பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்க்கலாம்.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால்,பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் அடிக்கும்பொழுது பங்க் ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் பைப்பை இறுதி பகுதியில் கொஞ்சம் அமுக்கி பிரஷர் கொடுப்பார்கள்.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

இதனால் மீட்டரில் பெட்ரோல் அளவு ஓடிக்கொண்டே இருந்தாலும், வாகனத்திற்குள் எரிபொருள் நின்று, நின்றுதான் வரும். இதனால் ஒவ்வொரு வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்திவிடலாம்.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

கடந்த 2017ம் வருடம் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில் ஒரு சிப் பொருத்தப்பட்டு அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது சிறப்பு அதிரடி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

இதுபோன்று பல்வேறு மோசடிகளை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளில் தொடர் மோசடி நடப்பதாகவும், டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

இதை மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், மேலும் பெட்ரோல் அடிக்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சாஹ்னி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடக்கிறது. டிஜிட்டல் மீட்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகளை கொண்டு பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிக்கைகள், செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் அதிகமாக பரவி வருகிறது.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பெட்ரோல் பங்குகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி படுத்த வேண்டும். பெட்ரோல் பங்க்கில் நாம் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் அடிக்கும்பொழுது பங்க் இயந்திம் காட்டும் மீட்டர் மட்டுமே நாம் வாகனத்திற்கு அடிக்கும் பெட்ரோல் அளவை உறுதி செய்யும். ஆனால் பெட்ரோல் அடிக்க கருப்பு குழாய்பொறுத்திருப்பதால் அதில் பெட்ரோல் வராமல் தடுத்து மோசடி செய்து வாகனங்களிலும் கணிசமான அளவு பெட்ரோலை பங்குகள் மிச்சப்படுத்தி மக்களை ஏமாற்றி வருகினார்.

பெட்ரோல் பங்கில் கருப்பு குழாய்களை மாற்றுங்கள்; உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!

இதனை தவிர்க்க பெட்ரோல் அடிக்க உபயோகிக்கும் கருப்பு குழாய்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் தெரியும் வகையில் ட்ரான்ஸ்பரென்ட் குழாய்கள் பொறுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என மனுவில் வழக்கறிஞர் அமித் சாஹ்னி கூறியுள்ளார்.

Most Read Articles
English summary
ensure transparency at fuel stations, Plea in Supreme Court: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X