இனிமே இந்தியா மாதிரி தான் சிங்கப்பூர் மாறனும்! ஒரே திட்டத்துல மாஸ் காட்டிய மோடி!

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம் கொச்சியில் இன்று பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ திட்டம் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கொச்சின் சிப்யார்டு லிமிடெட் சார்பில் கொச்சி பகுதியைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படி மெட்ரோ ரயிலில் நகருக்குள் வேகமாக டிராஃபிக் பிரச்சனையில்லாமல் பயணிக்க முடிகிறதோ அதே போல இந்த வாட்டர் மெட்ரோ படகிலும் வேகமாகப் பயணிக்க முடியும்.

Kochi Water Metro

இந்த திட்டத்தின்படி மொத்தம் 38 டெர்மினல்களுடன் 78 எலெக்ட்ரிக் - ஹைபிரிட் படகுகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று 8 படகுகளை மட்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருகிறது. இந்த திட்டத்தைக் கேரள அரசு ஜெர்மன் வங்கியான KfW என்ற நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட நிதியுதவி மூலம் துவங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்காக ரூ1,136.83 கோடி நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று துவங்கப்பட்டும் இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தில் ஹைகோர்ட்-வைபின் டெர்மினல், வைட்டில்லா-காக்கநாடு டெர்மினல் என இரண்டு வழி தடங்களில் வாட்டர் மெட்ரோ படகு சேவைகள் துவங்கப்படவுள்ளன.

Kochi Water Metro

இந்த படகுகள் எல்லாம் மிதக்கும் பாண்டூன்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படகு மிதக்கும் போது தண்ணீரில் அலைகள் வந்தாலும் இந்த படகு ஆடாமல் நேராகச் செல்லும். இதனால் படகு உள்ளே இருக்கும் பயணிகளுக்கு ஆட்டம் இல்லாமல் எப்படி ரயில்களில் செல்கிறார்களே அதே போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்.

இந்த வாட்டர் மெட்ரோ படகில் பயணிக்கக் கொச்சி மெட்ரோ ரயிலுக்கு மக்கள் பயன்படுத்தும் கொச்சி 1 கார்டையே இதற்கும் பயன்படுத்த முடியும். இது மட்டுமல்லாமல் இந்த வாட்டர் மெட்ரோவிற்கான டிக்கெட்களை ஆன்லைனிலும் புக் செய்து கொள்ளலாம். இந்த வாட்டர் மெட்ரோ டிக்கெட் விலை ரூ20 முதல் துவங்குகிறது. தூரத்திற்குத் தகுந்தார் போல இதன் டிக்கெட் விலை மாற்றம் பெறும்.

Kochi Water Metro

இது மட்டுமல்ல கொச்சி வாட்டர் மெட்ரோவில் வாராந்திர பாஸ், மாத பாஸ், 3 மாதங்களுக்கான பாஸ்கள் கூட வழங்கப்படுகின்றனர். வாராந்திர பாஸ்களில் 12 ட்ரிப் செல்ல முடியும் அதற்கு ரூ180 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாத பாஸ்களில் 30 நாளில் 50 ட்ரிப்கள் செல்ல முடியும் அதற்கு ரூ600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 3 மாத பாஸ்களுக்கு ரூ1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, இதில் 90 நாளில் 150 ட்ரிப்கள் செல்ல முடியும். கொச்சி ஒன் ஆப் மூலம் செல்போனிலேயே டிக்கெட்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

தற்போது வைடில்லா வாட்டர் மெட்ரோ டெர்மினலில் இருந்து காக்கநாடு வரை செல்ல 25 நிமிடமாகும் என்றும். அதே போல வைப்பின் பகுதியிலிருந்து ஹைகோர்ட் வாட்டர் மெட்ரோ வரை செல்ல 20 நிமிடம் ஆகும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த வாட்டர் மெட்ரோ சேவை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை நடக்கும் என்றும், அதிகமாக மக்கள் பயன்படுத்தும் நேரங்களில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு படகு வீதம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ திட்டத்தில் மொத்தம் 15 ரூட்களில் படகுகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக இரண்டு ரூட்டில் மட்டுமே இந்த படகு செயல்படுத்தப்படுகிறது. இந்த படகுகள் விபத்தில் சிக்காமல் இருக்கவும். இந்த படகுகளுக்கான தண்ணீரில் தனித்தனி பாதைகளை அமைத்து அதற்கான மிதவை வழிகாட்டிகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காகக் கொச்சி பகுதியில் உள்ள கொச்சி துறைமுக நீர் வழிப் பாதை மற்றும் தேசிய நீர் வழிப்பாதைகள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த நீர் வழி போக்குவரத்து ஏற்கனவே கொச்சியில் பாரம்பரிய படகுகள் மூலம் நடந்து வந்தது தான். இதை விரிவாகத் திட்டமிட்டு வாட்டர் மெட்ரோ திட்டமாக அரசு மாற்றியுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஹைபிரிட் படகுகளைப் பயன்படுத்துகிறது. முயற்றிலும் குளிரூட்டப்பட்ட பயணிகள் அமரும் இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் இருப்பதைப் போல் அமரும் சீட்களும் நின்று கொண்டே பயணிக்கும் பயணிகளுக்குப் பிடித்துக்கொள்ள கை பிடிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி மக்கள் விரைவான, பாதுகாப்பான அதே நேரத்தில் குறைந்த விலை பயணத்தை செய்ய முடியும். சாலையில் செல்லும் போது டிராஃபிக்கில் சிக்குவதை இந்த வாட்டர் மெட்ரோவால் தவிர்த்துவிட முடியும். தினந்தோறும் வேலைக்கு செல்லும் மக்களுக்கு இந்த வாட்டர் மெட்ரோ ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தொடர்ந்து சர்வதேச தரத்திற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த வாட்டர் மெட்ரோ ஒரு தரமான சான்று தான். இந்தியாவில் கொச்சி நகரில் இதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கொச்சியில் இதை மத்திய-மாநில அரசுகள் சேர்ந்து திறந்துள்ளது. இதே போல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சென்னையை அடுத்த முட்டுகாடு பகுதியில் அதிநவீன படகு சவாரிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 25, 2023, 9:46 [IST]
English summary
Pm modi flags off india s first water metro in kochi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X