பிரதமர் நேரில் வந்தது எல்லாருக்கும் எனர்ஜி ட்ரிங் குடிச்ச மாதிரி இருந்திருக்கும்!! கண்காட்சி களைக்கட்டுது!
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) கண்காட்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். இது தொடர்பாக யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள நேரலை வீடியோவையும், டெல்லியில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மாற்று எரிபொருள் வாகானங்களை கொண்டுவர மத்திய அரசு கடந்த பல வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. சமீபத்தில், மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமான அறிவிப்புகளை காணலாம்.

இதற்கிடையில், பசுமையான போக்குவரத்தை வழங்கும் வாகனங்கள் மற்றும் தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 என்கிற பெயரில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி துவங்கிய இந்த கண்காட்சி பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கண்காட்சியின் 2வது நாளான இன்று, கண்காட்சியில் கலந்துக் கொண்ட தொழில் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், தொழிற்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் முன்னிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றி வருகிறார். புது டெல்லியின் பிரகாதி மைதனில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

நாட்டின் போக்குவரத்தில் புதிய கண்டுப்பிடிப்புகளை கொண்டுவரும் முயற்சியாக நடத்தப்படும் இந்த கண்காட்சியை பொது மக்கள் பார்வையிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள பிரதமர், இந்த இடத்தில் உள்ள பல விதமான தொழிற்நுட்பங்களை கண்டு இளம் தலைமுறையினர் தங்களது திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
அத்துடன், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதில் மொபைலிட்டி துறை மிக முக்கிய பங்காற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் உடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் இந்த கண்காட்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் வாகனங்கள் & தொழிற்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுவது மட்டுமின்றி, தொழிலதிபர்கள் இடையேயான கலந்துரையாடல்கள், வாங்குபவர்- விற்பனையாளர் சந்திப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பங்கள், மொபைலிட்டிக்கான நிலையான தீர்வுகளை ஹைலைட் படுத்திக் காட்டும் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவை ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 800க்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிடுவர் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த எக்ஸ்போவில் 28க்கும் அதிகமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மேலும், 600க்கும் அதிகமான வாகன உதிரி பாக நிறுவனங்களும் தங்களது பெயரை பதிவு செய்துக் கொண்டுள்ளன. மாநில அரசாங்கங்களின் பங்களிப்புகள் மற்றும் முன்முயற்சிகளை வெளிப்படுத்த மாநிலங்களுக்கான மாநில அமர்வுகளும் இந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன. இந்தியாவில் இவ்வாறான மொபைலிட்டி கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளை அதிகரிக்க இவ்வாறான எக்ஸ்போ நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவது அவசியமாகும். அப்போதுதான், பசுமையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இயக்கத்தை அடைய முடியும். இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் கலந்துக் கொண்டிருப்பது இந்த கண்காட்சியின் முக்கியத்துவத்தை காட்டுவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









