விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

நவீன காலங்களில் தயாரிக்கப்படும் விமானங்கள் அனைத்தும் விமானிகள் இல்லாமல் தானாக பறக்க கூடியது என்ற பேச்சு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது உண்மை தானா?

நவீன காலங்களில் தயாரிக்கப்படும் விமானங்கள் அனைத்தும் விமானிகள் இல்லாமல் தானாக பறக்க கூடியது என்ற பேச்சு மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது உண்மை தானா? விமானிகள் இல்லாமல் விமானங்கள் பறப்பது சாத்தியம் தானா? என்பதை இந்த செய்தியில் பார்ப்போம் வாருங்கள்.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

கடந்த 2012ம் ஆண்டு டெக்னாலஜி பற்றி செய்தி வெளியிடக்கூடிய இனணயதளம் ஒன்று ரேபாட்டிக்ஸ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் "ஆட்டோ பைலட்" என்ற தொழிற்நுட்பம் தான் 787 ஜெட் விமானத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்தது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

மேலும் இந்த விமானங்களில் விமானிகள் உட்காந்து இந்த ஆட்டோ பைலட் எப்படிவேலை செய்கிறது என்பதை பார்த்து மட்டும் தான் கொண்டிருப்பார்கள் என்ற ரீதியில் எந்த செய்தி வெளியாகியிருந்தது. இது மக்கள் மத்தியில் அதிகமாக பரவியது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

அமெரிக்காவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையும் போயிங் ரக விமானங்களில் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், ஏர்பஸ் ரக விமானங்களில் அதை விட குறைவான நேரங்களே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், மற்ற நேரங்களில் விமானங்கள் தானாகவே இயங்குவதாகவும் கூறியிருந்தது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

மேலும் விமானிகள் அவசர காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்வும், தேவைப்பட்டால் விமானத்தை தன் கட்டப்பாட்டிற்கு கொண்டு வரவும் மட்டுமே உள்ளனர். என்ற ரீதியில் இந்த செய்திகள் வெளியாகியிருந்தது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

இது குறித்து சில விமான நிறுவனங்களிடமும், விமானிகளிடமும் கேட்டபோது முற்றிலுமாக மறுத்துள்ளனர். விமானிகள் தான் விமானத்தை இயக்குகின்றனர் என்றும் விமானிகள் இல்லாமல் விமானங்கள் தானாக இயங்கும் திறனுடன் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

அதே நேரத்தில் விமானத்தை முழுவதும் விமானிதான் இயக்குகிறார் என்றும் சொல்லி விட முடியாது. 1930களில் மட்டுமே அவ்வாறான தொழிற்நுட்பம் இருந்தது. அவ்வாறான விமானங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

தற்போதைய விமானங்களில் சில ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பங்கள் இருக்கிறது. ஆனால் விமானிகளின் கட்டுப்பாட்டில் தான் அதுவும், இருக்கும். தானா பறக்கும் தொழிற்நுட்பமும் இருந்தாலும் அதை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்த முடியாது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

பலர் ஆளில்லா விமானங்கள் இயக்கப்படுவதும், பயணிகள்/சரக்கு விமானங்கள் இயக்கப்படுவதும் ஒரே தொழிற்நுட்பம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆளில்லா விமானங்களை ரிமோட் மூலம் இயக்குவது போல் சாதாரண விமானங்களையும் அவ்வாறு இயக்க முடியும் என நினைக்கின்றனர்.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

ஆனால் அது தவறு. இந்த இரு தொழிற்நுட்பங்களும் வேறு வேறு, ஆளில்லா விமானங்களில் உள்ள தொழிற்நுட்பத்தின் படி பயணிகள் விமானங்களை இயக்க முடியாது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

தற்போதுள்ள விமானங்களை விமானங்களை தரையிறக்குவதற்கு "ஆட்டோலேண்ட்" என்ற தொழிற்நுட்பம் உள்ளது. இந்த தொழிற்நுட்பம் ஒரு சதவீத்திற்கும் குறைவான வாய்ப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

இதுவரை உலகில் விமானத்தை டேக் ஆப் செய்ய இதுவரை எந்த தொழிற்நுட்பமும் இல்லை, எல்லா விமானங்களும், மேனுவலாக மட்டுமே டேக் ஆப் செய்யப்படுகிறது.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நவீன விமான தொழிற்நுட்பத்தையும், நவீன அறுவை சிகிச்சை கருவியையும் ஒப்பிடலாம் தற்போது உள்ள அறுவை சிகிச்சை கருவி அறுவை சிகிச்சையில் போது என்ன நடக்கிறது என டாக்டருக்கு சொல்லும், அதை பொருத்து டாக்டர் பரிந்துரைப்பர் அதை கட்டளையாக ஏற்று அறுவை சிகிச்சை செய்யும்.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

இது போன்று தான் விமானங்களில் நடப்பது, விமானிக்கு வரும் கட்டளைகளை விமானிக்கு தெரிவிக்கும் அதை பொருத்து விமானிகள் கட்டளையிடுவர்கள் அதற்கு தகுந்தார்போல் விமானங்கள் செயல்படும்.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

தற்போது விமானி இல்லாமல் இயக்கும் தொழிற்நுட்பத்தை போயிங் நிறுவனம் தயாரித்து, அதை பரிசோத்தும் உள்ளது. எனினும் அந்த தொழிற்நுட்பம் பரிசோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

விமானி இல்லாமல் விமானம் பறக்குமா?

இனி உங்களிடம் விமானங்கள் தானாக தான் இயக்குகிறது. அவரச காலத்திற்கு மட்டுமே விமானிகள் இருக்கிறார்கள் என யாராவது உங்களிடம் சொன்னால் நம்பாதீர்கள் விமானிகள் இல்லாமல் இங்கும் விமானம் இதுவரையில்லை என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
WE ARE TOLD THAT PLANES BASICALLY FLY THEMSELVES. HOW TRUE IS THIS?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X