அம்பானி அழைப்பை ஏற்று போனவருக்கு இந்த காரையா கொடுப்பது? தொப்பி போட்டு நிற்பது யாருனு பார்த்தீங்களா?
முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இந்தியாவின் பெரும் தொழிலதிபர் என்பது ஊரறிந்த விஷயம். இவர்களது குடும்பத்தினர் சமீபத்தில் தங்களது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) காரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகனம் போன்று மாற்றினர். நல்லா இருந்த காரை எதற்காக இவ்வாறு மாற்றியுள்ளனர்? என நாம் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த வாகனத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அவர்கள் பயணம் செய்துள்ளார். அதன்பிறகே நமக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது.
நாட்டின் வளர்ச்சிக்கு இரவு, பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் பிரதமர், வன விலங்குகளை பாதுகாப்பதில் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கக் கூடியவர் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். அதனால்தான், குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வனவிலங்கு பாதுகாப்பு மையத்தை நேரில் சென்று திறந்து வைத்ததோடு, அங்கிருந்த வன விலங்குகளையும் பார்வையிட்டுள்ளார்.

முகேஷ் அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனத்தால் நிறுவப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்கு 'வந்தாரா' (Vantara) என பெயர் சூட்டியுள்ளனர். குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த வனவிலங்கு காப்பம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நேரில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த வனவிலங்கு காப்பகத்தை இனி பொது மக்களும் பார்வையிடலாம். கண்ணாடி சுவர்களுக்கு பின்னால் இருந்து விலங்குகளை பார்வையிடுவதுடன், விருப்பப்பட்டால் சுற்றுலா பயணிகளுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சஃபாரி வாகனங்களிலும் விலங்குகளுக்கு நெருக்கமாக சென்று பார்வையிடலாம்.

இதற்காக, பல்வேறு ஆஃப்-ரோடு ஜீப் வாகனங்கள் வந்தாரா வனவிலங்கு காப்பகத்தில் பயன்படுத்தப்பட உள்ளன. பிரதமர் மோடியும் அவ்வாறு வாகனத்தில் சென்று வனவிலங்குகளை பார்வையிட்டார். பிரதமரின் பயன்பாட்டிற்காக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஒன்று சாஃபரி வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த டிஃபெண்டர் வாகனம் ஆனது முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது ஆகும்.
குறிப்பாக, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு இந்த டிஃபெண்டர் கார் சொந்தமானது என கூறப்படுகிறது. சமீபத்தில் திருமணமான ஆனந்த் அம்பானி எதற்காக இவ்வாறு தனது விலையுயர்ந்த காரை மாற்றிக் கொண்டுள்ளார் என கடந்த சில நாட்களாக கேள்விகள் எழுந்தன. ஏனெனில், சஃபாரி வாகனமாக மாற்றப்பட்ட டிஃபெண்டர் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகின.

காரின் மேற்கூரை முழுவதுமாக நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமான மேற்கூரை ஒன்று நன்கு உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த வாகனத்தில் நின்றுக் கொண்டு கூட பயணம் செய்யலாம். பயணிகள் பிடித்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கம்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டிஃபெண்டர் வாகனம் மட்டுமின்றி, ஃபோர்ஸ் மற்றும் இசுஸு பிக்-அப் டிரக் வாகனத்திலும் வந்தாராவை பிரதமர் பார்வையிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த டிஃபெண்டர் காரை இவ்வாறு சஃபாரி வாகனமாக மாற்றியதை இதற்குமுன் நாங்கள் பார்த்ததில்லை. அதுமட்டுமில்லாமல், வனவிலங்கு காப்பகத்தில் டிஃபெண்டர் போன்ற சொகுசு காரை பயன்படுத்துவதையும் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம். வந்தாராவை பார்வையிட வரும் பெரும் செல்வந்தர்களுக்கு இந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட டிஃபெண்டர் வாகனம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









