கிட்டக்கூட நெருங்க முடியாது... சென்னைக்கு பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா?

சென்னையில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா மற்றும் அண்ணா பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை பயன்படுத்தினார். இந்த காரில் அப்படி என்ன அம்சங்கள் இருக்கிறது? வாருங்கள் காணலாம்.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

நேற்று சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்காகவும், இன்று நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காகவும் பாரத பிரதமர் மோடி நேற்று சென்னை வந்திருந்தார். இவர் சென்னை வரை விமானத்தில் வந்து சென்னையில் இவர் தனது லேண்ட் க்ரூஸர் காரில் சென்னையில் பயணித்தார். இந்நிலையில் நாம் சென்னையில் பிரதமர் மோடி வந்த கார் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு குறித்துக் காணப்போகிறோம்.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் அவருக்கு என்எஸ்ஜி கமெண்டோக்கள் தான் பாதுகாப்பு வழங்குவார்கள். அது உள்நாடாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி இந்த எஸ்ஜி கமெண்டோக்கள் தான் அவரின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் பயன்படுத்துவதற்கான வாகனங்களையும் அவர்களே தேர்வு செய்வார்கள். அவர் என்ன வேலைக்காகச் செல்கிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் வாகனத்தைத் தேர்வு செய்வார்கள்.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

இதன்படி சென்னைக்கு அவர் வந்ததும் அவர் லேண்ட் க்ரூஸியர் காரில் தான் சென்னை முழுவதும் வலம் வந்தார். டொயோட்டா நிறுவனத்தின் இந்த காரின் மதிப்பு ரூ2 கோடியாகும். ஆனால் இது மார்கெட்டில் உள்ள காரின் விலை தான். பிரதமர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும். ஆனால் டொயோட்டா நிறுவனம் இதைச் செய்து தருவதில்லை. ஆனால் வெளியில் தனியாக இந்த அப்டேஷனை செய்துள்ளனர்.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது என்பது ரகசியமான விஷயம் ஆகும். இது பொதுவெளியில் வெளியிடப்படக்கூடாத தகவல் ஆகும். ஆனால் இந்த லேண்ட் க்ரூஸர் காரின் மார்கெட்டில் உள்ள இன்ஜின் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. இந்த காரில் 4.5 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 262 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால் பிரதமர் பயன்படுத்து காரில் இதே இன்ஜின் தான் இருக்கிறதா அல்லது இன்ஜினிலும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளதா என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

இந்தியப் பிரதமரின் பயன்பாட்டிற்காக இந்த ஒரு கார் மட்டுமல்ல இது போக ஏகப்பட்ட கார்கள் அவர் எந்த பயன்பாட்டிற்காக எந்த இடத்தில் பயணிக்கிறார் என்பதைப் பொருத்து வாகனங்கள் பயன்படுத்தப்படும். அவரிடம் மொத்தம் மஹிந்திரா ஸ்கார்பியோ, பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் 760 லி ஹை-செக்யூரிட்டி எடிசன், 2010 ரேஞ்ச் ரோவர் எச்எஸ்இ, டொயோட்டா லேண்ட் க்ரூஸர், டாடா சஃபாரி, டொயோட்டா ஃபார்ச்சூனர், உள்ளிட்ட கார்கள் இருக்கிறது.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

இது எல்லாம் பிரதமர் மோடி பயன்படுத்தும் கார்தான். ஆனால் அவரது கான்வாயில் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இருப்பார்கள் அவர்களும் தனித்தனி கார்களில் வலம் வருவார்கள். அவர்களுக்கான கார்களின் பட்டியல் தனி, இது போகப் பிரதமரின் பாதுகாப்பிற்கான ஒரு வேன் ஒன்றும் அவரது கான்வாயில் இடம் பெறும் இதில் ஜாமர் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்திருக்கும். பிரதமருக்கு ஒரு ஆபத்து என்றால் விரைவாகச் செயல்படுவதற்காக இந்த வேன் உள்ளது.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் போலவே அதே கான்வாயில் மொத்தம் 3 கார்கள் இருக்கும். அதில் பிரதமர் எந்தகாரில் பயணிக்கப்போகிறார் என்பது கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். பிரதமர் மோடிக்கே அந்த தகவல் தெரியாது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த தகவலை ரகசியமாகப் பாதுகாப்பார்கள்.

கிட்டக்கூட நெருங்க முடியாது . . . சென்னைக்குப் பிரதமர் மோடி வந்த காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருக்குதா ?

பிரதமர் வராவிட்டாலும் மற்ற 2 கார்களும் அவர் கான்வாயில் தான் இருக்கும். சில அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால் எந்த காரில் பிரதமர் இருக்கிறார் என்று குழப்பம் ஏற்படுத்த இந்த கார்களையும் பயன்படுத்துவார்கள். இந்த 3 காரிலும் பிரதமரின் பாதுகாப்பிற்கான அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும். இதில் தாக்குவதற்கான சிறிய ரகத் துப்பாக்கி சிறிய லாஞ்சர்கள் கூட இந்த கார்களிலும் இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 18:06 [IST]
English summary
PM Narendra Modi land cruiser car features a list
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+