இன்று செங்கோட்டையில் கொடி ஏற்ற பிரதமர் மோடி வந்த காரை பற்றி தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
இன்று 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார். இந்த நிகழ்விற்கு அவர் அதிக பாதுகாப்பு கொண்ட லேண்ட்ரோவர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி காரில் வந்திறங்கினார். இந்த காரில் அவருக்கென பிரத்தியேகமாக பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இப்படியாக இந்த காரில் என்னென்ன ஸ்பெஷாலிட்டி இருக்கிறது என்ற விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டைக்கு வந்திறங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான லேண்ட்ரோவர் நிறுவனம் தயாரித்த ரேஞ்ச்ரோவர் சென்டினல் எஸ்யூவி கார் தான் இந்த காரில் 5.0 லிட்டர் சூப்பர் சார்ஜர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது முந்தைய வெர்ஷன் விட இன்ஜினை விட 40 பிஎச்பி வரை பவராக கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கார் பவர்ஃபுல்லாக பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் காராக இருக்கிறது.

இந்த கார் இந்திய நாட்டின் பிரதமர் பயன்படுத்தும் கார் என்பதால் இதில் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ள முக்கியமாக துப்பாக்கி குண்டுகளால் தாக்கினாலும் குண்டுவெடிப்பில் இந்த கார்க்கு நானும் காரில் உள்ளே இருக்கும் நபருக்கு எந்தவிதமான ஆபத்துகளும் ஏற்படாதபடி காரின் வடிவமைப்பு இருக்கிறது. இந்திய பிரதமருக்கு பல்வேறு விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இப்படியான பாதுகாப்பை பிரதமரின் பாதுகாப்பு படை வழங்கி வருகிறது.
லேண்ட்ரோவர் நிறுவனம் ஸ்பெஷல் வாகனங்களுக்கான தயாரிப்பாக பிரத்தியேக டீமை வைத்திருக்கிறது. இந்த டீம்தான் இந்த ரேஞ்ச் ரோவர் சென்டினல் என்ற சொகுசு எஸ்யூவி காரை தயாரித்துள்ளது. பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை வடிவமைத்துள்ளது. இந்த காரின் பாடி முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் தாக்கினாலும், எந்த விதமான பாதிப்பும் காருக்குள் இருக்கும் நபருக்கு ஏற்படாத வகையில் ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் உள்ள கண்ணாடிகள் கூட துப்பாக்கி குண்டுகள் துளைக்காத படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் மற்ற பாகங்கள் எல்லாம் காரின் ரூஃப் பகுதி பக்கவாட்டுப்பகுதி, முன்பகுதி, பின்பகுதி காரின் அடிப்பகுதி என எந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்தாலும், காருக்குள் இருக்கும் நபருக்கு எந்தவிதமான பாதிப்பையும் கடத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் இந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை வெளியில் தெரியாதவாறு இந்த காரின் வடிவமைப்பு இருக்கும்.
வழக்கமாக ஒரு கார் இப்படியான வடிவத்தில் இருக்குமோ அதே போன்ற தோற்றத்தில் தான் இந்த காரில் இருக்கும். இந்த காரில் எல்இடி லைட்கள் பம்பர்கள் எல்லாம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் லுக் ரீதியில் சிறப்பான லுக் கொண்ட காராக இருக்கிறது.இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இருக்கிறது.

முக்கியமாக காரைச் சுற்றி பல்வேறு விதமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் கண்ட்ரோல் செய்யக்கூடிய ஆப்ஷன் காருக்குள் வழங்கப்பட்டுள்ளது. என்னென்ன ஆயுதங்கள் இருக்கிறது என்ற தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. இது காருக்குள் இருக்கும் டிரைவர் மற்றும் ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.
என்னதான் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் இந்த கார் பல்வேறு விதமான ப்ரீமியம் அம்சங்களை கொண்ட காராகவும் இருக்கிறது. இதனால் போதுமான அளவு லெக் ரூம், நல்ல ஹெட் ரூம், அதிக இட வசதி கொண்ட கேபின், பின்பக்க பயணிகள் சீட்டில் இருப்பவர்களுக்கும் இரண்டு 10 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் இந்த காரில் உள்ளன.
இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை நாம் முன்னரே சொன்னதுப்படி 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 375 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து விதமான கால சூழ்நிலைகளிலும் அனைத்து விதமான ரோடு கண்டிஷனிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கார் அதிகபட்சமாக 193 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 10.4 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்ச வேகம் குறைப்பு மற்றும் 100 கிலோமீட்டர் எட்டிப் பிடிக்க 10 நொடிகள் ஆவதற்கு இந்த காரின் எடை மிக முக்கியமான காரணமாகவும் காருக்குள் பல ஆயுதங்கள் இருப்பதால் அதன் பாதுகாப்பிற்காக இப்படியான விஷயங்கள் பின்பற்றப்படுகிறது.
மேலும் இந்த கார் டயரில் யாராவது சுட்டு விட்டால் கார் பஞ்சர் ஆனாலும் சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் 80 கிலோ மீட்டருக்கு இந்த கார் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காருக்குள் 4.4 டன் அளவிலான எடையை சுமந்து செல்லும் அளவுக்கு கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது.
இந்த காரில் உள்ள முன்பக்க கண்ணாடியை 150 மிமீ வரை கீழே இறக்கிக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. இதனால் கம்யூனிகேஷன் சிறப்பாக இருக்கும். ஆவணங்களை மாற்றிக்கொள்ள போதுமான இட வசதி இருக்கும் என்பதால் இது உருவாக்கப்பட்டுள்ளது.இதை நாம் பிரதமருடன் காரின் வெளியே நின்று சிலர் பேசுவது போல எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் பார்க்க முடியும்.
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்த ரேஞ்ச் ரோவர் சென்டினல் என்ற எஸ்யூவி கார் பிரத்தியேகமாக விவிஐபி ளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது தனித்துவமான புதுமையான டெக்னாலஜிகள் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இதனால் இந்த காரின் விலையை நாம் தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். இந்த கார் ரூபாய் 10 கோடி என்ற விலையில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற உலகின் மிக முக்கியமான நாட்டின் தலைவராக இருப்பவருக்கு பல்வேறு விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வாகனத்தில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆயுதங்கள் இருக்கும். இப்படியாகத்தான் பிரதமர் மோடி காரில் இந்த ஆயுதங்கள் இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அது குறித்த தகவல்கள் எல்லாம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









