அபுதாபியில், டிரைவரில்லா காரில் வலம் வந்த பிரதமர் மோடி!
அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அபுதாயிலுள்ள மஸ்தார் ஸ்மார்ட் சிட்டிக்கு இன்று சென்றார்.
அப்போது, அங்கிருந்த டிரைவரில்லா காரில் பயணித்தார். இதை காண்பதற்காக, அங்கு ஏராளமான இந்தியர்கள் கூடியதால் பரபரப்பான நிலை காணப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி
அபுதாபியில், மஸ்தார் என்ற பெயரில் ஸ்மார்ட் சிட்டி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அபுதாபி அரசு நிதி உதவியுடன் அந்நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஸ்மார்ட் நகரத்தை கட்டமைத்து வருகிறது. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மற்றும் சூரிய மின்சக்தி பயன்பாடு கொண்ட அந்த ஸ்மார்ட் சிட்டி புகையில்லா நகரமாக வர்ணிக்கப்படுகிறது.

ஸீரோ எமிசன்
மஸ்தார் ஸ்மார்ட் சிட்டி என்ற அந்த செயற்கை நகரத்தில் போக்குவரத்துக்காக புகையை வெளியிடாத வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதற்காக, அங்கு செயல்விளக்கத்திற்காக ஒரு டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார் உள்ளது. அந்த காரில்தான் பிரதமர் மோடி இன்று பயணித்தார்.

ஸ்மார்ட் கார்
பிரதமர் மோடி பயணித்த ஸ்மார்ட் கார், சூரியசக்தி மின் ஆற்றல் மூலம் இயங்கும். லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எங்கு செல்ல வேண்டும் என்பதை தொடுதிரையில் தேர்வு செய்தால், அந்த இடத்திற்கு ஜிபிஎஸ் நேவிகேஷன் சாதனத்தின் உதவியுடன் செல்லும்.

ஆர்வம்...
டிரைவரில்லாமல் இயங்கி காரில் பயணித்த பின், மஸ்தர் ஸ்மார்ட் சிட்டி குறித்த தகவல்களை அங்கு பணிபுரியும் கட்டடக்கலை வல்லுனர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினர். அதுபற்றி கூடுதல் தகவல்களையும் அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் வருகையாளர் பதிவேட்டில் தனது கையொப்பத்தை பதிவு செய்தார்.


Click it and Unblock the Notifications








