பிரதமர் மோடி பயன்பாட்டிற்காக புதிய ஜம்போ விமானங்கள்... இனி ஒபாமா ஸ்டைலில் பயணம்!!

By Saravana Rajan

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு 40 அரசு முறை சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவரது பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக அதிநவீன தொழில்நுட்பங்களும், பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இரண்டு புதிய ஜம்போ ரக விமானங்கள் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த புதிய விமானங்களில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் போன்றே, இந்த இரண்டு விமானங்களும் உலகிலேயே மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட விமானங்களாக இருக்கும். இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம்

வரும் 25ந் தேதி புதிய விமானங்களை கையகப்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில், பாதுகாப்புத் துறையின் கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், புதிய விமானங்களை கையகப்படுத்துவதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும

விமான மாடல்

விமான மாடல்

தற்போது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோரின் பயணங்களுக்காக இரண்டு போயிங் 747 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக புதிதாக இரண்டு போயிங் 777-300 விமானங்கள் கையகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை ஏர் இந்தியா ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் இயக்கப்படும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிதாக வாங்கப்பட இருக்கும் போயிங் 777-300 விமானத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியும், பாதுகாப்புத் துறை நிபுணருமான பிரஷாந்த் தீக்ஷித் கூறுகையில்," எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கான நவீன கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய விமானங்கள் வருவதாக தெரிவித்தார்.

தொலைதொடர்பு சாதனங்கள்

தொலைதொடர்பு சாதனங்கள்

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய போயிங் 777-300 விமானங்களில் செயற்கைகோள் தொலைதொடர்பு சாதனங்கள், அவசர கால தொலைதொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த தொலைதொடர்பு தகவல்களை இடைமறித்து கேட்க முடியாத அளவு நவீன பாதுகாப்பு கொண்டதாக இருக்கும்.

 தாக்குதல்

தாக்குதல்

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் கொண்ட பிரதமர் மோடிக்கு வாங்கப்படும் விமானங்கள் ஏவுணை மற்றும் கையேறி குண்டு தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்ட, ஆன்ட்டி மிசைல் டிஃபென்ஸ் சிஸ்டம் கொண்டது. மேலும், ஏவுகணைகள் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கான ரேடார் மற்றும் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

எரிபொருள் நிரப்பும் வசதி

எரிபொருள் நிரப்பும் வசதி

அவசர காலங்களில் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியையும் இந்த விமானங்கள் கொண்டிருக்கும். இதனால், தரையிறங்காமல் நீண்ட தூரம் பறக்க முடியும்.

அதிகபட்ச பயண தூரம்

அதிகபட்ச பயண தூரம்

தற்போது பயன்பாட்டில் உள்ள போயிங் 747 விமானங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 9,800 கிமீ தூரம் வரைதான் பறக்க முடியும். ஆனால், புதிய போயிங் 777-300 விமானம் 14,594 கிமீ தூரம் வரை பறக்கும்.

 அறுவை சிகிச்சை அரங்கம்

அறுவை சிகிச்சை அரங்கம்

அவசர கால பயன்பாட்டிற்காக, இந்த விமானங்களில் சிறிய அறுவை சிகிச்சை அரங்கமும் உள்ளது. மேலும், 24 மணிநேரமும் டாக்டர்கள் தயார் நிலையில் இருப்பர்.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

இதனை பறக்கும் பிரதமர் அலுவலகம் போன்று செயல்படுத்துவதற்கான அனைத்து சாதனங்களும் உள்ளன. ஆலோசனை நடத்துவதற்கான அறை, படுக்கையறை, 19 டிவி திரைகள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்த விமானங்களில் 2,000 பேருக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பு வைத்து எடுத்துச் செல்ல முடியும்.

தளம்

தளம்

டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்திலிருந்து இந்த இரண்டு விமானங்களும் இயக்கப்படும். விமானப்படையால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 8 பைலட்டுகள் இந்த விமானங்களை இயக்குவதற்கான பணியில் ஈடுபடுவர். விமான பயணத்தின்போது 4 விமானிகள் பணியில் இருப்பர்.

Photo Credit: Wikipedia

சோதனை

சோதனை

விமானம் பயணத்தை துவங்குவதற்கு முன்னால், விமானத்தில் ஏற்றப்படும் தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவை கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இந்த சோதனைகளை சிறப்பு பாதுகாப்பு கமாண்டோ படையினர் செய்கின்றனர்.

ஏன் புதிய விமானங்கள்?

ஏன் புதிய விமானங்கள்?

கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. சில நிமிட இடைவேளையில் அதே தடத்தில் வந்து கொண்டிருந்த பிரதமர் மோடியின் விமானம், தாக்குதலிலிருந்து தப்பியது. இந்த சம்பவத்தையடுத்து, ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் வசதிகள் கொண்ட விமானத்தை பிரதமரின் பயணங்களுக்காக பயன்படுத்த மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.

பிரதமர் மோடியின் விமான பயணமும், சுவாரஸ்யங்களும்... !!

பிரதமர் மோடியின் விமான பயணமும், சுவாரஸ்யங்களும்... !!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
PM Narendra Modi to get new Air India One Plane Soon.
Story first published: Tuesday, June 21, 2016, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X