கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் க்ளாடிங் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா செல்டோஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய கார்களில் ஒரு ஒற்றுமையை கவனித்துள்ளீர்களா? பிளாஸ்டிக் க்ளாடிங்தான் (Plastic Cladding) அது. இந்த கார்கள் மட்டுமல்லாது கிட்டத்தட்ட அனைத்து எஸ்யூவி கார்களிலும் பிளாஸ்டிக் க்ளாடிங் வழங்குவது தற்போது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான ஆட்டோமொபைல் டிரெண்ட் இருக்கும். அதாவது ஐரோப்பாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் கார்களின் சொகுசு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். அதுவே இந்தியாவை எடுத்து கொண்டால், கார்களின் டிசைன், வசதிகள் ஆகிய அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் (கூடவே மைலேஜூம்).

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தற்போது அழகியல் குறித்து பார்க்கலாம். கார்களை அழகாக காட்டுவதற்காக பல்வேறு டெக்னிக்குகளை டிசைனர்கள் பயன்படுத்துகின்றனர். இதில், பிளாஸ்டிக் க்ளாடிங்கும் ஒன்று. தற்போது கிட்டத்தட்ட அனைத்து எஸ்யூவி ரக கார்களின் அனைத்து பக்கங்களிலும் இந்த பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் வழங்கப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் க்ளாடிங் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த பிளாஸ்டிங் க்ளாடிங்குகள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. பெரும்பாலும் கார்களை அழகாக காட்டுவதற்காக பிளாஸ்டிங் க்ளாடிங்குகள் பயன்படுகின்றன. கார்களை உண்மையில் இருப்பதை விட வலிமையாகவும், உறுதிமிக்கதாகவும் காட்டுவதற்கு பிளாஸ்டிங் க்ளாடிங் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும் காரின் உற்பத்தி செலவை ஓரளவிற்கு குறைப்பதற்கும் இந்த பிளாஸ்டிங் க்ளாடிங் உதவி செய்கிறது. ஏனெனில் பிளாஸ்டிங் க்ளாடிங்கின் விலை குறைவு. எனவே உற்பத்தி செலவு குறையும். இதன் மூலம் காருக்காக வாடிக்கையாளர் செலவிடும் தொகை சற்று குறையும். அத்துடன் கார் முரட்டுத்தனமாகவும் தோற்றமளிக்கும்.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களின் வெளிப்புறத்தில் பிளாஸ்டிங் க்ளாடிங் வழங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் மெதுவாக புரிந்து கொள்ள தொடங்கியுள்ளன. எனவே தற்போது செடான் ரக கார்களில் கூட இந்த பிளாஸ்டிங் க்ளாடிங்குகளை பார்க்க முடிகிறது. பிளாஸ்டிங் க்ளாடிங் பொருத்துவதில் ஏராளமான சாதகங்கள் இருக்கின்றன.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி குறைவான செலவில் காரை கம்பீரமாக காட்ட முடியும் என்பது முதல் சாதகம். வெளிப்புறத்தில் பொருத்தப்படும் பிளாஸ்டிங் க்ளாடிங் காரை முரட்டுத்தனமாக மட்டுமின்றி, மதிப்புமிக்கதாகவும் மாற்றுகிறது. ஒருவேளை விபத்து நடைபெற்றாலும் கூட, இந்த பிளாஸ்டிங் க்ளாடிங்குகளை எளிதாக மாற்றி கொள்ள முடியும்.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக பம்பர்களுடன் கூடிய பிளாஸ்டிக் க்ளாடிங் லேயர்களாக வருகிறது. எனவே சேதமடைந்த லேயரை மட்டும மாற்றினால் போதும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி பிளாஸ்டிக் க்ளாடிங் மலிவான விலையில் கிடைக்கிறது. எனவே அதை மாற்றுவதற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. மேலும் ஃபெண்டர்கள் துருப்பிடிப்பதையும் பிளாஸ்டிக் க்ளாடிங் தடுக்கிறது.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த உலகில் எந்தவொரு விஷயம் என்றாலும், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், ஒரு சில நன்மைகள் இருந்தால் கூடவே ஒரு சில தீமைகளும் இருக்கவே செய்யும். இதன்படி பிளாஸ்டிக் க்ளாடிங்குகளிலும் ஒரு சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக் க்ளாடிங்குகளால் பெரிய அளவில் எல்லாம் பாதகங்கள் இல்லை.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சுற்றிலும் பிளாஸ்டிக் க்ளாடிங் உடன் வரும் காரை நீங்கள் வாங்கி விட்டால், அதன் பராமரிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். காரை சுற்றிலும் வழங்கப்படும் பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் பெயிண்ட் இருக்காது. எனவே இந்த பிளாஸ்டிக் விரைவாக மங்கி போய் விடும். எனவே கார் விரைவாக பொலிவை இழந்து விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் பிளாஸ்டிக் க்ளாடிங்கில் இருக்கும் முக்கியமான பாதகம் என்றால் அது இதுதான். சரி, பிளாஸ்டிக் க்ளாடிங் உடன் வரும் காரை வாங்கலாமா? என்ற கேள்வியை கேட்டால், வாங்கலாம் என்பதுதான் பதில். ஏனெனில் பாதகங்களை விட சாதகங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. பிளாஸ்டிங் க்ளாடிங்கில் இருக்கும் குறையே அது விரைவில் மங்கி விடும் என்பதுதான்.

கார்களை சுத்தியும் கருப்பு கலர்ல ஏன் இப்படி ஒன்னு இருக்கு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த பிரச்னைக்கும் தீர்வுகள் இருக்கின்றன. இதற்கென லிக்யூட்கள் சந்தையில் கிடைக்கிறது. இவை பிளாஸ்டிக் க்ளாடிங்கில் மீண்டும் பளபளப்பை கொண்டு வர உதவி செய்கின்றன. இதன் மூலம் பிளாஸ்டிக் க்ளாடிங் புதியது போல் காட்சியளிக்கும். எனவே பிளாஸ்டிக் க்ளாடிங் உள்ள கார்களை தயங்காமல் வாங்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Plastic claddings on cars advantages and disadvantages
Story first published: Saturday, October 30, 2021, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X