மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வாகனத்தின் பதிவை நீட்டிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்துவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை குறிப்பிட்டு இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு வாகனத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இந்த வாகனத்திற்கான பதிவை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்ன? என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பிரதமராக இருக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எஸ்பிஜி என்ற அமைப்பின் வேலையாக இருக்கிறது. இதனால் பிரதமரின் பாதுகாப்பு குறித்த அனைத்து விவகாரங்களையும் இந்த எஸ்பிஜி அமைப்பு தான் செய்து வருகிறது. பிரதமரின் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் அவர் பயன்படுத்தும் கார்கள் என அனைத்தும் எஸ்பிஜி கண்ட்ரோலில் இருக்கும் வாகனங்களாக உள்ளன.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்காக ரெனால்ட் நிறுவனத்திடம் இருந்து எம்டி 5 ரக வாகனத்தை எஸ்பிஜி வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த வாகனம் 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாகனமாகும். இந்த வாகனத்தில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு எந்த நேரத்தில் ஆபத்து ஏற்பட்டாலும் உடனடியாக செயல்படுவதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட வாகனமாக இருக்கிறது.
இது டீசல் இன்ஜினியரிங் இயங்கும் வாகனமாக இருக்கிறது. டில்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் டீசல் வாகனமாக இருந்தால் 10 ஆண்டுகளில் அந்த வாகனத்தின் பதிவு எண் என்பது நீக்கப்பட்டு விடும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வாகனத்தை பயன்படுத்தக் கூடாது என்ற விதி இருக்கிறது. மாசு கட்டுப்பாடு காரணமாக இந்த விதியை பின்பற்றியுள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவும் இருக்கிறது.

பிரதமரின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் இந்த ரெனால்ட் எம்டி 5 மொத்தம் மூன்று கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. என்னதான் இந்த கார்கள் பிரதமரின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இந்த கார்கள் பயன்படுத்தப்படும். அதிக ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் மட்டுமே இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இந்த வாகனங்கள் முறையே 6000 கிமீ, 9,500 கிமீ, 15,000 கிமீ என்ன மிகக் குறைவான தூரத்தையே இந்த வாகனங்கள் பயணம் செய்துள்ளன. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வாகனத்திற்கு 2010 ஆண்டுகளான நிலையில் வரும் டிசம்பர் மாதத்துடன் இந்த பதிவு என்பது காலாவதி ஆகிறது. இனி இந்த வாகனத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இந்நிலையில் இந்த வாகனத்தின் பதிவு எண்ணை நீட்டித்து சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எஸ்பிஜி தரப்பில் இருந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குறிப்பிட்ட வாகனங்கள் மிகக் குறைவான தூரமே பயணித்துள்ளன என்றும், இந்த வாகனங்கள் பிரதமரின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய வாகனங்கள் என்பதால் இந்த வாகனத்தின் பதிவை நீட்டிக்க அனுமதி வழங்கி சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி ஜெயா பிரகாஷ் ஸ்ரீவத்சவா மற்றும் வல்லுநர் செந்தில் வேல் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த டீசல் வாகனங்கள் மீதான தடை குறித்த உத்தரவை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட வாகனத்திற்கான பதிவை நீட்டிக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு இந்த வாகனத்திற்கான பதிவை நீட்டிப்பை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டி கேட்டிருந்தது அதன்படி 2029-ம் ஆண்டு வரை இந்த வாகனத்தை பயன்படுத்த அனுமதி கோரி இருந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்து இந்த ரெனால்ட் எம்டி 5 வாகனம் இந்த 2024-ம் ஆண்டுடன் ஓய்வு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்காக இருக்கும் எஸ்பிஜி என்ற அமைப்பு தற்போது தனது ரெனால்ட் எம்டி 5 வாகனத்தை பாதுகாப்புக்காக பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இந்த வாகனத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு இதற்கு பதிலாக புதிய வாகனத்தை வாங்கி பிரதமரின் பாதுகாப்பு வாகன அணி வகுப்பில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









