நெடுஞ்சாலைக்கு வரப்போகும் "பாகுபலி" வேலி! இரும்பு வேலியை விட இதான் பெஸ்ட் எப்படி தெரியுமா?
மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பாகுபலி முள்வேலிகளை அமைக்க முடிவு செய்துள்ளது. விலங்குகள் ரோட்டுக்குள் வந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க இந்த முடிவை நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்த மூங்கில்களால் ஆன பாகுபலி முள் வேலியை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் நெடுஞ்சாலைகளின் தூரம் குறைவு தான் ஆனால் அங்கு வாகனங்கள் வேகமாக செல்வதால் அதிக அளவு விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சாலையில் நடக்கும் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்திற்கான காரணங்களை அறிந்து அதை சரி செய்து மீண்டும் விபத்துக்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறது.

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான பகுதி ஊருக்கு வெளியே இருப்பதால் அப்பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் விலங்குகள் சாலை நடுவே குறுக்கே வருகின்றன இதனால் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விலங்குகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
இந்த விபத்தை குறைப்பதற்காக நெடுஞ்சாலைகளின் பக்கவாட்டு பகுதிகளில் வேலிகள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதில் வழக்கமான இரும்பு வேலிகளை அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான செலவும் அதிகமாக இருக்கும் அதே நேரம் இந்த இரும்பு முள் வேலி பெரிய பாதுகாப்பையும் வழங்குவதில்லை.

இது குறித்த ஆய்வு செய்த மத்திய அரசு மூங்கில்களால் செய்யப்பட்ட வேலிகளை அமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இந்த வகை வேலிகளை அமைப்பதற்கான செலவும் குறைவு அதே நேரத்தில் இது இரும்பு வேலிகளுக்கு நிகரான பாதுகாப்பையும் வழங்கும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த மூங்கில்களை கிரசோத் ஆயில் மூலம் டிரீட் செய்து. அதன் மேல்புறம் அதிக அடர்த்தி கொண்ட ஹைட்ரோ கார்பன் பாலித்தினை கொண்டு பூசியுள்ளனர். இதனால் இந்த மூங்கில் வேலி எக்காரணத்தைக் கொண்டும் தீப்பற்றிக் கொள்ளாது. அதேநேரம் இரும்பு வேலிகளுக்கு நிகரான பாதுகாப்பையும் வழங்கும். இந்த வேலிக்கு பாகுபலி வேலி என மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.

இந்த வேலியை மத்திய அரசு நேஷனல் ஆட்டோமேட்டிவ் டெஸ்ட் டிராக்கில் உள்ள ஃபயர் புரூப் டெஸ்டிங்கில் டெஸ்ட் செய்துள்ளது. இதில் இந்த வேலி கிளாஸ் 1 வகையில் பாஸ் ஆகியுள்ளது. அதாவது எப்பேர்பட்ட தீ பிடித்தாலும் அந்த தீயை இந்த வேலி பரப்பாது என நிரூபணம் ஆகி உள்ளது.
இந்த மூங்கில் பாகுபலி வேலி 50 முதல் 70% வரை ரீசைக்கிள் செய்யும் தன்மை கொண்டது. ஆனால் இரும்பு வெளியில் 30 முதல் 50 சதவீதம் வரையிலான ரீசைக்கிள் தன்மையைக் கொண்டதுதான். அனைத்து விதங்களிலும் இந்த மூங்கில் பாகுபலி வேலி இரும்பு வேலியை விட சிறப்பாக இருக்கும் என்பதால் மத்திய அரசு இந்த வேலியை விலங்குகள் ஊடுருவல் அபாயம் உள்ள நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தற்போது முதற்கட்டமாக இந்த பாகுபலி வேலி தேசிய நெடுஞ்சாலை எண் 30 செக்டார் 28 இல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இனி இந்தியா முழுவதும் இந்த முள்வேலிகளை நீங்கள் காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் நடக்கும் விபத்துகளை குறைக்க அந்த விபத்து நடக்கும் காரணத்தை கண்டறிந்து அதை முடிந்த அளவு குறைக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் இந்த பாகுபலி முள்வேலி. இந்த வேலியால் இனி நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் விலங்குகள் வந்து சிக்குவது குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
