பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த காரை கவனிச்சீங்களா? இந்த கார்ல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தமிழகம் மற்றும் கேரளாவிற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவர் பயணித்த பாதைகளில் மக்கள் வெள்ளம் அவரைக் காண கூடி நின்றார்கள். இப்பொழுது அவர் பயணித்த கார் குறித்து தான் மக்கள் மத்தியில் அதிகம் பேச்சு எழுந்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிரதமர் மோடி தமிழகம் மற்றும் கேரளாவிற்கு கட்சி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அரசு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் சுற்றுப்பயணம் வந்துள்ளார். இப்படியாக தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். இவரை காண மதுரையில் ஏராளமான மக்கள் கூட்டம் காத்திருந்தார்கள். இவர் கார் பயணம் செல்லும் பாதை முழுவதும் மக்கள் வெள்ளம் கூடி நின்றதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இவர் பயணித்த கார் குறித்த பேச்சு தான் தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
பொதுவாக உலக தலைவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் நிறைந்த கார் தான் வழங்கப்படும். அவர்கள் பயன்படுத்துவது எப்பொழுதும் ஆயுதம் ஏந்திய கார்களை தான் பயன்படுத்துவார்கள். அவர்களது உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதால் எப்பொழுதும் அவர்களை சுற்றி இருக்கும் பாதுகாப்பு படையினர் எந்த நேரத்தில் ஆபத்து வந்தாலும் எதிரிகளை வீழ்த்தி இவரது உயிரை பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய வாகனங்களை தான் பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள்.

இப்படியாக நேற்று பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போதும் இதே போன்ற ஆயுதம் தாங்கிய டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரை தான் அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த காரில் தான் அவர் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்துள்ளார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும்போது மதுரை ஆதீனம் இவரை வழிமறித்து இவருக்கு பொன்னாடை போற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த டொயோட்டோ ஃபார்ச்சூனர் கார் பற்றி தான் பலர் பல்வேறு விதமாக பேசி வருகின்றார்கள். இந்த கார் என்பது இந்தியாவில் உள்ள பிரதமர் மட்டுமல்ல உலகில் பல முக்கியமான தலைவர்களின் பாதுகாப்பு வாகனமாக இருக்கிறது. அதிக அளவு பாதுகாப்பு தேவைப்படும் தலைவர்கள் எல்லாம் இந்த ஃபார்ச்சூனர் காரையே தங்கள் ஆயுதம் ஏந்திய காராக மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாக மற்ற கார்களை ஆயுதம் ஏந்திய கார்களாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களாக மாற்றுவது என்பது சிரமம். அந்த கார்களை அடிப்படையில் இருந்தே மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இந்த டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் மற்றும் லேண்ட் க்ரூஸர் ஆகிய கார்கள் அடிப்படையிலேயே பாதுகாப்பு அம்சங்கள் செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட தரமான காராக தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த காரை பாதுகாப்பான காராக மாற்றுவது எளிது.
டொயோட்டா நிறுவனம் இந்த ஃபார்ச்சூனர் காரை விட லேண்ட் க்ரூஸர் கார் தான் பிரபலமானது இந்த லேண்ட் க்ரூஸர் கார் முதன்முதலாக தயாரிக்கும்போது இதை ஒரு மிலிட்டரி டிரக் வாகனமாகவே பயன்படுத்தியது. முக்கியமாக ஆஃப் ரோடிங் அம்சங்களுக்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனமாக இது தயாரிக்கப்பட்டாலும் தற்போது இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பிரதமர் மோடி பயன்படுத்திய ஃபார்ச்சூனர் காரில் காரில் இரண்டு விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. ஒன்று ஆக்டிவ் சேஃப்டி, மற்றொன்று பேஷிவ் சேஃப்டி அதாவது பிரதமர் மோடி மீது யாராவது தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் செயல்பட்டால் அந்த தாக்குதலை முறியடிப்பதற்கான வசதிகள் மற்றும் அவர்களை திருப்பி தாக்குவதற்கான வசதிகள் என இரண்டு விதமான வசதிகளும் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
இந்த காரில் உள்ள கண்ணாடிகள் அனைத்தும் குண்டு துளைக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் காருக்கு அடிப்பகுதியிலும் மேல் பகுதியிலும் சரி வெடிகுண்டு வெடித்தாலும் காருக்குள்ளே இருக்கும் பயணிக்கு எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லாத வகையில் இருக்கும் ஸ்ட்ராங்கான காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காருக்குள்ளே இருக்கும் பயணிக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது.
அதே நேரம் ஒரு அசாதாரண சூழ்நிலை வந்து இவரது எதிரிகள் இவரை சூழ்ந்து கொண்டால் எதிரிகளை தாக்குவதற்காக காரில் ஆங்காங்கே ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதை காரின் ஓட்டுனருக்கு பயன்படுத்த அனைத்து உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் உயிரைக் காப்பாற்ற அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஆயுதத்தை பயன்படுத்த முடியும்.
இந்த காரை இந்தியாவில் உள்ளவர்கள் ஆயுதம் இல்லாத சாதாரண காராக வாங்கி பயன்படுத்த முடியும். ஏகப்பட்ட பரபலங்கள் இந்த காரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த கார் மார்க்கெட்டில் ரூ33.43 - 51.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 3.5 ஆண்டு காலம் காத்திருப்பு காலம் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பலர் பாதுகாப்பான கார்களில் தான் பயணம் செய்கிறார்கள். அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதால் அவர்களை விரும்பினாலும் பாதுகாப்பு இல்லாத சாதாரண கார்களில் அவர்களால் பயணம் செய்ய முடியாது. அவர்கள் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியை எல்லாம் பாதிக்கும் என்பதால் அதில் மிக மிக கவனமாக பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications









