டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

எக்ஸ்பிரஸ்வே சாலைகள் தொடர்பான பொது நல மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் விரைவான பயணத்திற்காக இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துரித கதியில் நடைபெற்றும் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் மீது வாகன ஓட்டிகளுக்கு எவ்விதமான அதிருப்தியும் கிடையாது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்கள்தான் வாகன ஓட்டிகளை பதற வைக்கின்றன.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

தற்போதைய நிலையில் இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களின் பர்ஸை பதம் பார்க்கும் விஷயமாகதான் டோல்கேட்களை வாகன ஓட்டிகள் பார்க்கின்றனர். பல்வேறு டோல்கேட்களில் விதிமுறைகளை ஒதுக்கி தள்ளி விட்டு கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

போதாக்குறைக்கு கழிப்பிடம், குடிநீர், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலத்தில் தேவைப்படக்கூடிய வசதிகள் எதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருப்பதில்லை என்பதும் வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இவை எதுவுமே இல்லாமல் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால்தான் டோல்கேட்கள் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

இப்படிப்பட்ட சூழலில், கேஎம்பி எனப்படும் குண்ட்லி-மானேசர்-பாவெல் (KMP - Kundli-Manesar-Pawal), குண்ட்லி-காஸியாபாத்-பாவெல் எக்ஸ்பிரஸ்வே மற்றும் கிழக்கு வெளிவட்ட விரைவு சாலை (ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே) மற்றும் மேற்கு வெளிவட்ட விரைவு சாலை (வெஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே) ஆகிய எக்ஸ்பிரஸ்வேக்களில், பெட்ரோல் பங்க்குகள், கழிப்பிடங்கள், ஆம்புலன்ஸ், அவசர கால வசதிகள், உணவகங்கள், போலீஸ் ரோந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI - National Highway Authority of India) உத்தரவிட வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமித் சாஹ்னி என்பவர் இந்த பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில், ''வெஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே சாலையை தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருவதாகவும், ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத சூழலிலும், டோல்கேட் கட்டணங்களை செலுத்தி வருவதாகவும்'' குறிப்பிடப்பட்டுள்ளது.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி அனூப் ஜெய்ராம் பாம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுதவிர ஹரியானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகமும் (HSIIDC - Haryana State Industrial and Infrastructure Development Corp Ltd) இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே நாடு முழுக்க உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் எண்ணம். நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் தலையீட்டின் பேரிலாவது இந்த பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Plea In Delhi High Court Seeks Basic Facilities On Expressways. Read in Tamil
Story first published: Friday, April 26, 2019, 15:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X