Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாட்டின் முதல் பைலட் இல்லா மெட்ரோ ரயிலை மக்களுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி... முழு விபரம்!
ஆளில்லாமல் இயங்கக்கூடிய நாட்டின் முதல் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆளில்லாமல் இயங்கும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில்களை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இதனை மக்களுக்கு மோடி அர்பணித்தார். தலைநகர் டெல்லியில்தான் இந்த சிறப்பு மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்கு ஜனக்புரி முதல் தாவரவியல் பூங்க வரை இந்த ரயில் தடம் செயல்படும். இது சுமார் 37 கிமீ இடைவெளிக் கொண்ட வழித் தடம் ஆகும். பைலட் இல்லை என்றாலும், அவர் இல்லை என்ற உணர்வை இந்த இரயில் ஒரு நாளும் வழங்காது. இதற்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை இந்த ரயில் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக, எதிர் புறத்தில் வேறொரு ரயில் வருமானால் குறிப்பிட்ட சில மீட்டர் இடைவெளியிலேயே தானாக நிற்கும் வசதியை இந்த தானியங்கி ரயில் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னரும், புறப்படுவதற்கு முன்னரும் ஓர் பைலட் எப்படி ஹாரன் அடித்து எச்சரிக்கைச் செய்வாரோ, அதேபோன்று, இந்த தானியங்கி ரயிலும் ஒலியை எழுப்பும்.

குறிப்பாக, எதிர் புறத்தில் வேறொரு ரயில் வருமானால் குறிப்பிட்ட சில மீட்டர் இடைவெளியிலேயே தானாக நிற்கும் வசதியை இந்த தானியங்கி ரயில் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னரும், புறப்படுவதற்கு முன்னரும் ஓர் பைலட் எப்படி ஹாரன் அடித்து எச்சரிக்கைச் செய்வாரோ, அதேபோன்று, இந்த தானியங்கி ரயிலும் ஒலியை எழுப்பும்.

தொடர்ந்து, "மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு மெஜந்தா கோட்டையை திறக்கும் பாக்கியம் கிடைத்ததாகவும், தற்போது நாட்டின் முதல் தானியங்கி மெட்ரோ ரயிலை திறக்கும் பாக்கியம் கிடைத்திருப்பதாகவும்" அவர் நெகிழ்ந்தார். இதையடுத்து, நாடு மிக வேகமாக வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி பெறுமிதம் கொண்டார்.

தானியங்கி ரயில் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:
மேக்னெடா லைன் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி ரயில்கள், தற்போது மேற்கு ஜனக்பூரி மற்றும் தாவரவியல் பூங்கவை இணைக்கும் வகையிலேயே செயல்பட உள்ளது. ஆனால், விரைவில் இதன் பாதை நீட்டிக்கப்பட இருக்கின்றது.

இதன்படி, பிங்க் லைன் (மஜ்லிஸ் பார்க்-சிவ் விஹார்) வரை நீட்டிக்கப்பட இருக்கின்றது. இந்த நீட்டிப்பு பணி வருகின்ற 2021ம் ஆண்டின் அரைப் பாதிக்குள் நிறைவடையும் என கூறப்படுகின்றது. அவ்வாறு வழி தடம் நீட்டிக்கப்படுமானால் இதன் ஒட்டுமொத்த தூரம் 94 கிமீ ஆகும். இது தற்போது டெல்லியில் பயன்பாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் வழி தடத்தின் 9 சதவீதம் ஆகும்.

உலகின் முதல் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சேவை ஜப்பான் நாட்டின் கோஸ்ட் நகரத்திலேயே பயன்பாட்டுக்கு வந்தது. 1981ம் ஆண்டில் இந்த சேவை அங்கு தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது உலகின் 46க்கும் அதிகமான முக்கியமான நகரங்களில் இந்த சேவை பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது இந்தியாவிலும் தானியங்கி ரயில் போக்குவரத்துத் தொடங்கப்பட்டிருக்கின்றது.

இந்த சிறப்பு வாய்ந்த ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததன் மூலம் சர்வதேச தானியங்கி ரயில் போக்குவரத்தை மேற்கொண்டு வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் முயற்சியிலேயே நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை தலைநகர் டெல்லியில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.