வெளிநாட்டு ரோடு எல்லாம் தோத்துடும்! பிரதமர் மோடி திறக்கப்போகும் ரோட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சிருக்கா?
டில்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலைக்கு அடுத்தபடியாக இருப்பது அடுத்தபடியாக மக்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பெங்களூரு- மைசூரு எக்ஸ்பிரஸ் சாலை தான். நாளை (மார்ச் 12ம் தேதி ) பிரதமர் மோடி இந்த சாலையைத் திறந்து வைக்கிறார். இந்தியாவில் உள்ள முக்கியமான எக்ஸ்பிரஸ் சாலைகளில் இந்த நெடுஞ்சாலையும் ஒன்று. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.
பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலை மொத்தம் 118 கி.,மீ நீளத்திற்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டமைத்த இந்த சாலைக்காக ரூ8480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது என்எச் 275 சாலையின் ஒரு பகுதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மொத்தம் 4 ரயில்வே மேம்பாலங்கள், 9 பெரிய பாலங்கள், 40 சிறிய பாலங்கள், 89 அண்டர் பாஸ் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை 10 வழிச் சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நைஸ் ரோடு என்ட்ரன்ஸ் பகுதியிலிருந்து மைசூரு ரிங் ரோடு ஜங்சன் வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வாகனங்கள் 110 முதல் 120 கி.மீ வேகம் வரை செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் அதிகபட்சமா வேகமாக 120 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் டூவீலர் மற்றும் 3 வீலர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து மைசூருவிற்கு காரில் பயணிக்கச் சுங்க கட்டணமாக ரூ135 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணத்தை இரண்டு கட்டங்களாகப் பிரித்து வசூலிக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாகப் பெங்களூருவிலிருந்து நிடாகட்டா வரையிலான பாதைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக நிடாகட்டா முதல் மைசூருவிற்கான கட்டணம் பின்னர் அமல்படுத்தப்படும். இந்த சுங்கச்சாவடிகளில் மொத்தம் 10 லேன்களில் கேட்கள் அமைக்கப்பட்டு அதில் ஃபாஸ்ட் டேக் கருவிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். அதிகமான கேட் இருப்பதால் அதிக டிராஃபிக் இல்லாமல் கடக்க முடியும்.
இந்த எக்ஸ்பிரஸ் சாலைக்காக 30 ஏக்கர் பரப்பளவில் ஒரு சாலையோர வசதிகள் நிறைந்த பூங்கா ஒன்றைக் கட்டமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அங்கு உணவகங்கள், கழிப்பிடங்கள் பெட்ரோல் பங்க், இவிகளுக்கான சார்ஜிங் ஸ்டேஷன், உள்ளிட்டவை இடம் பெறவுள்ளது. ஆனால் இவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாலை ஸ்ரீரங்கபட்டினா பைபால், மாண்டியா பைபாஸ், பிடதி பைபாஸ், ராம் நகரா பைபாஸ், சன்னபட்டினா மற்றும் மதூர் பைபாஸ் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் டிராஃபிக் பெரிய அளவில் குறையும் எனவும், பெங்களூரு- மைசூரு இடையேயான பண நேரம் வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது பெங்களூரு-மைசூரு இடையே சுமார் 154 கி.மீ பயணம் இருக்கிறது. இதற்கு 3.5 மணி நேரம் சராசரியாக ஆகிறது. ஆனால் இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் பெங்களூருவிலிருந்து கிளம்பிய 75 நிமிடத்தில் மைசூருவிற்குச் செல்ல முடியும் என கூறப்படுகிறது. சாலையில் கார்களின் வேகம் 120 கி.மீ வரை செல்ல முடியும். தொலைவும் 118 கி.மீ ஆகக் குறைக்கப்படுகிறது என்பதால் பயண நேரம் பாதிக்கும் கீழ் குறைகிறது.
இந்த சாலை இந்தியாவில் உள்ள மிக முக்கியமான எக்ஸ்பிரஸ் சாலைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த சாலையால் கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கப்போகிறது. இந்த சாலை குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








