின் தயாரிப்பை விற்பனை செய்ய துவங்கினர். இந்நிலையில் இவர்களது தயாரிப்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வியாபாரம் பெரியதாக துவங்கியது. இந்நிலையில் இவர்கள் தற்போது இந்தியாவில் வெறும் 30 பேர் மட்டுமே வாங்ககூடிய அளவில் விற்பனைக்கு வந்துள்ள ஒரு லிமிடெட் எடிசன் காரை புக் செய்துள்ளனர்.

ஜீப் நிறுவனம் சமீபத்தில் தான் என் விராங்கிளர் வில்லீஸ் 41 ஸ்பெஷல் எடிசன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ஒரு லிமிடெட் எடிசன் காராக அறிமுகமாகியுள்ளது. இந்த காரை 30 வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்க முடியும் என அறிவித்துள்ள நிலையில் பிம்பாம் லைஃப்ஸ்டைல் பெயரில் இந்த கார் ஒன்று தற்போது புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pimpom Lifestyle Jeep Wrangler Car

விராங்கிளர் காரின் டூபிகான் வேரியன்டில் தான் இந்த லிமிடெட் எடிசன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின்
ஹூட் பகுதியில் 1941 என்ற ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது. இந்த காரின் கலர் ஆப்ஷனை பொருத்தவரை ஏற்கனவே இருக்கும் கலர் ஆப்ஷன் உடன் கூடுதலாக 41 கிரீன் என்ற கலர் ஷேடில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் கூடுதலாக பவர்டு சைடு ஸ்டெப்ஸ், கிராப் ஹேண்டில்கள், ஃப்ளோர் மேட்கள், முன்பக்கமும் பின்பக்கமும் டேஷ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 266 பிஎச்பி பவர் மற்றும் 400என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Pimpom Lifestyle Jeep Wrangler Car

இந்தகார் வெறும் 30 கார்கள் மட்டுமே இந்தியாவிற்கு வந்துள்ளது. அதில் ஒரு காரை தான் இவர்கள் வாங்கியுள்ளனர். இந்த கார் காஸ்ட்லியான காராக இருந்தாலும் இந்த காரை வாங்கும் அளவிற்கு இவர்களது வளர்ச்சி இருந்துள்ளது. பல பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் இந்த காரை இந்த இணையதளத்தில் பிரபலமான ஜோடி வாங்கியிருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லிமிடெட் எடிசன் கார்கள் எல்லாம் மிக அதிக ஆர்வம் கொண்ட ஆட்டோமெபைல் பிரியர்களாலேயே விரும்பபடுகிறது. இந்த கார் அதிகம் விருப்படும் காராக இருந்தாலும் இந்த காரை இவர்கள் விரும்பி தேர்வு செய்தது ஆச்சரியமான விஷயம் தான். இந்த காரை வாங்கும் போது இவர்கள் வெளியிடும் வீடியோவிற்காக பலர் காத்திருக்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 15, 2025, 12:45 [IST]
English summary
Pimpom lifestyle owner booked jeep wrangler car 41 special edition car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X