பொங்கலன்று அசத்தலான பரிசுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் இஸ்ரேல் நாட்டு பிரதமர்...!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

தை பொங்கல் பண்டிகை அன்று இந்தியாவிற்கு வருகிறார் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. அப்போது அவர், பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

கடந்தாண்டு ஜூலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுடன் கடற்கரையில் ஒரு ஜீப்பில் வலம் வந்தார் மோடி.

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

இதற்கான புகைப்படங்கள் வெளியாகி, வித்தியாசமான தோற்றத்தில் இருந்த அந்த ஜீப் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது.

மோடி மற்றும் பெஞ்சமின் வலம் வந்த அந்த ஜீப், கடல் நீரை குடிநீராக்கும் திறனுடன் தயாரிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

இந்திய மதிப்பில் ரூ. 1 கோடி விலைபெறும் அந்த ஜீப் ’கால்-மொபைல்’ என்று இஸ்ரேலில் குறிப்பிடப்படுகிறது.

சுயமாக இயங்கும் நீர் சுத்திகரிப்பு வாகனமான இதை பிரதமர் மோடி பார்த்து அசந்துவிட்டார். அவருக்கு அந்த ஜீப் மிகவும் பிடித்துப்போனது.

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

கால்-மொபைல் ஜீப்பை பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நென்யாகுவிடம் பேசிய மோடி, இந்தியாவில் இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோன்ற தொழில்நுட்பம் பெற்ற வாகனம் உதவிக்கரமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Trending On Drivespark Tamil:

சூப்பர் பைக்கில் வந்தவர்களை வளைத்து பிடித்து கிராம மக்கள் சரமாரி தாக்குதல்!!

2018 ஸ்விஃப்ட் தெறிக்கவிட வருகிறது பீஜோ 208 கார்... தற்போது தீவிர சோதனையில்..!!

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

இவர்களது சந்திப்பு நடந்து பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

வரும் 14ம் தேதி இங்கே வரும் அவர், தன்னுடன் இந்த கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஜீப் வாகனத்தையும் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

உலக சுகாதார அமைப்பின் தரக்கட்டுப்பாடு படி கால்-மொபைல் ஜீப் ஒருநாளுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரையும் மற்றும் 80 ஆயிரம் லிட்டர் அழுக்கு, கிருமிகள் நிறைந்த நீரையும் குடிநீராக்கிவிடும் திறன்பெற்றது.

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

இஸ்ரேலில் நிலத்தடி நீர்மட்ட மிகவும் குறைவு. அங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

Trending On Drivespark Tamil:

டைட்டானிக் கப்பல் விபத்து குறித்து இதுவரை கேள்விப்படாத உண்மைகள்!

தொடங்கியதா 2018 ஸ்விஃப்ட் கார் முன்பதிவு..?? விற்பனையகங்களில் குவியும் வாடிக்கையாளர்கள் கூட்டம்..!!

பிரதமர் மோடிக்கு பொங்கலன்று கிடைக்கும் இஸ்ரேல் நாட்டு பரிசு!

மேலும், தண்ணீர் பற்றாக்குறை கொண்ட மற்ற நாடுகளுக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வழியாக குடிநீரை ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: PM Modi Gets Special Gift From Israeli Prime Minster Benjamin Netanyahus. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark