பிரதமர் மோடி சென்னையை சுற்றி கலக்கியது இந்த காரில் தான்! இதன் விலை என்ன தெரியுமா?

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பயணித்த வாகனம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சி முழுவதும் இந்த ஒரே வாகனத்தில் அவர் பயணம் செய்தார். இந்த வாகனம் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக தற்போது பிரச்சாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

pm modi chennai road show

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தென் சென்னை தொகுதியின் வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலருடன் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பயணம் செய்து வந்த வாகனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அங்குள்ள மக்கள் எல்லாம் பிரதமர் மோடி பயணித்த வாகனம் வித்தியாசமாக இருக்கிறதே, இது என்ன வாகனம் என பேசிக் கொண்டார்கள்.

பொதுவாக ரோடு ஷோ நிகழ்ச்சி என்றால் திறந்த வெளி வாகனங்களில் தான் தலைவர்கள் பயணம் செய்வார்கள். அதற்கு ஏற்றார் போல அவர்களுக்கு வாகனம் தயார் செய்யப்பட்டிருக்கும். பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஏகப்பட்ட பாதுகாப்புகள் இருக்கும் இந்நிலையில் திறந்த வெளி வாகனத்தில் பயணம் செய்யும்போது அதிக திறன் கொண்ட வாகனங்களை தான் பயன்படுத்துவார்கள்.

pm modi chennai road show

இப்படியாக பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது அந்த கார் பெரும்பாலும் பூக்களால் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த காரின் வடிவமைப்பை வைத்து நாம் அது என்ன காரணம் தெரிந்து கொண்டோம். இந்த காரை முன் பக்கம் மூடப்பட்ட டிரைவர் மற்றும் பயணிகள் இருக்கையும் பின்பக்கம் திறந்த வெளியில் இருக்கும் டிரக் போன்ற அமைப்பு கொண்ட காராக இருக்கிறது.

இந்த காரில் ஆங்காங்கே தெரிந்த பாகங்களை வைத்து பார்க்கும்போது இது இசுஸூ நிறுவனத்தின் ஹைலேண்டர் கார் என்பது நமக்கு தெரிய வருகிறது. இது போன்ற டிரக் மாடல் கார்களை ஏகப்பட்ட மாடல்களில் விற்பனை செய்து வருகிறது. இதில் ஹைலேண்டர் எனப்படும் காரில் தான் பிரதமர் மோடி இந்த ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.

pm modi chennai road show

இந்த காரின் இன்ஜினைப் பொறுத்தவரை 1898 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160.92 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் டீசல் இன்ஜின் மட்டுமே பொருத்தப்பட்ட காராக விற்பனைக்கு வருகிறது. மேலும் இதில் மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே விற்பனையில் உள்ளது.

இந்த கார் ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த காராக இருப்பதால் தற்போது இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இல்லை. மேனுவல் கியர் ஆப்ஷன் இருந்தால் தான் மேடு பள்ளங்களில் கார் சிக்குக் கொள்ளும் போது காரை நகர்த்துவது எளிதாக இருக்கும். மேலும் ஆஃப் ரோடு பயணங்களை விரும்புபவர்கள் ஆட்டோமேட்டிக் கியரை விரும்ப மாட்டார்கள்.

இந்த காரின் விலையை பொருத்தவரை இந்த கார் இந்தியாவில் ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிகமாக வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் இதன் விலை அதிகமாக இருப்பதால் பலர் இந்த காரை வாங்க மருத்துவர்கள் இதுபோன்ற தனித்துவமான தேவைகளுக்கு மட்டுமே இந்த இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரக் மாடல் கார்களை வெகு சில நிறுவனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. முக்கியமாக டொயோட்டோ, டாடா ஆகிய நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தாலும், இது நிறுவனம்தான் இந்த ரக கார்களுக்கு பெயர் பெற்ற நிறுவனம். இதனால் தான் பிரதமர் மோடி பயன்படுத்தும் காரை சிறந்த காராக தேர்வு செய்து அந்த காரை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2024, 19:55 [IST]
English summary
Pm modi chennai road show travelled in isuzu highlander car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X