பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்கு சென்ற போது மலையேற்றத்திற்காக பயன்படுத்தியது இந்த வாகனத்தை தான்..!

Written By:

பிரதமர் மோடி தனது சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு போலரிஸ் ஆஃப் ரோடிங் வாகனத்தை பயண்படுத்தியுள்ளார்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் இந்தியாவில் பிரத்யேகமான ஆஃப்ரோடு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

இவை மலை முகடுகள், காடுகள், பாலைவனப் பரப்பு என கடின நிலப்பரப்புகளிலும் மிக அனாயசமாக கடப்பதால் ஆஃப் ரோடிங் வாகனப் பிரியர்கள் மத்தியில் போலரிஸ் வாகனங்களுக்கு நல்ல வரவேற்று இருந்து வருகிறது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

இந்நிலையில் இமயமலைத்தொடரில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் புகழ் பெற்ற கேதர்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி சுவாமி தரிசனத்திற்காக செல்ல தீர்மானித்தார்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

குளிர்காலத்தை முன்னிட்டு, கேதார்நாத் சிவன் கோவில் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மூடப்பட்டது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

குளிர்கால விடுமுறை முடிவடைந்ததை அடுத்து, கடந்த புதன்கிழமை அன்று கேதார்நாத் சிவன் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. முதல் பூஜையில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல தீர்மானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றான கேதார்நாத் சிவன் கோயில் இமயமலை தொடரில் அமைந்துள்ளது. பாண்டவர்களால் கட்டப்பட்டு, ஆதிசங்கரரால் இக் கோயில் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

தனி ஹெலிகாப்டரில் உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் ஆகியோருடன் சென்ற பிரதமர், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலி பேடில் தரையிறங்கினார்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

அங்கிருந்து பிரதமரும், உடன் சென்றவர்களும் போலரில் ஆஃப் ரோடிங் வாகனத்தில் கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

இக்கோயிலில் கடந்த 1989-ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் வழிபாடு நடத்தினார். 28 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் ஒருவர் கேதார்நாத் கோயிலுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

3584 மீட்டர்கள் உயரம் கொண்ட கேதார்நாத் கோவிலை அடைய உள்ள மலைப்பாதை மிகவும் செங்குத்தாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது.

 கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

பெரும்பாலும் இந்த பாதையை கடக்க குதிரைகளே பயன்படுத்தப்படும், ஆனால் தற்போது சிறந்த ஆஃப் ரோடிங் வாகனமான போலரிஸ் பயன்படுத்தப்படுகிறது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

பிரதமர் பயன்படுத்தியது போலரிஸ் ரேஞ்சர் 6*6 800 ஈஎஃப்ஐ என்ற வாகனமாகும். இவை 4 வேரியண்டுகளில் கிடைக்கிறது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

போலரிஸ் ரேஞ்சர் 6*6 வாகனமானது 907 கிலோ சுமையை இழுத்துச்செல்லும் அளவுக்கு வலிமை பெற்றதாகும்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

இந்த வாகனத்தின் பின்பக்க கார்கோ பகுதியினால் 567 கிலோ எடையை சுமக்க முடியும்.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

வலிமைமிக்க இந்த போலரிஸ் ரேஞ்சர் 6*6 வாகனத்தில் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 800சிசி உள்ளது. இது அதிகபட்சமாக 40 பிஹச்பி ஆற்றலை வழங்கவல்லது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

இதில் 6 வீல்கள் உள்ளன. இந்த போலரிஸ் ரேஞ்சர் வாகனம் 6 வீல் டிரைவ் கொண்டது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30.4 செண்டி மீட்டர் ஆக உள்ளது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

கடந்த 2013ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது.

கேதார்நாத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியது இந்த வாகனம் தான்..!

இதன் காரணமாக வெள்ள பாதிப்புகளில் இருந்து சீர் செய்வதற்காக கேதார்நாத் கோவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about PM Modi used polaris ranger off roading vehicle on kedarnath temple visit.
Story first published: Friday, May 5, 2017, 16:49 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark